இதுதான் உலகம்.. புதுசு வந்ததும் பழசை மறக்கும் Apple: நீங்க உஷாரா இருங்க!

|

என்னதான் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு போன்கள் யூஸ் பண்ணாலும், ஆப்பிள் ஐபோன் மீது அனைவருக்கும் மோகம் இருக்கத் தான் செய்யும். காரணம் இது அனைத்து ஸ்மார்ட்போன்களில் இருந்தும் தனித்து இருக்கிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு போன் உலகம் வேறு, ஐபோன் உலகம் வேறு என்பது அனைவரும் அறிந்ததே.

மிக கவனமாக செயல்படும் ஆப்பிள்

மிக கவனமாக செயல்படும் ஆப்பிள்

ஐபோனின் ஒவ்வொரு அம்சமும் பார்த்து பார்த்து கவனமாக வடிவமைக்கப்பட்டதாக இருக்கும். வருடத்திற்கு ஒரு மாடல் ஐபோனை மட்டுமே ஆப்பிள் வெளியிடும். அப்படி அறிமுகம் செய்யும் மாடலில் ஒருசில பிழை இருந்தாலும் அதை செய்தியாகிவிடும். எனவே ஆப்பிள் வடிவமைப்பு மற்றும் அம்சத்தில் மிக கவனமாக செயல்படும்.

ஐபோன் 11 ஐ நிறுத்தும் ஆப்பிள்

ஐபோன் 11 ஐ நிறுத்தும் ஆப்பிள்

ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது மாடலை அறிமுகம் செய்யும் அதே நேரத்தில் பழைய ஐபோன் மாடல் ஒன்றை நிறுத்தும்.

அதன்படி தற்போது ஐபோன் 11 ஐ நிறுத்தக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

புது மாடல் ஐபோன் 14 சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகமாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பழைய மாடல் ஒன்றை நிறுவனம் நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்

ஐபோன் 14 அதிகாரப்பூர்வமாக அடுத்த வாரம் அறிமுகமாக இருக்கிறது. புதிய மாடல் ஐபோன் 14 அறிமுகமாகும் போதும் முந்தைய மாடல் ஐபோன் 13 இன் விலைக் குறைக்கப்படும் என தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 அறிமுகத்துக்கு பிறகு ஐபோன் 11 ஐ நிறுத்தக்கூடும் எனவும் அறிக்கைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் மாடலாகும்.

ரசிகர்கள் இந்த செயலை விரும்பவில்லை

ரசிகர்கள் இந்த செயலை விரும்பவில்லை

இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கக்கூடிய நிகழ்வு என்றாலும், ஆப்பிள் ரசிகர்களில் பெரும்பாலானோர் இதை விரும்பவில்லை என்றுதான் கூறவேண்டும்.

காரணம் இப்படி பழைய ஐபோனை நிறுத்திக் கொண்டே போவதன் மூலம் குறைந்த விலை ஐபோன் என்பதற்கே வாய்ப்பில்லாம் போகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் எடுக்கும் நடவடிக்கை

ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் எடுக்கும் நடவடிக்கை

குபெர்டினோவை தளமாகக் கொண்ட ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது மாடல் ஐபோனை அறிமுகம் செய்யும், அதேசமயத்தில் ஒரு பழைய ஐபோன் மாடல் ஒன்றை நிறுத்தி அறிவிக்கும். அதன்படி இந்த ஐபோன் 11 ஐ ஆப்பிள் நிறுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிகம் விற்பனையாகும் ஐபோன் மாடல்

அதிகம் விற்பனையாகும் ஐபோன் மாடல்

ஆப்பிள் ஐபோன்களில் தற்போது மலிவு விலையில் கிடைக்கும் மாடல் ஐபோன் 11 தான். சமீப காலங்களில் அதிகம் விற்பனையாகும் ஐபோன் மாடல்களில் இதுவும் ஒன்று.

ஐபோன் 11 உடன் அறிமுகமான ஐபோன் எக்ஸ்ஆர் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நடவடிக்கை தொடர்ந்து வந்தாலும், இந்த ஆண்டு நிறுத்துவதாக கூறப்படும் ஐபோன் 11 வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமானது.

தகவலின்படி ஐபோன் 11 நிறுத்தப்படும் பட்சத்தில் ஆப்பிள் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுதல் தரும் விஷயம் இதுதான்

ஆறுதல் தரும் விஷயம் இதுதான்

இதில் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால் ஆப்பிள் ஐபோன் 11ஐ நிறுத்துவதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அப்படி அடுத்த வாரம் ஐபோன் 11 நிறுத்துவதாக அறிவிக்கப்படும் பட்சத்தில், தற்போது ஐபோன் 11 பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் கவலைப்பட தேவையில்லை.

காரணம், அடுத்த சில ஆண்டுகளுக்கு தேவையான ஓஎஸ் அப்டேட்கள் ஐபோன் 11 க்கு கிடைக்கும்.

ஐபோன் 11 வாங்கலாமா?

ஐபோன் 11 வாங்கலாமா?

அதுதான் ஐபோன் 11 க்கான ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று கூறுகிறீர்களே, இதை நிறுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இந்த போனை வாங்கிவிடலாமே என்று சிந்தித்தால். இதுவும் சரியான முடிவு தான்.

ஐபோன் 11 அமேசான், பிளிப்கார் உள்ளிட்ட பல ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.அதேபோல் நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 11 மாடல் ரூ.41,999 முதல் வாங்குவதற்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple Iphone 11 Might be Stop After Iphone 14 Series Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X