பட்ஜெட் விலை ஐபோன் பிரியர்களுக்கு ஆப்பு வைத்த Apple.. பழைய நிலவரம் இப்போ இல்ல!

|

Apple iPhone SE 2022 விலை இந்தியாவில் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் விற்பனையாகும் ஐபோன் மாடலை வாங்கிவிடலாம் என்று திட்டமிட்டவர்களுக்கு இந்த தகவல் கண்டிப்பாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.

ஆப்பிள் வைத்த ஆப்பு

ஆப்பிள் வைத்த ஆப்பு

என்னதான் ப்ரீமியம் தர ஸ்மார்ட்போனை பயன்படுத்தினாலும் ஐபோன் என்றால் அதற்கு தனி மோகம் தான். ஆப்பிள் ஐபோனின் விலை உச்சத்தில் இருப்பதால் பலருக்கும் இது எட்டாக்கனியாகவே இருக்கிறது. எனவே மிட் ரேன்ஜ் விலைப் பிரிவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்ய நிறுவனம் SE என்ற ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ப்ரீமியம் தர ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு பதில் மிட் ரேன்ஜ் விலை ஐபோன் வாங்கிவிடலாம் என பலரும் ஆர்வம் காட்டினர். ஆப்பிள் நிறுவனம் இவர்களின் கனவுக்கு தான் ஆப்பு வைத்திருக்கிறது.

மலிவு விலை ஐபோன் மாடல்

மலிவு விலை ஐபோன் மாடல்

ஆப்பிள் நிறுவனம் மலிவு விலையில் iPhone SE 2022 என்ற மாடலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடலின் விலை ரூ.43,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதாவது சுமார் ரூ.40,000 விலைப் பிரிவில் இந்த ஐபோன் மாடல் அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இது இருந்தாலும் இதன் அம்சங்களில் எந்த குறையும் குறிப்பிட்டுவிட முடியாது. சுமார் ரூ.40,000 விலையில் விற்கப்பட்டு வந்த இந்த ஐபோன் மாடலின் விலை தற்போது ரூ.50,000 என்ற விலைப்பிரிவை தொட்டு இருக்கிறது.

மேம்பட்ட அம்சங்கள் உடன் பட்ஜெட் விலை iPhone

மேம்பட்ட அம்சங்கள் உடன் பட்ஜெட் விலை iPhone

iPhone SE மாடலானது 4.7 இன்ச் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் ஏ15 பயோனிக் சிப் பொருத்தப்பட்டிருக்கிறது. இதே சிப்செட் தான் ஐபோன் 13 மாடலிலும் இடம்பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் இந்த மாடலில் இருக்கிறது.

Apple iPhone SE 2022 விலை

Apple iPhone SE 2022 விலை

Apple iPhone SE 2022 இன் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.43,900 என அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலின் விலை ரூ.6000 என உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தற்போது ஐபோன் எஸ்இ 2022 மாடல் ரூ.49,900 என கிடைக்கிறது. 128 ஜிபி மாடலின் விலை ரூ.48,900 என விற்கப்பட்டு வந்து நிலையில் தற்போது இந்த ஐபோன் மாடலின் விலை ரூ.54,900 என விற்கப்படுகிறது. அதேபோல் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விலை உயர காரணம் என்ன?

விலை உயர காரணம் என்ன?

புதிய ஐபோன் மாடல் ஆனது மிட் நைட், ஸ்டார்லைட் மற்றும் ரெட் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 இன் விலை உயர்வுக்கான காரணத்தை நிறுவனம் வெளியிடவில்லை.

தள்ளுபடி விலையில் ஐபோன் மாடல்

தள்ளுபடி விலையில் ஐபோன் மாடல்

தற்போது நடைபெற்று வரும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் பல ஐபோன் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 13 மாடலின் ஆரம்ப விலையானது ரூ.64,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி தின சலுகையாக ரூ.59,990 என கிடைக்கிறது. அதேபோல் 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.67,990 எனவும் 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.86,990 எனவும் கிடைக்கிறது.

Apple iPhone SE 2022 சிறப்பம்சங்கள்

Apple iPhone SE 2022 சிறப்பம்சங்கள்

Apple iPhone SE 2022 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த மாடல் ஐபோன் ஆனது 4.7 இன்ச் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் பின்புற கண்ணாடியுடன் கிடைக்கிறது. ஃபேஸ் அன்லாக் ஆதரவும் இந்த மாடலில் இருக்கிறது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. இந்த ஐபோனானது டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான ஐபி67 மதீப்பீடு பெற்றிருக்கிறது. மேலோட்டமாக தண்ணீர் தெறிப்பதில் இருந்து இந்த ஐபோன் மாடல் பாதுகாக்கப்படுகிறது.

ஐபோன் SE 2022 சிறப்பம்சங்கள்

ஐபோன் SE 2022 சிறப்பம்சங்கள்

ஐபோன் SE 2022 ஆனது ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஐஓஎஸ் 15 மூலம் இந்த ஐபோன் மாடல் இயக்கப்படுகிறது. ஐபோன் எஸ்இ 2022 ஆனது ஸ்மார்ட் HDR 4, ஃபோட்டோகிராஃபிக் ஸ்டைல்கள், டீப் ஃப்யூஷன் மற்றும் போர்ட்ரெய்ட் பயன்முறை போன்ற பல ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. பின்புறத்தில் 12 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஐபோன் மாடல் ஆனது 5ஜி இணைப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple hiked its iPhone SE 2022 Price in India: Here the New Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X