Home
News

இன்டர்நெட் இல்ல.. வை-பை இல்ல.. நேரடியாக சாட்டிலைட் மூலம் மெசேஜ்.. ஆப்பிள் யூசர்களுக்கு வருது மெகா அப்டேட்!

இன்டர்நெட் வேண்டாம்.. வை-பை வேண்டாம்.. ஐபோன் யூசர்கள் இனிமேல் மெசேஜ் அனுப்ப முடியும். ஐஓஎஸ் 18 அப்டேட்டில் (iOS 18 Update) சாட்டிலைட் மேசேஜ் பீச்சர் வருகிறது. கடல் நடுவே பயணம் செய்தாலும் சரி, மலைத்தொடர்களில் டிரெக்கிங் செய்தாலும் சரி, உங்களது கனெக்டிவிட்டியை ஆப்பிள் (Apple) நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த சாட்டிலைட் மெசேஜ் பீச்சர் எப்படி வேலை செய்கிறது? சிக்னல் இல்லாத பகுதிகளிலும் இது வேலை செய்யுமா? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

2024ஆம் ஆண்டுக்கான ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில் ஐஓஎஸ் 18 (iOS 18) அறிமுகம் செய்யப்பட்டது. ரீடிசைன்டு போட்டோஸ் ஆப் (Redesigned Photos App), ரீடிசைன்டு கன்ட்ரோல் சென்டர் (Redesigned Control Center), ஆப்பிள் இன்டலிஜன்ஸ் (Apple Intelligence), சாட்டிலைட் மெசேஜ் (Satellite Message) போன்ற பல்வேறு அப்டேட்கள் மற்றும் பீச்சர்கள் அதில் களமிறங்கின.

இன்டர்நெட் இல்ல.. வை-பை இல்ல.. சாட்டிலைட் மூலம் மெசேஜ் செய்யலாம்!

இதில் சாட்டிலைட் மெசேஜ் பீச்சர் (Satellite Message Feature) ஒட்டுமொத்த ஐபோன் யூசர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. ஏனென்றால், இந்த பீச்சர் மூலம் இன்டர்நெட் மற்றும் வை-பை கனெக்டிவிட்டி இல்லாமலேயே மெசேஜ் செய்து கொள்ளலாம். ஆகவே, ஐபோன் யூசர்கள் அருகில் இருக்கும் சாட்டிலைட்களின் கனெக்டிவிட்டியை எளிதாக பெற்று கொள்ளலாம்.

ஏற்கனவே இருக்கும் டைனாமிக் ஐலேண்ட் பீச்சர் (Dynamic Island Feature) மூலம் சாட்டிலைட் கனெக்சன் ஸ்டேட்டஸ் காண்பிக்கப்படும். ஆகவே, வழக்கமான ஐமெசேஜ் (iMessages) மூலமே தகவலை இன்டர்நெட் மற்றும் வை-பை கனெக்டிவிட்டி இல்லாமலேயே பரிமாறிக் கொள்ளலாம். வழக்கமாக நாம் அனுப்பும் மெசேஜ்களுக்கு கூட இன்டர்நெட் வேண்டாமே என்று உங்களுக்கு தோன்றலாம்.

அதாவது, இந்த சாட்டிலைட் மெசேஜ் பீச்சர் மூலம் சிக்னல் இல்லாத பகுதியிலும் மெசேஜ்களை செய்து கொள்ளலாம். பொதுவாக எஸ்எம்எஸ் மற்றும் கால் செய்வதற்கு சிக்னல் இருக்க வேண்டும். இல்லையென்றால், கால் அல்லது எஸ்எம்எஸ் செய்ய முடியாது. ஆனால், இந்த பீச்சரானது, அதுபோன்ற நேரத்தில் அருகில் உள்ள செயற்கைக்கோளுடன் இணைக்க வழிவகை செய்துகொடுக்குகிறது.

இன்டர்நெட் இல்ல.. வை-பை இல்ல.. சாட்டிலைட் மூலம் மெசேஜ் செய்யலாம்!

டைனாமிக் ஐலேண்ட் பீச்சரில் இதை தெரிந்து கொள்ளலாம். இந்த சாட்டிலைட் கனெக்டிவிட்டயை பெற்ற பிறகு ஐமேசேஜ் மற்றும் எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். வழக்கமாக அனுப்பும் டெக்ஸ்ட் முதல் எமோஜிகள் வரையில் அனுப்பலாம் மற்றும் பெறலாம். இதற்கு உங்களிடம் ஐபோன் இருந்தால் மட்டுமே போதும் எந்தவொரு மாற்று நெட்வொர்க்கும் வேண்டாம்.

ஆகவே, செயற்கைக்கோளுடன் எப்போதும் கனெக்டிவிட்டி கிடைப்பதால், உங்களது தகவல்தொடர்பு எப்போதும், எங்கும் துண்டிக்கப்படாது. மலை தொடர்களில் டிரெக்கிங் அல்லது பயணம், கடல் கடந்து பயணம் போன்ற நேரத்தில் எந்த பகுதியில் இருந்தும், அருகில் இருக்கும் சாட்டிலைட் மூலம் உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கலாம்.

சாட்டிலைட் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டாலும், தனியுரிமை பாதுகாக்கப்படும் என்று ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வழக்கமாக ஆப்பிள் யூசர்களுக்கு கிடைக்கும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் இந்த சாட்டிலைட் பீச்சருக்கும் பொருந்தும். ஆகவே, இந்த பீச்சர் முந்தைய நெட்வொர்க்குகளை தூக்கி சாப்பிடும்படி இருப்பதால், மிகப்பெரும் வரவேற்பு பெறலாம்.

ஏனென்றால், இந்த பீச்சர் அடம்பரமாக தெரிந்தாலும், நெட்வொர்க் கிடைக்காத பகுதிகளில் உதவி தேவைப்படும் போதும், அவசரமாக யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் போதும், இதன் மூலம் எளிதாக தகவலை தெரிவித்து விடலாம். இது பெரும்பாலான இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும் பீச்சராகவே இருக்கிறது.

ஆகவே, ஐஓஎஸ் 18 அப்டேட் வரும்போது, இந்த சாட்டிலைட் மேசேஜ் பீச்சரை ஐபோன் யூசர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வரும் காலங்களில் இன்டர்நெட். வை-பை மற்றும் சிக்னல் இல்லையென்றாலும், ஐபோன் யூசர்கள் எளிதாக தங்களது தகவல்களை பரிமாறி கொள்ள போகிறார்கள். இது சாம்சங் போன்ற மற்ற முன்னணி நிறுவனங்களிலும் வரலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple introduced Satellite Messages Feature For iOS 18 To Send Messages without Internet And Wi-Fi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X