1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!

|

ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 14 (iPhone 14) தொடரை அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியது, இதில் வெண்ணிலா மாடலுடன் இரண்டு ப்ரோ மாடல்கள் மற்றும் பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

ஐபோன் 14 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டு சில வாரங்கள் ஆகிவிட்டன நிலையில், அடுத்த ஆண்டு வரவிருக்கும் ஐபோன் 15 (iPhone 15) பற்றிய சில விவரங்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஐபோன் 15 மாடல்களில் பட்டன்களே இருக்காதா?

ஐபோன் 15 மாடல்களில் பட்டன்களே இருக்காதா?

ஆப்பிளின் வரவிருக்கும் iPhone 15 சீரிஸ் செப்டம்பர் 2023 இல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐபோன் 15 சீரிஸ் வரிசையில், நிறுவனம் iPhone 15, iPhone 15 Pro , iPhone 15 Pro Max மற்றும் iPhone 15 Plus போன்ற மாடல்களை அறிமுகம் செய்யுமென்று நாம் எதிர்பார்க்கலாம்.

ஆனால், நாம் பார்க்கப்போவது இதை பற்றி அல்ல, வரவிருக்கும் ஐபோன் 15 மாடல்களில் பட்டன்களே இருக்காது என்று ஒரு புதிய லீக் தகவல் தெரிவிக்கிறது. ஆம், பட்டனே கிடையாதாம்.!

பட்டன்களே இல்லாத ஐபோன் மாடலா? என்ன சொல்லுறீங்க.!

பட்டன்களே இல்லாத ஐபோன் மாடலா? என்ன சொல்லுறீங்க.!

உண்மையிலேயே ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் புதிய ஐபோன் 15 மாடல்களில் பட்டன்களை நீக்கப்போகிறதா? ஐபோன் 15 இல் வழக்கமாக வழங்கப்படும் லைட்டினிங் சார்ஜிங் போர்ட்டிற்கு பதிலாக, அடுத்த ஆண்டு USB Type C சார்ஜிங் போர்ட் அறிமுகம் செய்யப்படுகிறதா? என்பது போன்ற விபரங்களை தான் பார்க்கப்போகிறோம்.

இப்போது வெளியான தகவல் உண்மை என்றால், ஐபோன் 15, முதல் பட்டன்லெஸ் ஐபோனாக அறிமுகம் செய்யப்படும்.

இப்போ விட்டா திரும்ப கிடைக்காது.! Samsung Galaxy M53 5G மீது அதிரடி விலை குறைப்பு.!இப்போ விட்டா திரும்ப கிடைக்காது.! Samsung Galaxy M53 5G மீது அதிரடி விலை குறைப்பு.!

பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன் 15.!

பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன் 15.!

ஐபோன் 15 மாடலின் வழக்கமான வெளியீட்டு காலவரிசையிலிருந்து கிட்டத்தட்ட 10 மாதங்கள் தள்ளி உள்ள நிலையில், ஐபோன் 15 தொடர் பற்றி வெளியாகி இருக்கும் மிகப் பெரிய முதல் வதந்தி இது என்பதனால், ஆப்பிள் ரசிகர்களின் ஆர்வம் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த முதல் நம்ப முடியாத லீக் தகவலை, ஆப்பிள் தொடர்பான கசிவுகளுக்குப் புகழ் பெற்ற ஆய்வாளர் மிங்-சி குவோ (Ming-Chi Kuo) வெளியிட்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் அதிக டாப்டிக் என்ஜின்.!

ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் அதிக டாப்டிக் என்ஜின்.!

இவர் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் அதிக டாப்டிக் என்ஜின்கள் (Taptic Engines) இடம்பெறக்கூடும் என்று குவோ கூறுகிறார்.

ஐபோன் 6s மாடல்களில் இருந்த டாப்டிக் எஞ்சினை நிறுவனம் மீண்டும் பயன்படுத்த திட்டமிடுகிறது. ஐபோன் 7 இல் இருந்த பிஸிக்கல் பட்டனை, சாலிட் ஸ்டேட் பட்டனுடன் மாற்றுவதன் மூலம் ஆப்பிள் ஐபோன் சீரிஸை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது.

ஹோம் பட்டன் கொண்ட பிற ஐபோன்களும் இதே டாப்டிக் என்ஜின்களை கொண்டிருந்தன.

இனி ஐபோனில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் இருக்காதா?

இனி ஐபோனில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் இருக்காதா?

ஆனால், ஐபோன் எக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது முதல், ஃபிளாக்ஷிப் மாடல்கள் அனைத்தும் டிஸ்பிளேவில் ஹோம் பட்டன் இல்லாமல் வந்துள்ளன. அத்தோடு, ஆப்பிள் அதன் டாப்டிக் எஞ்சினைகள் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டது.

இப்போது நிறுவனம் அடுத்த ஆண்டு, வரவிருக்கும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் வால்யூம் (Volume Button) மற்றும் பவர் (Power Button) பட்டன்கள் இருக்கும் இடங்களில் பிஸிக்கல் பட்டன்களை நீக்கிவிட்டு, சாலிட் பட்டன்கள் கொண்டு ஐபோன் 15 ஐ பட்டன்லெஸ் போனாக மாற்றப்போகிறது.

