நான்கு ஆண்டு போட்டி சாம்சங் நிறுவனத்தை வீழ்த்திய ஆப்பிள்.!!
நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் போட்டி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமையை சாம்சங் மீறியதாக ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கு முடிவுற்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி சட்ட பூர்வமாக ஆப்பிள் நிறுவனம் வெற்றி பெற்றிருப்பதோடு சாம்சங் நிறுவனங்களின் கருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் தாமதமாகினும் ஆப்பிள் நிறுவனத்தை பொருத்த வரை இது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது.
மேலும் அமெரிக்க நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்ட சாம்சங் நிறுவன கருவிகளின் பட்டியல் பின்வருமாறு..
கேலக்ஸி நோட்
கேலக்ஸி நோட் II
கேலக்ஸி எஸ் II
கேலக்ஸி எஸ் III
கேலக்ஸி அட்மையர்
கேலக்ஸி நெக்சஸ்
கேலக்ஸி எஸ் II எபிக் 4ஜி டச்
கேலக்ஸி எஸ் II ஸ்கைராக்கெட்

நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் மேற்குறிப்பிட்ட கருவிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த திட்டமிட்டுள்ளது. சாம்சங் கருவிகளில் 'ஸ்லைடு டூ அன்லாக்' அம்சம் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சனையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications