முன் பணம் செலுத்தாமல் ஐபோன்களை வாங்க முடியும் என்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்

By Meganathan
|

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் மாடல்களை முன் பணம் செலுத்தாமல் வாங்கும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது. ஆனால் அதன் பின் இது குறித்து எந்த தகவலும் இல்லை.

[2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கருவிகள்]

தற்சமயம் இந்த செய்தி உண்மையாகும் நிலையில் உள்ளதாக தெரிகிறது. முன் பணம் செலுத்தாமல் ஐபோன்களை விற்பனை செய்ய ஆப்பிள் இந்தியா முன்வந்துள்ளதாகவும் இந்த திட்டம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இணையங்களில் மட்டும் தான் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.

முன் பணம் செலுத்தாமல் ஐபோன்களை வாங்க முடியுமா

எனினும் ரிலையன்ஸ் இணையத்தில் தற்சமயம் வரை ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இந்த திட்டத்திற்கான ஆரம்பகால பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

[2015 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்]

முன் பணம் செலுத்தாமல் ஐபோன் 6 வாங்க 24 மாதங்களுக்கு ரூ.3,099 என்றும் ஐபோன் 6 ப்ளஸ் 24 மாதங்களுக்கு ரூ. 3,599 செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஐபோன் 6 ரூ.74,376, மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் ரூ.86,376 என்றும் விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple India Hints at Zero Down payment Plans for iPhone 6. Reliance Communications' zero down payment plans for the iPhone 6 and iPhone 6 Plus were first reported back in October.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X