இந்தியா வந்தது ஐஓஎஸ் 9 : இது தான் புதுசு..!!
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐஓஎஸ் 9 மொபைல் இயங்குதளத்தினை WWDC 2015 விழாவில் அறிமுகம் செய்தது. இந்த இயங்குதளம் ஐபோன், ஐபேட் டச் மற்றும் அனைத்து ஐபேட் கருவிகளிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
விந்தணுவிற்கு ஐபோன் 6எஸ் இலவசம்..!!
பயனர்களுக்கு ஐஓஎஸ் 9 இயங்குதளத்தின் பீட்டா பதிப்பினை கடந்த சில மாதங்களாக வழங்கி வந்த ஆப்பிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன் புதிய இயங்குதளத்தினை வெளியிட்டது. அதன் படி புதிய அபேடட் பெறும் வாடிக்கையாளர்கள் அதனினை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் உயிரை கொல்லும் : ஆய்வில் தகவல்..!!
இங்கு புதிய அப்டேட் மூலம் ஆப்பிள் நிறுவனம் செய்திருக்கும் மாற்றங்களையும் புதிதாக வழங்கி இருக்கும் சிறப்பம்சங்களையும் தொகுத்திருக்கின்றோம்..

ஸ்ப்லிட் ஸ்கிரீன்
மல்டி டாஸ்கிங் செய்ய ஏதுவாக திரையை பிரித்து பயன்படுத்தும் அம்சம் புசிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது, இதனினை ஸ்லைடு ஓவர் என அழைக்கும் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்கள் திரையை ஸ்வைப் செய்தால் இந்த அம்சத்தினை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

சிரி
கூகுள் நௌ போன்றே இருக்கும் சிரி எனும் புதிய சேவையை ஆப்பிள் நிறுவனம் புதிய யூஸர் இன்டர்ஃபேசில் வழங்கி இருக்கின்றது.

ஆப்பிள் பே
மொபைல் மூலம் பணம் செலுத்த வழி செய்யும் ஆப்பிள் பே முறையையும் புதிய இயங்குதளத்தில் அந்நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

ஆப்பிள் மேப்ஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நேவிகேஷன் மேப்ஸ் செயலியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் கூகுள் மேப்ஸ் செயலியில் இருப்பதை போன்றே நடத்தல், பொது போக்குவரத்து உள்ளிட்ட தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நியூஸ்
நியூஸ் ஸ்டான்ட் அம்சத்தினை எடுத்து விட்டு அதற்கு பதில் நியூஸ் செயலியை ஆப்பிள் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதில் அனிமேஷன், வீடியோ மற்றும் இன்போ கிராபிக்ஸ் அடங்கிய தகவல்களையும் சப்போர்ட் செய்கின்றது.

பேட்டரி
புதிய இயங்குதளம் குறைந்த அளவு சக்தியை பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் லோ பவர் மோடு எனும் புதிய ஆப்ஷனினையும் வழங்கி இருக்கின்றது. இதன் மூலம் கூடுதலாக மூன்று மணி நேரம் வரை கருவியை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்ளவுட் டிரைவ்
முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்ட ஐக்ளவுட் டிரைவ் செயலி வாடிக்கையாளர்களை தாங்கள் பதிவு செய்திருக்கும் ஃபைல்களை செயலியின் மூலம் பயன்படுத்த வழி வகுக்கின்றது.

க்விக்டைப் கீபோர்டு
மல்டி டச் ஜெஸ்ய்டூர் மூலம் வார்த்தைகளை தேர்வு செய்ய வழி வகுக்கும் புதிய அம்சத்தினை ஆப்பிள் நிறுவனம் க்விக்டைப் கீபோர்டு மூலம் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு
தனிப்பட்ட தகவல்கள், புகைப்படம், குறுந்தகவல், மின்னஞ்சல் என பயனர்களின் தகவல்களை ஆப்பிள் ஐடி மூலம் பாதுகாக்கின்றது.

ஆண்ட்ராய்டு மைக்ரேஷன்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருந்து முதன் முதலாக ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது தகவல்களை மிகவும் பாதுகாப்பாக பறிமாற்றம் செய்ய ஐஓஎஸ் 9 இயங்குதளத்தில் புதிய அம்சம் ஒன்றை வழங்கி இருக்கின்றது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications