ஆஹா., இந்தியாவிலேயே ஆப்பிள் இதையும் தயாரிக்க உள்ளதாம்- பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

|

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. என்னதான் பல நிறுவன ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினாலும் ஐபோன்கள் பயன்பாடு என்பது பலரின் கனவாகத் தான் இருக்கிறது. ஐபோன்கள் தொடர்ந்து அடுத்தடுத்த மாடல்களை அறிமுகம் செய்துகொண்டே வருகிறது.

ஆப்பிள் ஐபோன் 12 தொடர்

ஆப்பிள் ஐபோன் 12 தொடர்

ஆப்பிள் ஐபோன் 12 தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சீனா அமெரிக்கா இடையிலான வர்த்தக போரில் பாதுகாப்பான நடவடிக்கையை எடுக்கும் ஒருபகுதியாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் எஸ்இ, ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் 11 ஆகிய மாடலை உருவாக்க இருக்கிறது. இந்த நிலையில் ஐபோன் 12 மினி தயாரிப்பு விரைவில் இந்தியாவில் தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

விற்பனை மற்றும் ஏற்றுமதி

விற்பனை மற்றும் ஏற்றுமதி

முதற்கட்டமாக ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உள்ள அதன் உற்பத்தியின் 7 முதல் 10 சதவீதத்தை இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என பிசினஸ் ஸ்டாண்டர்டு தெரிவிக்கிறது. விற்பனை மற்றும் ஏற்றுமதிக்காக இந்தியாவில் தயாரிப்புகளை நிறுவனம் உற்பத்தி செய்யும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிஎல்ஐ திட்டத்தின் கீழ் நிறுவனம் சாதனங்களின் இறக்குமதி வரியை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஆப்பிள் 12 உள்நாட்டு உற்பத்தி

இந்தியாவில் ஆப்பிள் 12 உள்நாட்டு உற்பத்தி

2020 ஆம் ஆண்டில் ஆப்பிள் 60 சதவீதத்திற்கு அதிகமாக வளர்ந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் நிறுவனம் 100 சதவீத வளர்ச்சியை கண்டது என கூறப்படுகிறது. இந்தியாவில் வரவிருக்கும் காலாண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசினஸ் ஸ்டாண்டர்ட் தகவலின்படி, ஐஐஜி-ன் தலைவர் பிரபுராம் இந்தியாவில் ஆப்பிள் 12 உள்நாட்டு உற்பத்தி செய்வது நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்கும் என கூறினார்.

ஆகச்சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எல்ஜி டபிள்யூ 41 மட்டும்தான்: என்ன காரணம் தெரியுமா?ஆகச்சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எல்ஜி டபிள்யூ 41 மட்டும்தான்: என்ன காரணம் தெரியுமா?

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

அதேபோல் எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தி திறனை அதிகரித்து வருவதாக தெரிவித்தது. உள்நாட்டில் ஐபோன்களுக்கான கூறுகளை உருவாக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐபோன்களுக்கு கூடுதலாக ஆப்பிள் ஐபாட்கள், ஏர்போட்கள் மற்றும் மேக்ஸ்புக் உள்ளூர் உற்பத்தி விரைவில் தொடங்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை

உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை

இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தைகளில் சீன நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லடாக் எல்லை விவகாரத்தில் சீனா இந்தியாவுக்கு இடையே பதற்றம் ஏற்படத் தொடங்கியதில் இருந்து, சீன நிறுவனங்களுக்கு எதிராக எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல இந்திய நிறுவனங்கள் மேட் இன் இந்தியா என்ற குறியீட்டோடு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்திய அரசும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்நாட்டு தயாரிப்பு நடவடிக்கையில் ஐபோன் இந்தியாவில் தயாரிப்பது பெரிதும் பயனளிக்கும் என கூறப்படுகிறது.

பணியடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

பணியடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் இந்தியாவில் விஸ்ட்ரான் வசதியுடன் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆப்பிள் தற்போது இந்தியாவில் ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எஸ்இ 2020 மற்றும் ஐபோன் 11 ஆகிய மூன்று ஐபோன்களை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது. ஆப்பிள் உள்நாட்டில் மூலப்பொருட்களுக்கும் தொழிற்சாலைக்கும் ரூ.2.9 பில்லியன் அதிகமாக முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கூட்டாளரான விஸ்ட்ரான் நராஸ்புரா ஆலையில் தனது ஊழியர்கலை 1000-த்தில் இருந்து 2000 ஆக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple Going to Manufacture IPhone 12 in India: Sources Said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X