இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விலை திடீர் உயர்வு: காரணம் இதுதான்!

|

ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களை பார்ப்பது என்பது அரிது. இந்தியாவில் பலவகை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய வகை மாடல் மொபைல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் எத்தனை ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை கையில் வைத்திருந்தாலும், ஐபோன் வைத்திருப்பவர் என்றால் அது தனி மதிப்புதான்.

 ஐபோன் மலிவு விலையில் அறிமுகமா

ஐபோன் மலிவு விலையில் அறிமுகமா

ஐபோன் என்றவுடன் அனைவரும் அதன் விலை 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் தற்போது ஐபோன் விலையும் கணிசமாக குறைக்கப்படுவது என்பது தொடர்ந்து கொண்டே இருந்தது. ஐபோன் எஸ்.இ மாடல் வகை போனானது ரூ.23,999-க்கு அமேசான் இணையத்தில் கிடைக்கும். இதைவிட மலிவு விலையில் புது மாடல் ஐபோன் ஒன்றை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு

2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு

இந்த நிலையில் ஆப்பிள் ஒரு மலிவு விலை ஐபோனை அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. இந்த வதந்திகள் உண்மையானால் ஐபோன் எஸ்.இயின் அடிப்படை வசதி கொண்ட மாடல் போனாக இருக்க வேண்டும். மேக்ரூமோர்ஸின் அறிக்கையின்படி, பட்ஜெட் ஐபோன் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்தது. இந்த புதிய வதந்திகள் பலவற்றுடன் ஒத்துப்போகிறது, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் புதிய பட்ஜெட் ஐபோனை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகள் நடந்துவருவதாக தகவல்கள் வெளியானது.

ஐபோன் ரேம் பவர், மெமரி ஸ்டோரேஜ்

ஐபோன் ரேம் பவர், மெமரி ஸ்டோரேஜ்

அதேபோல் புதிய ஏ 13 பயோனிக் சில் மூலம் இது இயக்கப்படும் எனவும் கூறினார். ஐபோன் ரேம் பவர், மெமரி ஸ்டோரேஜ் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் ஐபோன் கணித்ததைய போல் எஸ்இ 2-ஆக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 3 ஜிபி ரேம் வசதி இருக்கக்கூடம் எனவும் குவோ கணித்தார்.

இப்படி செய்தால் சேவையை நிறுத்துவோம்: பாகிஸ்தானுக்கு Google, facebook, twitter எச்சரிக்கைஇப்படி செய்தால் சேவையை நிறுத்துவோம்: பாகிஸ்தானுக்கு Google, facebook, twitter எச்சரிக்கை

ஃபேஸ் ஐடி இல்லை

ஃபேஸ் ஐடி இல்லை

இந்த புதிய மாடல் போனானது, ஐபோன் 8 போன்ற தோற்றத்தை வழங்கினாலும், 4.7 அங்குல டிஸ்ப்ளே காட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் ஃபேஸ் ஐடி இல்லை என்றாலும் டச் லாக் மூலம் பாதுகாக்கப்படும். அதாவது முன்புற பட்டனுடன் கூடிய பிங்கர் பிரிண்ட் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மலிவு விலை ஐபோன் எப்போது

மலிவு விலை ஐபோன் எப்போது

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் மலிவு விலையுள்ள ஐபோன் பற்றிய வதந்திகளையும் தகவலையும் நிக்கி என்பவர் முதலில் தெரிவித்திருந்தார். ஐபோன் நிறுவனமும் மலிவு விலை விற்பனையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. அதாவது, ஐபோன் 11 கடந்த ஆண்டு அறிமுகம் செய்த போது முந்தைய மாடல் விலையை விட ரூ.12,000 குறைவாக இருந்தது.

ஐபோன் மாடல்களின் விலை திடீரென உயர்வு

ஐபோன் மாடல்களின் விலை திடீரென உயர்வு

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்படும் பிரின்ட்டெட் சர்கியூட் போர்டு அசெம்ப்ளி (PCBA) பாகங்களுக்கான இறக்குமதி வரியை 10 இல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தியது.

வரியினை 15 இல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தியது

வரியினை 15 இல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தியது

அதேபோல் மொபைல் போன் உபகரணங்களான டிஸ்ப்ளே பேனல், டச் பேனல், மைக்ரோபோன் மற்றும் ரிசீவர் உள்ளிட்டவற்றுக்கான இறக்குமதி வரியினை 15 இல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தியது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் போன்கள் விலை உயர்த்தவில்லை

இந்தியாவில் தயாரிக்கப்படும் போன்கள் விலை உயர்த்தவில்லை

இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் விலையை உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் ஐபோன் எக்ஸ்.ஆர். மாடல்கள் விலை உயர்த்தப்பட வில்லை. அதன் காரணம் இந்த மாடல் போன்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படுவது தான்.

இனி தினசரி 1.5 ஜிபி இல்ல 3 ஜிபி டேட்டா., அதே விலையில்: Vodafone அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் குஷி!இனி தினசரி 1.5 ஜிபி இல்ல 3 ஜிபி டேட்டா., அதே விலையில்: Vodafone அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் குஷி!

மற்ற ஐபோன் மாடல்களின் விலை உயர்வு

மற்ற ஐபோன் மாடல்களின் விலை உயர்வு

ஐபோன் 11, ஐபேட் மாடல்களின் விலையும் உயர்த்தப்படவில்லை. மற்ற ஐபோன் மாடல்களின் விலை 1.3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. உயர் ரக ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 512 ஜி.பி. மாடலின் விலை ரூ. 1,41,900 இல் இருந்து தற்சமயம் ரூ. 1,43,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பழைய விலை மற்றும் புதிய விலை விவரங்கள்

பழைய விலை மற்றும் புதிய விலை விவரங்கள்

ஐபோன் மாடல்களின் முந்தைய விலையையும் தற்போது மாற்றம் செய்யப்பட்ட புதிய விலை குறித்தும் பார்க்கலாம்.

  • ஐபோன் 8 (64 ஜிபி) பழைய விலை ரூ.39,900 புதிய விலை ரூ.40,500
  • ஐபோன் 8 (128 ஜிபி) பழைய விலை ரூ.44,900 புதிய விலை ரூ.45,500
  • ஐபோன் 8 பிளஸ் (64 ஜிபி) பழைய விலை ரூ.49,900 புதிய விலை ரூ.50,600
  • ஐபோன் 8 பிளஸ் (128 ஜிபி) பழைய விலை ரூ.54,900 புதிய விலை ரூ.55,600
  • ஐபோன் 11 ப்ரோ (64 ஜிபி) பழைய விலை ரூ.99,900 புதிய விலை ரூ.1,01,200
  • ஐபோன் 11 ப்ரோ (256 ஜிபி) பழைய விலை ரூ.1,13,900 புதிய விலை ரூ.1,15,200
  • ஐபோன் 11 ப்ரோ (512 ஜிபி) பழைய விலை ரூ.1,31,900 புதிய விலை 1,33,200
  • ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் (64 ஜிபி) பழைய விலை ரூ.1,09,900 புதிய விலை1,11,200
  • ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் (256 ஜிபி) பழைய விலை ரூ. 1,23,900 புதிய விலை ரூ. 1,25,200
  • ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் (512 ஜிபி) பழைய விலை ரூ. 1,41,900 புதிய விலை ரூ. 1,43,200

Best Mobiles in India

English summary
Apple Hikes iphone prices in india

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X