Home
News

Mobile வழியாக லோன் எடுக்காதீர்கள்! எச்சரிக்கும் Apple! தடாலடியாக லோன் ஆப்ஸ்கள் மீது நடவடிக்கை!

ஆப்பிள் சமீபத்தில் இந்தியாவில் உள்ள அதன் ஆப் ஸ்டோரில் இருந்து பல கடன் வழங்கும் ஆப்ஸ்களை நீக்கியுள்ளது. பயனர்கள் மற்றும் ஊடகங்கள் இருவரும் இந்த சேவைகளின் சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குட்படுத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்தியாவில் இருந்து அகற்றியுள்ள பெர்சனல் லோன் ஆப்ஸ்களில் பாக்கெட் கேஷ் (Pocket Kash), வைட் கேஷ் (White Kash), கோல்டன் கேஷ் (Golden Kash) மற்றும் ஓகே ரூபி (OK Rupe) போன்ற பிரபலமான ஆப்ஸ்களை நிறுவனம் அதன் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது.

Mobile வழியாக லோன் எடுக்காதீர்கள்! எச்சரிக்கும் Apple!

இந்த ஆப்ஸ்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்க பிரபலத்தைப் பெற்றுது. இந்த லோன் ஆப்ஸ்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் நிதிப் பிரிவில் முதல் 20 இடங்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நூற்றுக்கணக்கான பயனர் மதிப்புரைகள் இந்த பயன்பாடுகளால் விதிக்கப்பட்ட மூர்க்கத்தனமான கட்டணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இது நுகர்வோர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடனாளிகள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் படி வற்புறுத்துவதற்கு, நெறிமுறையற்ற முறைகளைக் இந்த ஆப்ஸின் பின்னணியியல் இயங்கும் ஊழியர்கள் கையாண்டதாக ஏகப்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இது இந்த மாதிரியான ஆப்ஸ்களின் மேல் இருந்த நம்பிக்கையை கெடுத்து, பயனர்களின் நிலமையை மோசமாக்கியுள்ளது.

சில பயனர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தொடர்புத் தகவல்களுடன் செய்திகளைப் பெறுவதாகப் புகாரளித்தனர். கடன் வாங்கிய பயனர்கள் சரியான நேரத்தில் பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறினால், அவர்களின் கடன் நிலையைத் தங்கள் தொடர்புகளுக்கு வெளிப்படுத்துவதாக அச்சுறுத்த்துவதாகவும் புகார்கள் பதிவாகியுள்ளன. சந்தேகத்திற்கிடமான பெயர்கள் மற்றும் இணையதளங்களைக் கொண்ட தனிநபர்களால் உருவாக்கப்பட்ட பயன்பாடுகள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற ஆப்ஸ்கள் இன்னும் ஏராளமாக ஆப் ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்டோர்களில் நிரம்பி வழிகின்றன என்பதே உண்மை. சில கடன் வழங்குபவர்களிடமிருந்து இன்னும் ஆபத்தான அச்சுறுத்தல்களை மக்கள் தொடர்ந்து பெற்று வருகின்றனர் என்பதே உண்மையாகும். இந்தக் கவலைகளுக்குப் பதிலளிக்கும் நோக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் பல கடன் வழங்கும் ஆப்ஸ்களை தனது தளத்தில் இருந்து நீக்கம் செய்துள்ளது.

இரண்டு நாட்களுக்குள் குறைந்தது அரை டஜன் பயன்பாடுகளை ஆப்பிள் நிறுவனம் உடனடியாக நீக்கியுள்ளது. அப்ளிகேஷன்கள் ஆப்பிள் டெவலப்பர் புரோகிராம் உரிம ஒப்பந்தம் மற்றும் வழிகாட்டுதல்களை மீறியதாக தொழில்நுட்ப நிறுவனமான டெக் க்ரஞ்சிடம் கூறியுள்ளது. இந்த லெண்டிங் ஆப்ஸ் ஒழுங்குமுறையை சரியாக பின்பற்றாதினால், இதன் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

லோன் வாங்கியவர்களை உடனடியாக பணத்தை திரும்ப தரக் கூறி, பாதுகாப்பற்ற கடன்களை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிக வட்டி விகிதங்களுடன் வாங்கி பயனர்களை இந்த ஆப்ஸ்கள் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலைமை குறிப்பாக பாரம்பரிய நிதி சேவைகளை அணுக முடியாத பின்தங்கிய நபர்களை பாதிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, ஆப்பிளின் நடவடிக்கை பாதுகாப்பான பயனர் அனுபவத்தை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. ஏமாற்ற முயற்சிக்கும் ஆப்ஸ்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு எதிராக கடுமையான விதிகளை ஆப்பிள் தொடர்ந்து பராமரிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple India removes loan apps from the App Store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X