APJ Abdul Kalam: டாக்டர்.அப்துல்கலாம்-ஐ கவுரவபடுத்திய ஆப்பிள் நிறுவனம்..
பிறரிடம் இருந்து உத்வேகம் பெற வேண்டும், முன்னோடியாக கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கும் போது, ஒரு பெயர் எப்போதும் நம் நினைவுக்கு வருகிறது என்றால் அது, நம் புகழ் மைந்தன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மட்டுமே. இந்தியாவின் 'ஏவுகணை நாயகன்' என்றும் அழைக்கப்படும் இவர், இந்திய விண்வெளித் திட்டத்தில் செய்த பங்களிப்புகள் ஈடு இணையற்றவை.

நீங்கள் இறக்கைகளுடன் பிறந்தீர்கள்
இந்தியாவின் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆப்பிள் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு சிறிய விளம்பரத்தை பகிர்ந்து கொண்டது. அந்த 54 விநாடி விளம்பரத்தில், ஒரு உரையின் போது கலாம் குழந்தைகளுடன் பகிர்ந்த ஒரு கவிதையை சில குழந்தைகள் வாசிப்பதை காண்பிக்கிறது. ஐபோன் 11 இல் படமாக்கப்பட்ட அந்த வீடியோவில், ஒரு கவிதையை ( ரூமி என்பவர் எழுதியது) கலாமின் குரலுடன் ஒருசேர குழந்தைகள் குழுவாக வாசிப்பது உண்மையில் புல்லரிக்க வைக்கிறது. "நீங்கள் இறக்கைகளுடன் பிறந்தீர்கள். நீங்கள் ஊர்ந்து செல்வதற்காக அல்ல, எனவே அது வேண்டாம். உங்களிடம் இறக்கைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த கற்றுக்கொண்டு பறக்கவும். " என குழந்தைகள் வாசிக்கின்றனர்.

டிஆர்டிஓ
டாக்டர் அப்துல் கலாம் 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11 வது ஜனாதிபதியாக பணியாற்றினார். தொழில்முறையில் ஒரு விண்வெளி பொறியாளரான அவர், இந்தியாவின் டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) உடன் நெருக்கமாக பணியாற்றினார்.

இந்தியாவின் ஏவுகணை மனிதர்
இந்தியாவின் ஏவுகணைகளை அபிவிருத்தி செய்வதிலும், விண்வெளித் திட்டங்களிலும் அவரது உள்ளீடுகளும் அறிவும் முக்கியமானதாக இருந்த நிலையில், இந்தியாவின் ஏவுகணை மனிதர் என புகழப்பட்டார்.

ஐபோன் எக்ஸ்ஆர்
தேசத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, பத்ம பூஷண், பத்ம விபூசன், பாரத் ரத்னா, ஹூவர் பதக்கம், என்எஸ்எஸ் வான் ப்ரான் விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த வீடியோ ஆப்பிள் இந்தியாவின் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில், இது ஆப்பிள் இந்தியாவுடன் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைக் காண்பிக்கிறது. மேலும் இந்தியாவில் அதன் தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பை பார்க்கும் போது இது மிகவும் ஆச்சரியமல்ல.ஆப்பிள் சமீபத்தில் இந்தியாவில் ஐபோன் எக்ஸ்ஆர்களை தயாரிக்கத் தொடங்கி, அவற்றை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

சமீபத்தில் வெளியான கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் அறிக்கையில், ஆப்பிள் இன்னும் 2 சதவிகித சந்தைப் பங்கை மட்டுமே கொண்டிருந்தாலும், 2019 இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமான ஆண்டாக உள்ளது ஐபோன் எக்ஸ்ஆர் விலை வீழ்ச்சியடைந்த பின்னர் ஹாட் கேக்குகளைப் போல விற்பனையாகிறது. இது இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஐபோன் என பெயர்பெற்றுள்ளது.
ஐபோன் 11 கூட அதன் சிறந்த கேமரா மற்றும் பேட்டரி செயல்திறன் காரணயாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications