மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதி ஐஒஎஸ் 13.6 மற்றும் ஐபேட்ஒஎஸ் 13.6-ல் அறிமுகம்.!

|

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் ஐஒஎஸ் இயங்குதளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என்றதான் கூறவேண்டும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதி: ஐஒஎஸ் 13.6 மற்றும் ஐபேட்ஒஎஸ் 13.6.!

அதன்படி ஆப்பிள் நிறுவனம் தற்போது ஐஒஎஸ் 13.6 மற்றும் ஐபேட்ஒஎஸ் 13.6 இயங்குதளத்தை வெளியிட்டு உள்ளது. குறிப்பாக புதிய ஐஒஎஸ் வெர்ஷன் ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் அதன்பின் வெளியான புதிய ஐபோன் மாடல்களில் டிஜிட்டல் கார் கீ அம்சம் மூலம் கார்களை அன்லாக்,லாக் மற்றும் ஸ்டார்ட் போன்ற அம்சங்களை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதி: ஐஒஎஸ் 13.6 மற்றும் ஐபேட்ஒஎஸ் 13.6.!

அதாவது ஆப்பிள் கார் கீஸ் அம்சம் தற்சமயம் பிஎம்டபிள்யூ நிறுவன மாடல்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. பின்பு இதனுடன் ஆப்பிள் நியூஸ் மற்றும் ஆப்பிள் நியூஸ் பிளஸ் அமெரிக்க பயனர்களுக்கு ஆடியோ ஸ்டோரி, அப்டேட்கள் தானாக டவுன்லோட் செய்யப்பட வேண்டுமாஎன்பதை தேர்வு செய்யும் வசதி உள்ளிட்டவை புதிய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஹெல்த் ஆப் யுஐ சிம்ப்டம்ஸ் எனும் புதிய அம்சம் கொண்டிருக்கிறது, இது பயனர்கள் காய்ச்சல், குளிர், தொண்டை கரகரப்பு,இருமல் வருவது போன்ற அறிகுறிகளை பதிவிட்டு அவற்றை மூன்றாம் தரப்பு செயலிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதி: ஐஒஎஸ் 13.6 மற்றும் ஐபேட்ஒஎஸ் 13.6.!

மேலும் வாட்ஸ்ஒஎஸ் 6.2.8 வெர்ஷனிலும் டிஜிட்டல் கார் கீஸ் அம்சம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களில் செயல்படுத்த உள்ளது. பின்பு இதனுடன் இசிஜி ஆப்,ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இதய துடிப்பில் மாற்றத்தை தெரியப்படுத்தும் நோட்டிஃபிகேஷன் பஹ்ரைன்,

பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்காவில் வழங்கப்படுகிறது. குறிப்பாக புதிய அப்டேட்கள் அனைத்தும் ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதி: ஐஒஎஸ் 13.6 மற்றும் ஐபேட்ஒஎஸ் 13.6.!

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி நிறுவனத்தைத் துவங்கவுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனம் கூடுதலாக 100 கோடி டாலர் முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளது. 100 கோடி டாலர் முதலீடு செய்து இந்தியாவில் உற்பத்தியை விரிவுபடுத்த ஆப்பிள் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியை இந்தியாவிலிருந்து தொடர நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால் சென்னைக்கு அடுத்து உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் 100 கோடி டாலர் முதலீடு செய்யப்படவுள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள உற்பத்தி நிறுவனத்தில் ஆப்பிள் எக்ஸ்.ஆர் ஐபோன்கள் தயாரிக்கப்படும் என்ற கூடுதல் தகவலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple iOS 13.6 and iPadOS 13.6 Rolled Out: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X