Home
News

ஆடிப்போன WWDC 2025 நிகழ்வு.. Apple-ன் புதிய iOS 26 அறிமுகம்.. அந்த Liquid Glass Design தான் அல்டிமேட்!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2025) ஐஓஎஸ் 26 (iOS 26) வெளியிடப்பட்டது. ஆப்பிள் நிறுவனம் இது விரைவில் ஐபோன்களில் கிடைக்கும் என்றும், இது பல புதிய அம்சங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை கொண்டுவரும் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளது

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ் 26 வழியாக அதன் ஓஎஸ்-இன் வடிவமைப்பு மொழியில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் லிக்விட் கிளாஸ் (Liquid Glass) என அழைக்கப்படும் ஒரு புதிய யுஐ-ஐ (UI) அறிமுகப்படுத்தியுள்ளது, இது கண்ணாடி போன்ற ஐகானோகிராபி மற்றும் பிற கூறுகளை தொகுக்கிறது.

ஆடிப்போன WWDC 2025 நிகழ்வு.. Apple-ன் புதிய iOS 26 அறிமுகம்!

ஐஓஎஸ்-ன் இந்த சமீபத்திய பதிப்பு, இந்த ஆண்டு இறுதியில் தகுதியான ஐபோன் மாடல்களில் வெளியிடப்படும் போது, ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (​​Apple Intelligence) அம்சங்கள் மற்றும் போன் ஆப்களில் ஒருங்கிணைந்த இன்டர்பேஸ், புதுப்பிக்கப்பட்ட கேமரா ஆப் லேஅவுட் (Camera app layout), மெசேஜஸ்-ல் டைப் இண்டிகேட்டர்ஸ், புதிய கார்பிளே (CarPlay) அம்சங்கள் மற்றும் பலவற்றை கொண்டுவரும்.

ஐஓஎஸ் 26 க்கு இணக்கமான மாடல்கள் என்னென்ன? ஐபோன் 11 (iPhone 11) மற்றும் அதற்கு பிந்தைய ஐபோன் மாடல்களுக்கு ஐஓஎஸ் 26 ப்ரீ ஓவர்-தி-ஏர் (OTA) மென்பொருள் புதுப்பிப்பாக வழங்கப்படும் என்று ஆப்பிள் கூறுகிறது. இருப்பினும், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள் ஆனது ஐபோன் 16 சீரீஸ் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ரிஜிஸ்டர் செய்த ஆப்பிள் டெவலப்பர்கள் தங்கள் டிவைஸ்களில் ஐஓஎஸ் 26-ஐ பதிவிறக்கம் செய்து புதிய அம்சங்களைச் சோதிக்க தொடங்கலாம். அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் அதன் பீட்டா மென்பொருள் திட்டத்தின் கீழ் பப்ளிக் பீட்டாவை வெளியீடும்.

ஐஓஎஸ் 26 இல் விஷூவல் மேம்பாடுகள்: ஆப்பிளின் மென்பொருள் பொறியியலின் மூத்த துணைத் தலைவர் (SVP) ஆன கிரெய்க் ஃபெடெரிகியின் கூற்றுப்படி, ஐஓஎஸ் 26 இல் உள்ள லிக்விட் கிளாஸ் என்பது அதன் சுற்றியுள்ள காட்சி கூறுகளை பிரதிபலிக்கும் மற்றும் ஒளிவிலகல் செய்யும் ஒரு புதிய ஒளிஊடுருவக்கூடிய பொருளாகும்.

இது ஓஎஸ் இல் உள்ள கட்டுப்பாடுகள், வழிசெலுத்தல், பயன்பாட்டு ஐகான்கள் மற்றும் விட்ஜெட்கள் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்த புதிய வடிவமைப்பு மொழி ஆனது ஹோம் மற்றும் லாக் ஸ்க்ரீன்களுக்கு புதிய தனிப்பயனாக்க விருப்பங்களை கொண்டுவருகிறது, இதனால் பயனர்கள் பயன்பாட்டு ஐகான்கள் மற்றும் விட்ஜெட்களை புதிய தெளிவான தோற்றத்துடன் கஸ்டமைஸ் செய்ய முடியும்.

ஐபோனின் லாக் ஸ்க்ரீனில், டைம் விட்ஜெட் இப்போது ஒரு படத்தில் உள்ள ப்ரீ ஸ்பேஸ்-க்கு ஏற்ப மாறி, தானாகவே சுருங்கி விரிவடைகிறது. இதற்கிடையில், பயனர்கள் தங்கள் ஐபோனை நகர்த்தும்போது தோன்றும் ஒரு 3டி விளைவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐஓஎஸ் 26 ஆனது கேமரா ஆப்பில் நெறிப்படுத்தப்பட்ட காட்சிகளுக்கான பிரத்யேக டேப், சஃபாரியில் பாயும் வெப் பேஜ்கள் மற்றும் ஆப்பிள் மியூசிக், நியூஸ் மற்றும் பாட்காஸ்ட்கள் போன்ற ஆப்களில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேப் பார் ஆகியவற்றையும் வழங்குகிறது

ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அப்டேட்கள்: கடந்த ஆண்டு ஐபோனில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களை அடிப்படையாக கொண்டு, ஆப்பிள் ஐஓஎஸ் 26 வழியாக அதன் ஏஐ திறன்களை விரிவுபடுத்துகிறது. தற்ப்போது இது நியூஸ், ஃபேஸ்டைம் மற்றும்போன் போன்ற ஆப்களில் ஒருங்கிணைக்கப்பட்ட நேரடி மொழிபெயர்ப்பை வழங்கும்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஆன் டிவைஸ் ஏஐ மாடல்களால் இயக்கப்படும் இந்த அம்சம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ், சீனம் மற்றும் பிற மொழிகளில் டெக்ஸ்ட் மற்றும் ஆடியோவை தானாகவே மொழிபெயர்க்கிறது. கூகுளின் சர்க்கிள்-டு-சேர்ச் அம்சத்திற்கு ஆப்பிளின் மாற்றாக - விஷுவல் இன்டலிஜென்ஸிற்கான அப்டேட்புகள், பயனர்கள் தங்கள் ஸ்க்ரீனில் தற்போது என்ன பார்க்கிறார்கள் என்பது குறித்து சாட்ஜிபிடி-யிடம் கேள்விகளை கேட்க உதவுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Introduced New iOS 26 With Liquid Glass Design and more Upgrades in WWDC 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X