இனி ஸ்மார்ட்போன் எதுக்கு? இவ்ளோ கம்மி விலைக்கு Apple-ன் புதிய iPad 2025 மாடல் கிடைக்கும் போது!
ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் அதன் பட்ஜெட் விலை ஐபேட் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. அது ஏ16 சிப் உடனான ஐபேட் (iPad with A16 Chip) மாடல் ஆகும். தற்போது இது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஐபேட் 2025 (iPad 2025) மாடலின் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
ஆப்பிள் ஐபேட் 2025 மாடலின் வைஃபை ஒன்லி வேரியண்ட்டின் இந்திய விலை விவரங்கள்: பேஸிக் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,900 க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,900 க்கும் மற்றும் ஹை எண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,900 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஆப்பிள் ஆப்பிள் ஐபேட் 2025 மாடலின் வைஃபை + செல்லுலார் வேரியண்ட்டின் இந்திய விலை விவரங்கள்: பேஸிக் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,900 க்கும், 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கும் மற்றும் ஹை எண்ட் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கும் வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபேட் 2025 மாடல் ஆனது பிங்க், சில்வர், யெல்லோ மற்றும் ப்ளூ என மொத்தம் 4 கலர்களில் வாங்க கிடைக்கிறது. இந்த ஐபேட்க்கான ஸ்மார்ட் ஃபோலியோ (Smart Folio) மற்றும் மேஜிக் கீபோர்ட் ஃபோலியோ (Magic Keyboard Folio) ஆகியவற்றை முறையே ரூ.8,500 மற்றும் ரூ.24,900 க்கு வாங்க கிடைக்கிறது. இது அனைத்துமே ஆப்பிள் பிராண்டின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்பிள் ஐபேட் 2025 மாடலின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 10.9-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது எம் சீரிஸ் சிப்-ஐ தவிர்த்து, ஆப்பிளின் பழைய 16 சிப்பை பேக் செய்கிறது. இந்த சிப் 4 ஜிபியு கோர்கள் மற்றும் 16 நியூரல் என்ஜின் கோர்கள் கொண்ட 5 கோர் சிபியு ஆகும்.
ஐபேட் 18 ஓஎஸ் கொண்டு இயங்கும் ஆப்பிளின் இந்த பேஸ் ஐபேட் மாடல் ஆனது 3 சேமிப்பக வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவாரசியமாக, பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, இது ஐபாட் ஏர் மாடலில் உள்ளதை போலவே, பின்புறத்தில் 12 எம்பி ரியர் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 12 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது
பேட்டரியை பொறுத்தவரை இது 28.6Whr பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது வைஃபையின் கீழ் 10 மணிநேர பரவுஸிங் பேட்டரி லைஃப்-ஐ உறுதியளிக்கிறது. கூடவே இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோஃபோன்கள், ப்ளூடூத் 5.2 மற்றும் டச் ஐடி ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக ஆப்பிளின் இந்த பேஸ் ஐபேட் மாடலானது 480 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது மற்றும் இது 7 மிமீ தடிமனை கொண்டுள்ளது.
ஐபேட் 2025 மாடலை போலவே ஆப்பிளின் ஐபேட் ஏர் 2025 மாடலும் இந்திய விற்பனையை தொடங்கி உள்ளது. ஐபேட் ஏர் 2025 (iPad Air 2025) ஆனது 11- இன்ச் மற்றும் 13-இன்ச் என்கிற 2 அளவுகளிலும், வைஃபை ஒன்லி மற்றும் வைஃபை + செல்லுலார் வேரியண்ட்களிலும் வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபேட் ஏர் 11-இன்ச் வைஃபை ஒன்லி வேரியண்ட்டின் பேஸிக் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.59,900 க்கும், 11-இன்ச் வைஃபை + செல்லுலார் வேரியண்ட்டின் பேஸிக் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.74,900 க்கும்.. 13-இன்ச் வைஃபை ஒன்லி வேரியண்ட்டின் பேஸிக் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.79,900 க்கும் மற்றும் 13-இன்ச் வைஃபை + செல்லுலார் வேரியண்ட்டின் பேஸிக் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.94,900 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








