இந்திய வாடிக்கையாளர்கள் கவலை: பழைய மாடலின் விலையை உயர்த்திய ஆப்பிள்- காரணம் என்ன தெரியுமா?

|

நேற்று (ஜூன் 7) WWDC 2022 நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பிறகு பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், M1 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் முந்தைய தலைமுறை மேக்புக் ஏர் மாடலுக்கான விலையை உயர்த்தி அறிவித்தது. நிறுவனம் மேக்புக் ஏர் எம்1 விலையை உயர்த்தியதை அடுத்து வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த மேக்பு ஏர் எம்1 2020 மாடலானது ரூ.92,900 விலையில் தொடங்கப்பட்டது.

டெவலப்பர்கள் மாநாடு WWDC 2022

டெவலப்பர்கள் மாநாடு WWDC 2022

டெவலப்பர்கள் மாநாடு WWDC 2022 நேற்று (ஜூன் 7) இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் சக்தி வாய்ந்த எம்2 சிப்செட்டை அறிமுகம் செய்தது. முந்தைய தலைமுறை எம்1 சிப்செட்டை விட எம்2 சிப்செட் பல்வேறு மேம்பாட்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. எம்2 சிப் ஆனது சக்தி வாய்ந்த சிபியூ மற்றும் துல்லியமான கிராஃபிக்ஸ் செயல்திறனை வழங்குகிறது. இந்த சிப்செட் வசதியோடு கூடிய மேக்புக் ஏர் 2022 மாடலை ஆப்பிள் நிறுவனம் WWDC 2022 நிகழ்வில் அறிமுகம் செய்தது. எம்2 சிப் உடன் கூடிய Refresh MacBook Air விலையானது ரூ.1,19,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக அறிவிப்பு

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக அறிவிப்பு

ஐபோன், மேக்புக் உள்ளிட்ட எந்த ஒரு சாதனங்களின் புது மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்ட உடன் அதன் முந்தைய தலைமுறை மாடலின் விலை குறைவாகவே இருக்கும். அதன்படி மேக்புக் ஏர் 2022 எம்2 பதிப்பு வெளியான உடன் மேக்புக் ஏர் 2020 எம்1 பதிப்பு விலை மலிவாக இருக்கும் என்றே வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1 விலையை உயர்த்தி அறிவித்தது.

மேக்புக் ஏர் 2020 மாடலின் விலை

மேக்புக் ஏர் 2020 மாடலின் விலை

WWDC 2022 நிகழ்வுக்கு பிறகு குபெர்டினோவை தளமாகக் கொண்ட பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், முந்தைய தலைமுறை மேக்புக் ஏர் மாடலுக்கான விலையை உயர்த்தி அறிவித்தது. எம்1 சிப் பொருத்தப்பட்ட மேக்புக் ஏர் 2020 மாடலின் விலை ரூ.92,900 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனத்தின் விலையானது ரூ.99,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் மேக்புக் ஏர் 2020 மாடலுக்கான விலை அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

முந்தைய விலையில் விற்பனை செய்யும் தளங்கள்

முந்தைய விலையில் விற்பனை செய்யும் தளங்கள்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற மூன்றாம் தரப்பு இ-காமர்ஸ் தளங்கள் மேக்புக் ஏர் 2020 சாதனத்தை பழைய விலையிலேயே இன்னும் விற்பனை செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக இந்த தளங்கள் கேஷ்பேக் சலுகைகளையும் வழங்குகின்றன. இந்த மூன்றாம் தரப்பு தளங்களில் வங்கி சலுகை, கேஷ்பேக் சலுகைகளுடன் மேக்புக் ஏர் 2020 சாதனத்தை ரூ.80,000 என வாங்கலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. மூன்றாம் தரப்பு தளங்களில் தற்போதைய புதிய விலை மாற்றம் செய்யப்படுமா என்ற தகவல் இல்லை. இருப்பினும் நீங்கள் மேக்புக் ஏர் எம்1 சாதனம் வாங்க திட்டமிட்டிருந்தால் தற்போதே இந்த அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களை அணுகலாம்.

விலை உயர்வுக்கான காரணம்?

விலை உயர்வுக்கான காரணம்?

குபெர்டினோவை தளமாகக் கொண்ட பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இந்த விலை உயர்வுக்கான காரணத்தை சரியாக குறிப்பிடவில்லை. இருப்பினும் உலகளாவிய சிப்செட் தட்டுப்பாடு மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பின் ஏற்ற இறக்கம் ஆகியவை மேக்புக் ஏர் விலை உயர்வுக்கு காரணங்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

புதிய மேக்புக் ஏர் எம்2 மாடல்

புதிய மேக்புக் ஏர் எம்2 மாடல்

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மேக்புக் ஏர் எம்2 மாடலானது பல்வேறு குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தில் பெரிய அளவிலான 13.6 இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த எம்2 சிப்செட், 1080 பிக்சல் ஃபேஸ்டைம் எச்டி வெப்கேம், புதியரக மைக்குகள், டால்பி அட்மாஸ் சவுண்ட் ஆதரவுடன் கூடிய நான்கு ஸ்பீக்கர்கள் என பல மேம்பாடுகள் இருக்கிறது. மேக்புக் ஏர் (2022) மாடலின் விலையானது ரூ.1,19,900 எனவும் மேக்புக் ஏர் ப்ரோ மாடலின் விலை ரூ.1,29,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple Hiked its Macbook Air 2020 Price in India after Macbook Air 2022 Launched

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X