செயற்கை நுண்ணறிவு அனுபவத்தை வழங்கும் ஐஒஎஸ் 11.3 பீட்டா.!

By Prakash
|

ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி இப்போது ஐஒஎஸ் இயங்குதளத்திற்கு புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, இதில் புதிய அனிமோஜிக்கள் மற்றும் புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆப்பிள் நிறுவனம் கொண்டுவந்துள்ள ஐஒஎஸ் 11.3 பீட்டா பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது, இதில் இடம்பெற்றுள்ள மிகமுக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் செயற்கை நுண்ணறிவு அனுபவத்தை வழங்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

 பீட்டா:

பீட்டா:

இப்போது முதற்கட்டமாக பீட்டா முறையில் வெளியிட்டு அதன்பின் பொதுமக்களுக்கு ஐஒஎஸ் 11.3 பதிப்பில் வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பிஸ்னஸ்:

பிஸ்னஸ்:

இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் நேரடியாக பிஸ்னஸ் சாட் செய்யும் வகையில் மெசேஜ்களில் வியாபார ரீதியிலான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மியூசிக் :

மியூசிக் :

இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் விளம்பர இடையூறின்றி மியூசிக் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும், அதன்பின்பு புதிய வீடியோக்களை வெவ்வேறு பிரிவுகளில் இருந்தும் தொடர்ந்து பார்க்க வசதி செய்து தரப்பட்டுள்ளது.

 அனிமோஜிக்கள்:

அனிமோஜிக்கள்:

தற்சமயம் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு இந்த அப்டேட் அம்சத்தில் நான்கு அனிமோஜிக்கள் வழங்கப்படுள்ளது, அவை கரடி,டிராகன்,மண்டை ஓடு மற்றும் சிங்கம் உள்ளிட்டவை ஆகும்.

ஐபோன் 5எஸ்:

ஐபோன் 5எஸ்:

ஐபோன் 5எஸ் மாடல் மற்றும் அதற்கு பின்பு வெளிவந்த ஆப்பிள் ஐபோன் சாதனங்களுக்கு இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் போன்ற அனைத்து ஆப்பிள் சாதனங்களுக்கும் ஐஒஎஸ் 11.3 அப்டேட் கிடைக்கும்.

மொபைல் லொகேஷன் :

மொபைல் லொகேஷன் :

இதில் புதிய வீடியோ க்ரூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட முக்கிய செய்திகள் வழங்கப்பட்டுள்ளது, அதன்பின்பு புதிய அம்சங்களுடன் மொபைல் லொகேஷன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Apple iOS 11 3 to bring new Animoji updates to Messages ARKit; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X