ஆப்பிள் சார்ஜர் வெடித்தது!! பயத்தில் மகள் தந்தை!!

|

சமீப காலமாக ஸ்மார்ட்போன்கள் அடிக்கடி வெடிக்கும் செய்திகளை கேள்விபட்டு வருகிறோம். குறிப்பாக ஆப்பிளின் ஐபோன்கள் மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி மொபைல்கள் வெடித்த சம்பவங்களே அதிகம் நடந்துள்ளன.

இதுபோன்று சம்பவங்கள் எப்படி நடைபெறுகிறது என்று மொபைல் நிறுவனங்களும் குழப்பத்தில் உள்ளனர். வழக்கமாக போன்கள் வெடித்த சம்பவங்களை தான கேள்விபட்டு வந்தோம். இப்பொழுது வெடித்திருப்பது ஸ்மார்ட்போன் அல்ல ஆப்பிள் ஐபேட் சார்ஜர்.

டிம் ஹில்லூலி என்பவரின் வயது 34 ஆகும். இவரது 8 வயது மகளின் ஐபேட் சார்ஜர் தான் வெடித்து. டிம் ஹில்லூலி ஐபேட் சார்ஜரை பிளக்கில் இருந்து கழட்டும் பொழுது அவரது கையிலேயே சார்ஜர் வெடித்து காயத்தை உண்டுபண்ணியது. அவருக்கு அப்பொழுது எலக்ட்ரிக் ஷாக்கும் அடித்ததாம்.

இவர் லிவர்பூலில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் தான் ஐபேடை வாங்கியுள்ளார். வாங்கிய சில நாட்களிலேயே அந்த சார்ஜரில் பிரச்சனை இருக்கிறது என்று அவருக்கு தெரிந்துள்ளது. அதனால் அவர் ஆப்பிள் ஸ்டோரில் இந்த பிரச்சனையை தெரிவித்துள்ளார்.

சார்ஜரில் எந்த பிரச்சனையும் இல்லை என்று வாக்குறுதி அளித்து அவரை அனுப்பிவிட்டனர். ஆனால் டிம் ஹில்லூலி தங்கள் நலனுக்காக வேறு ஒரு புதிய ஒரிஜினல் ஆப்பிள் சார்ஜரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். அந்த சார்ஜர் தான் வெடித்து கையில் காயத்தை உண்டுபண்ணியுள்ளது.

டிம் ஹில்லூலி கூறுகையில், எப்பொழுதும் எனது மகள்தான் சார்ஜரை பிளக்கில் இருந்து கழட்டுவார் இந்த முறையும் அவர் கழட்டி இருந்தால் இந்த எலக்ட்ரிக் ஷாக் குழந்தையின் உயிரையே பறித்திருக்கும் என்று அச்சத்துடன் அவர் கூறினார். இந்த சம்பவம் பற்றிய சில படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

ஆப்பிள் சார்ஜர்

ஆப்பிள் சார்ஜர்

வெடித்த ஐபேட் சார்ஜர்

ஆப்பிள் சார்ஜர்

ஆப்பிள் சார்ஜர்

வெடித்த ஐபேட் சார்ஜரின் ஒரு பகுதி

ஆப்பிள் சார்ஜர்

ஆப்பிள் சார்ஜர்

வெடித்த ஆப்பிள் சார்ஜர்

ஆப்பிள் சார்ஜர்

ஆப்பிள் சார்ஜர்

கையில் ஏற்பட்ட காயம்

மகள் தந்தை

மகள் தந்தை

பயத்தில் மகள் தந்தை

இது போன்று சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது அதை பற்றிய தகவல் அறிய இங்கே கிளிக் செய்யயும்இது போன்று சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது அதை பற்றிய தகவல் அறிய இங்கே கிளிக் செய்யயும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X