அப்டேட் செய்யவில்லை என்றால் அப்பட்டமாகிடும், ஆப்பிள் எச்சரிக்கை.!!

By Meganathan
|

நமக்கு உடம்பு சரியில்லை என்றால் மருத்துவமனைக்குச் செல்வதை போல, ஸ்மார்ட்போன்களையும் கவனமாகப் பார்த்து கொள்ள வேண்டும். அடிக்கடி அப்டேட் செய்வதில் இருந்து வைரஸ் பாதிப்பு, போதுமான மெமரி வரை எல்லாவற்றிலும் கவனமாக இருத்தல் அவசியமாகும்.

இவ்வாறு இருக்கும் போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வரை அதிகளவு கோளாறு ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம் என நாங்கள் சொல்லவில்லை, ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பயன்படுத்தும் தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் புதிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளது.

அப்டேட்

அப்டேட்

அதன் படி ஐபோன் பயனர்கள் அனைவரும் தங்களது ஐபோன் கருவியினை அப்டேட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பயனர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு கோளாறு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வைரஸ்

வைரஸ்

புதிய பாதுகாப்பு பிழையானது ஐபோன் கருவியை யார் வேண்டுமானாலும் இயக்க வழி செய்யும் என சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது.

பிழை

பிழை

ஐஓஎஸ் இயங்குதளத்தின் பாதுகாப்பு பிழை ஹேக்கர்கள் அனுப்பும் குறுந்தகவல் மூலம் பரப்பப்படுகின்றது. இந்த குறுந்தகவலில் வரும் லின்க்'களை கிளிக் செய்வோரின் தரவுகள் அனைத்தும் ஹேக்கர்களால் இயக்க முடியும்.

அப்டேட்

அப்டேட்

ஐபோன் தரவுகளின் பாதுகாப்பில் பிழை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவசர கதியில் ஆப்பிள் நிறுவனம் இந்தப் பிழையை சரி செய்து வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் வழங்கியுள்ளது.

கோரிக்கை

கோரிக்கை

ஐபோன் பயனர்கள் இந்த பாதுகாப்பு பிரச்சனையைச் சரி செய்ய தங்களது ஐபோன்களை ஐஓஎஸ் பதிப்பு 9.3.5 பதிவிறக்கம் செய்து கொள்ள ஆப்பிள் நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

ஆப்பிள் ஐபோன் கருவியின் புதிய ஐஓஎஸ் 9.3.5 பதிப்பிற்கு அப்டேட் செய்ய ஐபோனின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாஃப்ட்வேர் அப்டேட் -- டவுன்லோடு அன்டு இன்ஸ்டால் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Apple fixed a major security problem and you should update your iPhone right now

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X