Apple ஐபோன் 12 அறிமுகத்துக்கு தயார்.! ஆப்பிள் ஹை ஸ்பீடு 2020 நிகழ்ச்சி எப்போ தெரியுமா?

|

ஆப்பிள் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நேரம் ஒரு வழியாக வந்துவிட்டது, ஆப்பிள் ஐபோன் 12 அறிமுகமாகும் நேரம் வந்துவிட்டது.

ஆப்பிள் 'ஹை ஸ்பீடு' 2020

ஆப்பிள் 'ஹை ஸ்பீடு' 2020

ஆப்பிள் நிறுவனம் வரும் அக்டோபர் 13ம் தேதி தனது 'ஹை ஸ்பீடு' என்ற நிகழ்ச்சியை நிகழ்த்தவுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய ஐபோன் 12 சாதனங்கள் மற்றும் சில அக்சஸரீக்களும் அறிமுகம் செய்யப்படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் 12

புதிய ஐபோன் 12

ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் படி, இந்த நிகழ்ச்சியில் நான்கு ஆப்பிள் ஐபோன்களை நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மற்றொரு புறம் இம்முறை மூன்று ஐபோன்கள் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என்ற வதந்திகளும் கசிந்துள்ளது. புதிய ஐபோன் 12 சாதனங்கள் OLED டிஸ்பிளே மற்றும் 5ஜி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!

A14 பயோனிக் சிப்செட்

A14 பயோனிக் சிப்செட்

புதிய ஐபோன் 12 மாடல்கள் அனைத்தும் 6.1' இன்ச், 6.7' இன்ச் மற்றும் 5.4' இன்ச் என்ற அளவில் OLED டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும். ஐபோன் 12 சாதனத்தின் ப்ரோ மாடல்களில் மட்டும் LIDAR சென்சார் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஐபோன் 12 சாதனங்கள் அனைத்தும் ஆப்பிள் A14 பயோனிக் சிப்செட் உடன் வெளியாகும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

நெஞ்சை கவலைக்குள்ளாகும் உண்மை

நெஞ்சை கவலைக்குள்ளாகும் உண்மை

இதைவிட இப்பொழுது நாங்கள் சொல்லப் போகும் தகவல் தான் ஆப்பிள் ரசிகர்களின் நெஞ்சை கவலைக்குள்ளாகும் என்று கருதுகிறோம். காரணம் புதிய ஐபோன் 12 சாதனங்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன்கள் மட்டுமின்றி கூடுதல் ஆப்பிள் சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple 'Hi, Speed' event for iPhone 12 series, AirTags and more scheduled for October 13 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X