ஆப்பிள் ஐபேட் மினி 6வது ஜென் மாடல் இப்படி தான் இருக்கும்.. வெளியான புது தகவல்..

|

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் ஐபேட் மினி 6வது ஜென் மாடல் குறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய இந்த ஆப்பிள் ஐபேட் மினி 6வது ஜென் மாடலின் ரெண்டர் புகைப்படங்களும் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இந்த ஆப்பிள் ஐபேட் மினி 6வது ஜென் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபேட் மினி 6வது ஜென் மாடல் இப்படி தான் இருக்கும்..

புது ஆப்பிள் ஐபேட் மினி 6வது ஜென் மாடல் குறித்த துணுக்கு விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வெளியாகி வருகின்றது. இருப்பினும், முதல் முறையாக ஆப்பிள் ஐபேட் மினி 6வது ஜென் மாடல் குறித்த டிசைன் விவரங்கள் ரென்டர் வடிவில் வெளியாகி அனைவரின் ஆர்வத்தையும் இன்னும் ஒரு படி அதிகரித்துள்ளது. இருப்பினும் இன்னும் இந்த சாதனம் குறித்த முழு விவரங்கள் வெளியாகவில்லை.

தற்போதைய ரென்டர்கள் நேரடி புகைப்படங்கள், ஸ்கீமேடிக் மற்றும் சி.ஏ.டி. பைல்களை சார்ந்து உருவாகி இருக்கிறது.புதிய ரென்டர்களின் படி இந்த ஆப்பிள் ஐபேட் மினி 6வது ஜென் மாடலின் டிசைன் ஐபேட் வரலாற்றில் முதல் முறையாக 6 ஆண்டுகள் கிழித்து ரி-டிசைன் செய்யப்பட்டுள்ளது. புது 6வது ஜென் ஐபேட் மினி தோற்றத்தில்
பார்ப்பதற்கு ஐபேட் ப்ரோ மற்றும் ஐபோன் 12 சீரிஸ் போன்ற பாக்சி டிசைன் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது .

ஆப்பிள் ஐபேட் மினி 6வது ஜென் மாடலின் டிஸ்பிளே 8.4' இன்ச் முதல் 8.9' இன்ச் அளவு கொண்டதாக இருக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், முன்பை விட சிறிய மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை வைத்து பார்க்கையில் இந்த புதிய மாடலில் ஹோம் பட்டன் நீக்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல், அதற்கு பதிலாக டச் ஐடி பவர் பட்டனுடன் இது வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அதன் WWDC 2021 நிகழ்வை சமீபத்தில் நடத்தியுள்ளது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் சார்ந்த பல புதிய அம்சங்களை நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் நிகழ்வைத் துவக்கி வைத்து புதிய ஐஒஎஸ் 15, ஐபேட் ஒஎஸ் 15, பிரைவசி ப்ரோடெக்ஷன், மேக் ஒஎஸ் மற்றும் வாட்ச் ஒஎஸ் 8 போன்ற பல அம்சங்கள் பற்றி அறிமுகம் செய்து நிகழ்வைச் சிறப்பாக்கினார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple iPad Mini 6th Generation renders show off boxy design : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X