ஆப்பிள் வாட்ச் வெச்சுருந்த ஸ்ட்ரெஸ் இருக்காதாம்! அப்படியொரு சென்சார் இருக்கு! எப்படி சாத்தியம்?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில் (Apple WWDC 2023) ஒட்டுமொத்த ஸ்மார்ட்வாட்ச்களுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கும் வகையில் ஆப்பிள் வாட்ச்ஓஎஸ் 10 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஆப்பிள் வாட்ச் ஆப்களும் (Apple Watch Apps) ரீடிசைன் செய்யப்பட்டுள்ளன.
சொல்லப்போனால், அனைத்து ஆப்களும் புதிய அவதாரம் எடுத்தது போல அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இந்த வாட்ச்ஓஎஸ் 10 (watchOS 10) புதிய வாட்ச் பேஸ்கள் ( Watch Faces), மெண்டல் ஹெல்த் டிராக்கிங் (Mental Health Tracking) என வாட்ச்ஓஎஸ் 10 பின்னி எடுக்கிறது. ஆப்பிள் பிரியர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்த வாட்ச்ஓஎஸ் 10 வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கிறது என்பதை விரிவாக தெரிந்துகொள்வோம். இந்த வாட்ச்ஓஎஸில் ஸ்மார்ட் ஸ்டாக் (Smart Stack) டிசைன் மேம்படுத்தப்பட்டுள்ளதால் விட்ஜெட்டுகளில் (Widgets) அடிக்கடி பயன்படுத்தும் டாஸ்க் இடம்பெறும். புதிதாக பெலேட்டி (Palette), ஸ்னூபி (Snoopy) என்னும் இரண்டு வாட்ச் பேஸ்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வொர்க்அவுட் (Workout) பயன்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.அதாவது, ப்ளூடூத் எனேபிள்ட் சைக்கிளிங் அசெஸ்சரிஸ் (Bluetooth-Enabled Cycling Accessories) உடன் ஆப்பிள் வாட்ச் பயன்படுத்தும்போது, பவர் மீட்டர்ஸ் (Power Meters), ஸ்பீடு மீட்டர்ஸ் (Speed sensors), கேடென்ஸ் (Cadence Sensors) உள்ளிட்டவை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜிபிஎஸ் (GPS), மேப்ஸ் (Maps) பயன்பாட்டிலும் மலையேறுபவர்களுக்கு ஏதுவாக முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் எவ்வளவு தூரம் மேலே சென்றீர்கள், எவ்வளவு தூரம் கீழே சென்றீர்கள் என்பதை கண்காணிக்க முடியும். இந்த வாட்ச்ஓஎஸ் 10, மெண்டல் ஹெல்த் டிராக்கிங் என்னும் முக்கியமான ஒரு அசம்சத்தை கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் உங்களது மூட் (Mood) மற்றும் எமோஷன் (Emotion) டேட்டாக்களை சேமிக்க முடியும். அதுதொடர்பான நோட்டிபிக்கோஷன்களை கொண்டு மெண்டல் ஹெல்த்தை சரிவர கவனித்துக்கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக ஆப்ஸ் இன்டர்பேஸ் மாற்றப்பட்டுள்ளதால், வெதர் (Weather), ஸ்டாக்ஸ் (Stocks), ஹோம் (Home), மேப்ஸ் (Maps), மெசேஜ் (Messages), வேர்ல்ட் கிளாக் (World Clock) உள்ளிட்ட அனைத்து ஆப்களும் டிஸ்பிளே பயன்படுபாட்டுக்கு ஏற்றவாது மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, புதிதாக விட்ஜெட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஹோம் ஸ்கிரீனை மறைக்காது, ஸ்மார்ட் ஸ்டாக்கில் இடம்பெறும். வாட்ச்ஓஎஸ் 10 மூலம் டிஸ்பிளே டைம் (Display Time) நிறங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஓஎஸ் லாஸ்ட் செல்லூலார் கனெக்சன் வேபாயின்ட் (Last Cellular Connection Waypoint) மற்றும் லாஸ்ட் எமர்ஜென்சி கால் வேபாயின்ட் (Last Emergency Call Waypoint) கொண்டுள்ளது.
இதன் மூலம் தொலைந்து போனாலோ, அசாதாரணமாக ஏதாவது ஏற்பட்டாலோ எளிதாக தகவல்கள் உதவிக்காக பரிமாற்றப்படும். இப்படி பல்வேறு அம்சங்களை வாட்ச்ஓஎஸ் 10 கொண்டுள்ளது. இதனால் ஆப்பிள் பிரியர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








