ஆப்பிள் நிறுவனத்தின் தரமான பாதுகாப்பு iOS 14.5 அப்டேட்.! முழு விவரம்.!

|

ஆப்பிள் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய சாதனமும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஐபோன் மாடல்கள் தனித்துவமான இயங்குதளம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.

ஐஓஎஸ் 14.5 அப்டேட்

ஐஓஎஸ் 14.5 அப்டேட்

மேலும் உலகம் முழுவதும் ஐபோன் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். விரைவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 14.5 அப்டேட் வெளியிட தொடங்கியுள்ளது.

செப்டம்பரில் வெளியாகும் முழு ஒஎஸ் அப்டேட் இல்லை

ஆனாலும் இந்த அப்டேட் ஆனது செப்டம்பரில் வெளியாகும் முழு ஒஎஸ் அப்டேட் இல்லை எனினும், இது அசத்தலான புதிய அம்சங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது முகக்கவசம் அணிந்த படி ஐபோனினை அன்லாக் செய்யும் வசதி, ஏடிடி என்று கூறப்படும் ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பெரன்சி வசதி உள்ளிட்ட சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சாம்சங் இந்தியாவில் அட்டகாச அறிவிப்பு: பிக்-அப் மற்றும் டிராப் சேவை- ஆனா ஸ்மார்ட்போன், டேப்லெட்களுக்கு மட்டுமேசாம்சங் இந்தியாவில் அட்டகாச அறிவிப்பு: பிக்-அப் மற்றும் டிராப் சேவை- ஆனா ஸ்மார்ட்போன், டேப்லெட்களுக்கு மட்டுமே

கொண்டுவந்துள்ள இந்த புதிய

ஆப்பிள் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய அப்டேட்-இல் முக்கிய அம்சமாக ஏடிடி இருக்கிறது. அதாவது இந்த அம்சம் சாதனத்தில் செயலிகள் பயனர் விவரங்களை சேகரிக்கும் முன்பு அவர்களின் அனுமதியை கேட்க வழி செய்கிறது. எனவே பாதுகாப்பு நிறைந்த அம்சமாக இது பார்க்கப்படுகிறது. பின்பு இந்த குறிப்பிட்ட அம்சம் மட்டும் விளம்பர வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும் என்று பேஸ்புக் நிறுவனம்கருத்து தெரிவித்துள்ளது.

ற்றங்களுக்கு அனுமதி

அதேபோல் புதிய மாற்றங்களுக்கு அனுமதி அளிக்காத செயலிகள் நீக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏப்ரல் 26-ம் தேதிக்கு பின்பு சமர்பிக்கப்படும் செயலிகள் ஏடிடி திட்டத்திற்கு ஆதரவளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

 சீரிஸ் எக்ஸ் கண்ட்ரோலர்களுக்கான  சப்போர்ட்

மேலும் இந்த ஐஒஎஸ் 14.5 அப்டேட் ஆனது டூயல் சிம் 5ஜி, 200-க்கும் அதிகமான புதிய எமோஜிகள், புது வடிவமைப்பில் தடுப்பூசி எமோஜி, சிரி சேவையில் புதிய குரல்கள், நாம் விரும்பும் மியூசிக் பிளேயரை தேர்வு செய்யும் வசதி, பிஎஸ்5, எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் கண்ட்ரோலர்களுக்கான
சப்போர்ட் உள்ளிட்ட சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐபோன் மாடல்களில் இதே தொழில்நுட்ப வசதி இடம்பெறு

மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான ஐபோன் 13 சாதனத்தின் தகவல்களைப் பார்ப்போம். இப்போது பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் OLED தொழில்நுட்ப வசதி இடம்பெறுகிறது. எனவே விரைவில் வெளியாகும் புதிய ஐபோன் மாடல்களில் இதே தொழில்நுட்ப வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிது.

ஐபோன் 13 ப்ரோ மேக்

இதுதவிர புதிய ஐபோன் 13 மாடல்களின் உறுதியான மேக்சேப் மேக்னட்கள் வழங்கப்படும் என்றும் நட்சத்திரங்களை பார்த்ததும் ஆஸ்ட்ரோ மோட் வசதியை தானாக ஆன் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 தொடரின் கீழ் 4 மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த 4 மாடல்களின் பெயர்களை பொறுத்தவரை, ஐபோனி 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என்று கூறப்பட்டுள்ளது.

 இந்த கசிவுகள் (ஆன்லைனில் வெளியா

குறிப்பாக இந்த கசிவுகள் (ஆன்லைனில் வெளியான தகவல்) அனைத்தும் மிகவும் ஆரம்ப கால லீக்ஸ் தகவல்கள் தான் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

Best Mobiles in India

English summary
Apple iOS 14.5 update coming with Face ID Mask feature: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X