புதிய 3 ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 & 7ம்-ஜென் ஐபாட் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

|

கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரை அரங்கில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவன நிகழ்ச்சியில் 3 புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக ஆப்பிள் ஆர்க்காடு கேமிங், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மற்றும் புதிய 7ம் ஜெனெரேஷன் ஐபாட் சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மூன்று அட்டகாசமான புதிய ஐபோன்கள்

மூன்று அட்டகாசமான புதிய ஐபோன்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நேற்று, ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என்ற மூன்று அட்டகாசமான ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட இந்த மூன்று புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள் வரும் செப்டம்பர் 27, 2019 முதல் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள்

ஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள்

  • 6.1' இன்ச் கொண்ட லீகுய்ட் ரெட்டினா டிஸ்பிளே
  • புதிய அன்டோனைஸ்ட் அலுமினியம் மற்றும் டஃப் கிளாஸ் டிசைன்
  • A13 பயோனிக் சிப் பிராசஸர்
  • 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • 12 மெகா பிக்சல் டூயல் லென்ஸ் கேமரா செட்டப்
  • 12 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு மற்றும் வைடு ஆங்கிள் கேமரா
  • 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
  • ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி
  • IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (2 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்)
  • லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்
  • ஐபோன் XR பேட்டரி சேவையைக் காட்டிலும் 1 மணி நேரம் கூடுதலா இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டரின் அசல் புகைப்படம் வெளியிடப்படாததற்குக் காரணம் இதுதான்!

ஐபோன் 11 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஐபோன் 11 ப்ரோ சிறப்பம்சங்கள்

  • 5.1' இன்ச் கொண்ட 2436x1125 பிக்சல் உடைய OLED HDR டிஸ்பிளே
  • ஸ்டைன்லெஸ் டிசைன் மற்றும் கடினமான மேட் கிளாஸ் டிசைன்
  • A13 பயோனிக் சிப் பிராசஸர்
  • 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • 12 மெகா பிக்சல் ட்ரிபிள் லென்ஸ் கேமரா செட்டப்
  • 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் ƒ / 2.4 கேமரா
  • 12 மெகா பிக்சல் கொண்ட வைடு லென்ஸ் ƒ / 1.8 கேமரா
  • 12 மெகா பிக்சல் கொண்ட டெலிஃபோட்டோ ƒ / 2.0 கேமரா
  • 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
  • ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி
  • IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (4 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்)
  • லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்
  • ஐபோன் XS-ஐ விட 4 மணி நேரம் கூடுதல் பேட்டரி சேவை.
ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்

  • 6.1' இன்ச் கொண்ட 2688x1242 பிக்சல் உடைய OLED HDR டிஸ்பிளே
  • ஸ்டைன்லெஸ் டிசைன் மற்றும் கடினமான மேட் கிளாஸ் டிசைன்
  • A13 பயோனிக் சிப் பிராசஸர்
  • 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • 12 மெகா பிக்சல் ட்ரிபிள் லென்ஸ் கேமரா செட்டப்
  • 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் ƒ / 2.4 கேமரா
  • 12 மெகா பிக்சல் கொண்ட வைடு லென்ஸ் ƒ / 1.8 கேமரா
  • 12 மெகா பிக்சல் கொண்ட டெலிஃபோட்டோ ƒ / 2.0 கேமரா
  • 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
  • ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி
  • IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (4 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்)
  • லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்
  • ஐபோன் XS MAX-ஐ விட 5 மணி நேரம் கூடுதல் பேட்டரி சேவை.

பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

ஐபோன் 11 சீரிஸ் விலை விபரம்

ஐபோன் 11 சீரிஸ் விலை விபரம்

  • ஆப்பிள் ஐபோன் 11 இன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.64,900 மட்டுமே
  • ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோவின் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.99,900 மட்டுமே
  • ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் இன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.1,09,900 மட்டுமே
ஐபோன் 11 சீரிஸ் கலர் விபரங்கள்

ஐபோன் 11 சீரிஸ் கலர் விபரங்கள்

ஆப்பிள் ஐபோன் 11 சாதனம் பர்பிள், க்ரீன், மஞ்சள், பிளாக், வைட் மற்றும் ரெட் ஆகிய ஆறு வண்ணங்களில் கிடைக்கும். ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் சாதனங்கள் மிட்நைட் க்ரீன், ஸ்பேஸ் க்ரெய், சில்வர் மற்றும் நியூ கோல்ட் ஆகின நிறங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடைகல்லை படிக்கல்லாக்கி வென்ற இஸ்ரோ தமிழன் சிவனின் சிரிப்பு-சந்திராயன்2ம் சாதனை.!

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5

இத்துடன் இந்நிகழ்ச்சியில், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 (Watch Series 5) மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல், புதிய watchOS 6 அடிப்படையிலான இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 இன் சிறப்பே, இந்தமுறை இதில் எப்போதும் ஆன்னில் இருக்கும் ஆல்வேஸ் ஆன்(Always On) ரெட்டினா டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 சிறப்பம்சங்கள்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 சிறப்பம்சங்கள்

புதிய அம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் புதிய டிஸ்பிளே டிரைவர், இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 இல் வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் ஆன்னில் உள்ள ரெட்டினா டிஸ்பிளே, உங்கள் கைகளை முகம் நோக்கித் திருப்பினால் ஆட்டோமேட்டிக்காக பிரைட்னெஸ்ஸை அதிகரித்துவிடுகிறது. இத்துடன் இதில் முதல் முறையாக மேக்னெட்டிக் காம்பஸ் சேவையுடன், எமெர்ஜென்சி SOS சேவை போன்ற கூடுதல் சேவை அனைத்தும் தடையில்லாமல் 18 மணி நேர பேட்டரி சேவையுடன் வழங்கப்பட்டுள்ளது.

'ஓ மை காட்' இப்படியெல்லாம் யூ.எஸ்.பி டிரைவ் இருக்கிறதா? பார்த்தா கண்டிப்பா வாங்க நினைப்பீங்க!

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 விலை மற்றும் நிறம்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 விலை மற்றும் நிறம்

புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 ஸ்மார்ட் வாட்ச்கள், புதிதான டைட்டானியம் மற்றும் வைட் செராமிக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச்களில் வந்த பிளாக், வைட் மற்றும் கோல்ட் நிறங்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 இன் ஜிபிஎஸ் மாடல் இந்தியாவில் வெறும் ரூ.40,900 என்ற விலையிலும், செல்லுலார் மாடல் ரூ.49,900 என்ற விலையில் செப்டம்பர் 20 முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.

புதிய 7ம்-ஜென் ஐபாட்

புதிய 7ம்-ஜென் ஐபாட்

ஆப்பிள் நிறுவனம் தனது 6 ஆம் ஜெனெரேஷன் ஐபாட் மடலை, புதிய 7ம் ஜெனெரேஷன் ஐபாட் மாடல் மூலம் மேம்படுத்தியுள்ளது, அதை நேற்று அறிமுகமும் செய்துள்ளது. புதிய 7ம்-ஜென் ஐபாட் 10.2' ரெட்டினா டிஸ்பிளேயுடன் கூடிய சக்திவாய்ந்த A10 பியூசன் சிப்செட் உடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய 7ம்-ஜென் ஐபாட் தற்பொழுது புதிய iPadOS சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்னல் மீறலுக்கு அபராதம் இல்லை-விக்ரம் லேண்டருக்கு போலீசார் டுவீட்.!

புதிய 7ம்-ஜென் ஐபாட் விலை

புதிய 7ம்-ஜென் ஐபாட் விலை

இந்த புதிய 7ம்-ஜென் ஐபாட்சாதனத்தில் டச் ஐடி, 8 மெகா பிக்சல் கேமரா, ஸ்மார்ட் கீ-போர்டு, 10 மணி நேரம் நீடித்து நிலைக்கும் பெரிய அளவிலான பேட்டரி மற்றும் ஆப்பிள் பென்சில் போன்ற ஏராளமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. புதிய 7ம்-ஜென் ஐபாட் இந்தியச் சந்தையில் வெறும் ரூ.29,900 என்ற விலையில் செப்டம்பர் 20ம் தேதி முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான ஆப்பிள் பிரைஸ் கட்

அட்டகாசமான ஆப்பிள் பிரைஸ் கட்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 11 சீரிஸ் போன்களுடன், முந்தைய ஆப்பிள் ஐபோன் XR மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 மாடல்களுக்கும் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆப்பிள் ஐபோன் XR மற்றும் ஆப்பிள் ஐபோன் 8, இந்தியச் சந்தையில் வெறும் ரூ.43,241 மற்றும் ரூ.36,022 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

ஆப்பிள் வாட்ச் பிரைஸ் கட்

ஆப்பிள் வாட்ச் பிரைஸ் கட்

அதேபோல் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடலின் ஜிபிஎஸ் மாடல் ரூ.20,900 என்ற விலையிலும், அதன் செல்லுலார் மாடல் ரூ.29,900 என்ற புதிய பிரைஸ் கட் விலையிலும் விற்பனை செய்யப்படும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple iPhone 11 Series Phones Apple Watch Series 5 7th-Gen iPad Do You Know What The Price Is : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more