அடேங்கப்பா.! 300 விலைக்குள் இத்தனை Jio ரீசார்ஜ் திட்டம் இருக்கா? இது தெரியாம போச்சே.!அடேங்கப்பா.! 300 விலைக்குள் இத்தனை Jio ரீசார்ஜ் திட்டம் இருக்கா? இது தெரியாம போச்சே.!

எந்த iPhone 15 மாடல்கள் பட்டன்லெஸ் அம்சத்தை பெறப்போகிறது?

எந்த iPhone 15 மாடல்கள் பட்டன்லெஸ் அம்சத்தை பெறப்போகிறது?

ஆப்பிள் ஐபோன் 15 வருகிற 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்படும். ஹை-வேரியண்ட் மாடலான ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மற்றும் பிளஸ் மாடல்களில் இந்த பட்டன்லெஸ் மாற்றம் இடம்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள், மெக்கானிக்கல் பட்டன்களை ப்ரோ மாடல்களில் சாலிட் ஸ்டேட் பட்டன்களுடன் மாற்ற வாய்ப்புள்ளது என்று குவோ கூறியிருக்கிறார். இது பற்றி நிறுவனம் இன்னும் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

பட்டன்லெஸ் ஆக ஐபோன் மாறினால் இப்படியொரு நன்மை இருக்கிறதா?

பட்டன்லெஸ் ஆக ஐபோன் மாறினால் இப்படியொரு நன்மை இருக்கிறதா?

இதன் விளைவாக, ஆப்பிள் ஐபோன் 15 மாடல்களில் வலுக்கட்டாயமாக அதன் இடது மற்றும் வலது பக்கங்களில் Taptic என்ஜின்களைச் சேர்க்கும் என்று ஆய்வாளர் குவோ கூறியிருக்கிறார்.

இப்படி, ஐபோன்களில் இருக்கும் பிஸிக்கல் பட்டன்களை மாற்றுவதன் மூலம் ஐபோனின் வாட்டர் ப்ரூப் தரத்தை முழுமையாக மாற்ற முடியும் என்று நிறுவனம் நம்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஐபோனின் டிசைனையும் ஹை-லுக்கில் மாற்றும் என்று நம்பப்படுகிறது.

ஐபோன் 15 மாடல்களில் USB Type C போர்ட் அம்சமா? உண்மையா.!

ஐபோன் 15 மாடல்களில் USB Type C போர்ட் அம்சமா? உண்மையா.!

இந்த டாப்டிக் என்கின் அம்சம் மேக்புக் டிராக்பேடிலும், iPhone 7, iPhone 8, iPhone SE, iPhone SE 2020 மற்றும் iPhone SE 2022 ஆகியவற்றிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஆப்பிள் நிறுவனம் அதன் வரவிருக்கும் ஐபோன் 15 மாடல்களில் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் மாற்றம் செய்யவிருக்கிறது என்ற தகவலையும் குவோ ட்வீட் செய்துள்ளார்.

ஆப்பிள் மார்க்கெட்டிங் தலைவர் கிரெக் ஜோஸ்வியாக் சமீபத்தில் இது பற்றி என்ன கூறினார் தெரியுமா?

வீடியோ கால் வர சொன்னாங்க.! டக்குனு அந்த பொண்ணு ரெக்கார்ட் செஞ்சுட்டு.! உஷார் மக்களே.!வீடியோ கால் வர சொன்னாங்க.! டக்குனு அந்த பொண்ணு ரெக்கார்ட் செஞ்சுட்டு.! உஷார் மக்களே.!

iPhone 15 இல் USB டைப்-சி போர்ட் மாற்ற என்ன காரணம்?

iPhone 15 இல் USB டைப்-சி போர்ட் மாற்ற என்ன காரணம்?

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையால், ஆப்பிள் நிறுவனம் அதன் வரவிருக்கும் ஐபோன் 15 மாடல்களில் USB Type C சார்ஜிங் போர்டை பயன்படுத்தும் என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய அரசாங்கம், நுகர்வோர் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் வரும் 2024 ஆம் ஆண்டு முதல் USB டைப்-சி போர்ட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் மட்டுமே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

ஐபோன் 15 இல் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

ஐபோன் 15 இல் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

ஐபோன் 15 விவரக்குறிப்புகள் பற்றிப் பேசுகையில், அடுத்த ஆண்டு நிறுவனம் இரண்டு 6.1' இன்ச் மற்றும் இரண்டு 6.7' இன்ச் கொண்ட ஐபோன் 15 மாடல்களை அறிமுகம் செய்யுமென்று நாம் எதிர்பார்க்கலாம்.

ப்ரோ மாடல்கள் டெலிஃபோட்டோ கேமராவிற்குப் பதிலாக பெரிஸ்கோப் கேமராவைப் பெறுவதாக வதந்தி பரவுகிறது.

அடுத்த ஆண்டு ப்ரோ அல்லாத மாடல்களில் ஆப்பிள் ப்ரோமோஷனை அறிமுகப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ஆப்பிள் நிறுவனம் A17 பயோனிக் என்று அழைக்கப்படும் புதிய Apple SoC ஐ ப்ரோ மாடல்களில் மட்டும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Apple High-End iPhone 15 Pro Models Could Go Buttonless By 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X