ஆப்பிள் ஐபேட் மினி இந்தியாவில் வெளியீடு

Posted By: Staff

ஆப்பிள் ஐபேட் மினி இந்தியாவில் வெளியீடு

பல வதந்திகளைச் சுமந்துகொண்டிருந்த ஆப்பிள் ஐபேட் மினி இப்பொழுது சந்தைகளில் கிடைக்கிறது. ஆம், ஆப்பிள் ஐபேட் மினி இந்தியாவில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் இந்திய சந்தை விலை ரூ.21,900 என ஆப்பிள் நிறுவன அறிக்கை குறிப்புகள் தெரிவிக்கின்றன.

 

ஐபேட் மினியின் WiFi வசதியுடன் கூடிய 16 ஜிபிக்கான விலை ரூ.21,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் 32ஜிபி மற்றும் 64ஜிபிக்கான விலைகள் முறையே, ரூ.27,900 மற்றும் ரூ.33,900.

 

ஐபேட் மினியின் WiFi + தொலைபேசி வசதியுடன் கூடிய 16 ஜிபிக்கான விலை ரூ.29,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே மாதிரியின் 64 ஜிபிக்கான விலை ரூ.41,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

ஐபேட் மினியின் ஆரம்ப விலை ரூ.21,900. ஆனால் இதற்கு போட்டியாகக்கருதப்படும் நெக்சஸ் 7 மற்றும் கேலக்ஸி டேப் 2 ஆகியவைகள் ரூ.20000க்கும் குறைவாகவே விற்கப்படுகின்றன என்பது குறுப்பிடத்தக்கது.

 

இந்த ஐபேட் மினி பல சிறப்பம்சம்களைக் கொண்டுள்ளது. அவற்றின் நுட்பக்கூறுகளை நமது இணையத்தளம் பலமுறை வெளியிட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot