பழைய ஆப்பிள் iPhone னுக்கு 100 மடங்கு அதிக விலையா? ஏலத்தில் வெறித்தனமாக விலை போன ஐபோன்.!
ஆப்பிள் (Apple) என்றாலே முதலில் நினைவில் வருவது ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) சாதனங்கள் தான்.. அதேபோல, ஐபோன் என்று சொன்ன உடனேயே அது விலை அதிகமேப்பா என்ற எண்ணமும் எல்லோருடைய மனதிலும் தோன்றி மறைந்திருக்கும். இப்போது ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த சமீபத்திய ஐபோன் மாடல்களான ஐபோன் 14 (iPhone 14 series) சீரிஸ் மாடல்களின் விலை என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால், ஐபோனின் வரலாறு துவங்கிய முதல் ஐபோன் (iPhone First Gen) மாடலின் விலை என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அது எப்போது அறிமுகமானது தெரியுமா? ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த முதல் ஐபோன் மாடலான ஐபோன் ஜென் 1 மாடலின் தற்போதைய விலை எவ்வளவு தெரியுமா? சமீபத்தில் நடந்த ஒரு ஏலத்தில், ஐபோன் ஜென் 1 மாடலின் விலை அதன் அசல் விலையை விட, 100 மடங்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா?

பழைய ஐபோன் மாடலுக்கு 100 மடங்கு அதிக விலையா? எப்படி?
நம்புங்க மக்களே.. இது தான் உண்மை. எப்போதுமே ஆண்ட்ராய்டு போன்களை விட, ஆப்பிளின் ஐபோன் சாதனங்களுக்கு மட்டும் அதிக மதிப்பு இருப்பது பற்றி நாம் அறிந்திருப்போம். பழைய ஐபோன் மாடல்களை புத்தம் புதிதாக வைத்திருக்கும் போது, ஏல சந்தையில் அதன் மதிப்பு அதிகரிக்கிறது என்பதே உண்மையாகும். இது தான் வழக்கமும் கூட, முதல் ஐபோன் மாடலுக்கும் இதுவே உண்மையாக உள்ளது. சமீபத்தில் நடந்த ஏலத்தில், ஐபோன் முதல் ஜென் மாடல் சாதனம் 60,000 அமெரிக்க டாலருக்கு (American dollar) ஏலம் விடப்பட்டுள்ளது.
தெரியாதவர்களுக்கு, முதல் ஜென் ஐபோன் சாதனம் ஆப்பிள் (Apple First Gen iPhone) நிறுவனத்தால் முதன் முதலில் 2007 இல் அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாக, ஸ்மார்ட்போன்கள் போன்ற நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்களின் மதிப்பு பல ஆண்டுள் பழமையாகும் போது குறைகிறது. இருப்பினும், ஆப்பிள் ஐபோன் விலை மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் எகிறிவிட்டது என்கிறது இந்த ஏலத்தின் முடிவுகள்.

10 வருட பழமையான iPhone First Gen போனுக்கு 63,356 டாலர் மதிப்பா?
பத்தாண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் ஜென் 1 மாடலின் அசல் சில்லறை விலையை விட, இப்போது இதன் விலை அதிகமாகவுள்ளது. காரணம், இப்போது இவை சேகரிப்பு பொருட்களாக சேகரிக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் அசல் பேக்கேஜிங்கில் இருக்கும், திறக்கப்படாத ஐபோன் ஜென் 1 மாடலின் விலை தற்போதைய ஆன்லைன் ஏலத்தில் 63,356.40 அமெரிக்க டாலர்களை எட்டியது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஃபோனின் அசல் விலையான 599 அமெரிக்க டாலர்களை விட 100 மடங்குக்கும் அதிகமான மதிப்பை இது இப்போது கொண்டுள்ளது. ஏலம் முதலில் 2,500 அமெரிக்க டாலர்களில் தொடங்கியது. ஆரம்பத்தில் அதிகபட்சமாக 50,000 அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் செல்லும் என நம்பப்பட்டது. ஆனால், அசல் பேக்கேஜிங் பாக்சில் இருக்கும் ஐபோனின் மதிப்பு எதிர்பார்த்த தொகையை தாண்டி சென்றுள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஐபோன் மாடல் இது தானா?
முன்னால் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) 2007 இல் ஐபோனை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாரஸ்யமாக, இப்போது ஏலம் விடப்படும் இந்த குறிப்பிட்ட ஐபோன் அமெரிக்காவில் "தி டாக்டர் & தி திவா" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இடம்பெற்றது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஐபோன் மாடலின் உரிமையாளர் கரேன் கிரீன் ஆவார். இந்த ஐபோனின் பெட்டியை ஏன் திறக்கவில்லை என்று கேட்டபோது, "என் புது ஐபோனை எடுத்து பயன்படுத்துவதை விட, பாதுகாப்பாக வைக்க நினைத்தேன், இது என்றாவது ஒரு நாள் விலைமதிப்பற்றதாக மாறும் என்று நம்பினேன்." என்று அவர் கூறியுள்ளார்.
வெறும் 599 டாலருக்கு வாங்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் ஜென் 1 சாதனம் 10 ஆண்டுகளுக்கு பிறகு 100 மடங்கு அதிக விலையில் ஏலம் விடப்பட்டுள்ளது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications