டெலிகிராம் ஐ ஓ.எஸ் அப்டேட்டை தடை செய்யும் ஆப்பிள்.! ஏன்.?

ரஷ்ய பயனர்கள் டெலிகிராம் பயன்படுத்துவதை தங்களது தளங்களில் தடைசெய்யுமாறு கூகுள் மற்றும் ஏ.பி.கே மிர்ரர் நிறுவனங்களை கடந்த மாதம் இரஷ்ய அரசு கேட்டுக்கொண்டது.

By GizBot Bureau
|

மெசேஜிங் சேவை வழங்கும் ரஷ்ய நிறுவனமான டெலிகிராமின் ஐ ஓ.எஸ் அப்டேட்டிற்கு தடை விதித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். கடந்த ஏப்ரல் மாத மத்தியில் இருந்து அப்டேட்களுக்கு தடை விதித்துள்ளது ஆப்பிள். டெலிகிராம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி அது தற்போது ஐரோப்பியாவில் GDPR எனப்படும் தகவல் பாதுகாப்பு கட்டுபாடு திட்டத்தை செயல்படுத்திவருகிறது. ஆப்பிள் தரவுகளின் படி, இந்த டெலிகிராம் செயலியின் சமீபத்திய பதிப்பு 4.8.9 . ஆண்ராய்டின் இதே பதிப்பில் GDPR ஏற்கனவே தயாராகிவிட்டது.

டெலிகிராம் ஐ ஓ.எஸ் அப்டேட்டை தடை செய்யும் ஆப்பிள்.! ஏன்.?

ஆனால், ஐ ஓ.எஸ்-ல் எப்படி இந்த புதிய விதிமுறைகளை செயல்படுத்தப் போகிறோம் என்பது அந்த நிறுவனத்திற்கே தெரியவில்லை. ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் அப்டேட்களை தடை செய்வதை மனதில் வைத்து இது சொல்லப்படுகிறது. அதே நேரம் இச் செயலியின் ஐ ஓ.எஸ் பதிப்பு மார்ச் 24 ல் அப்டேட் செய்யப்பட்டு தற்போது 4.8.1 பதிப்பில் இயங்கி வருகிறது.

இந்த பிரச்சனையை பற்றி ஆப்பிள் மற்றும் டெலிகிராம் நிறுவனங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. டெலிகிராம் செயலியை இரஷ்யாவில் தடை செய்ய ரஷ்யா அரசாங்கத்திடம் இருந்து வரும் அழுத்தத்தின் பிடியில் ஆப்பிள் நிறுவனம் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே டெலிகிராமின் சேனல்கள் மற்றும் குரூப்களில் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிப்பதாக எழுந்த புகாரால் ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் நீக்கப்பட்டிருந்தது.

ரஷ்ய பயனர்கள் டெலிகிராம் பயன்படுத்துவதை தங்களது தளங்களில் தடைசெய்யுமாறு கூகுள் மற்றும் ஏ.பி.கே மிர்ரர் நிறுவனங்களை கடந்த மாதம் இரஷ்ய அரசு கேட்டுக்கொண்டது. இந்த வாரம் இரஷ்யாவின் தொலைதொடர்பு ஒழுங்குமுறையாளர் ரோஷ்கோம்நாட்சர், டெலிகிராம் செயலியை தடை செய்ய உதவுமாறு ஆப்பிளை கேட்டுக்கொண்டார்.

கடந்த மாதம் மாஸ்கோவின் டாகான்ஸ்கை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, டெலிகிராம் செயலியின் மீது இந்த தடை விதிக்கப்படுகிறது.நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுப்படி இந்நிறுவனம் தனது என்கிரிப்சன் கீ-களை நாட்டின் துப்பறியும் நிறுவனமான FSBயிடம் ஒப்படைக்காததால்,இந்த மெசேஜிங் செயலியை உடனடியாக தடை செய்யுமாறு தொலைதொடர்பு ஒழுங்குமுறையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெலிகிராம் ஐ ஓ.எஸ் அப்டேட்டை தடை செய்யும் ஆப்பிள்.! ஏன்.?

தற்போது வரை ஆப்பிள் அல்லது டெலிகிராம் நிறுவனத்திடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. அந்த செயலியானது உலகம் முழுக்க உருவாக்கப்படுவதில்லை என்பதை கருத்தில் கொண்டு இரஷ்யாவில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யமளிக்கக்கூடிய ஒன்று.

Best Mobiles in India

English summary
Apple has been blocking iOS update for Telegram since Mid April 2018: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X