Home
News

ஆடிப்போன Apple ரசிகர்கள்.. 18.8-இன்ச் டிஸ்பிளே கொண்ட Foldable iPad.. எப்போ தான் அறிமுகமாகும்?

பலருடைய கவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஆப்பிளின் புதிய ஐபோன் 17 சீரீஸ் மீதும், குறிப்பாக ஐபோன் 17 ஏர் மாடல் மீதும் தான் இருக்கிறது. அதில் சிலருடைய கவனம் - ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் மாடல் மீது உள்ளது.

பல சமீபத்திய லீக்ஸ்கள் - இது 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று பரிந்துரைக்கின்றன. போல்டபிள் ஐபோனுக்கு சமமாக 18.8 இன்ச் அளவிலான ஸ்க்ரீன் உடனான ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபேட் அல்லது போல்டபிள் மேக் பற்றிய லீக்ஸ்களும் வெளியாகியுள்ளன.

18.8-இன்ச் டிஸ்பிளே கொண்ட Foldable iPad.. எப்போது அறிமுகம்?

ஒரு கட்டத்தில், போல்டபிள் ஐபோனுக்கு முன்பாக, இது தான் சந்தைக்கு வரும் ஆப்பிளின் முதல் போல்டபிள் ஸ்க்ரீன் டிவைஸ் ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இப்போது அதெல்லாம் மாறிவிட்டது. ஜிஎப் செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் ஆன ஜெஃப் புவின் புதிய அறிக்கையானது, ஆப்பிளின் போல்டபிள் ஐபேட் அல்லது மேக் ஆனது அறிமுகத்திற்கு "நாம் நிறைய காலம் காத்திருக்க வேண்டும்" என்று கூறுகிறது.

அதாவது ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபேட் அல்லது மேக் அறிமுகம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இது 2027 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் நோக்கத்தின் கீழ் 2026 நான்காம் காலாண்டு வெகுஜன உற்பத்தியில் நுழையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது எவ்வளவு தாமதமாக அறிமுகமாகும் என்பதை பற்றி ஜெஃப் பு விரிவாக பேசவில்லை.

ஆப்பிள் தொடர்பான நம்பகமான தகவல்களை வழங்கும் ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன், போல்டபிள் ஐபேட் ஆனது 2028 ஆம் ஆண்டில் தான் அறிமுகமாகும் என்று நினைக்கிறார். மேலும் அவர் இது 20-இன்ச் அளவிலான ஸ்க்ரீன் உடன் வரும் என்றும் நம்புகிறார். இது ஐபேட் ஆக இருக்குமா அல்லது மேக் ஆக இருக்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை, ஆனால் எப்படியிருந்தாலும் இது மடிக்கக்கூடிய ஸ்க்ரீனை கொண்ட டிவைஸ் ஆக இருக்கும்; ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோனை விட பெரியதாக இருக்கும்.

போல்டபிள் ஐபோன் எப்போது அறிமுகமாகும்? பல அறிக்கைகள் போல்டபிள் ஐபோனிற்கான மேம்பாடு இப்போது முழு வீச்சில் இருப்பதாகவும், இது 2026 இல் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கின்றன. குறிப்பாக ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மனின் கூற்றுப்படி, இது ஐபோன் 18 சீரிஸ் உடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படலாம்.

மேலும் இது ஐபோன் டென் (iPhone X) மாடலுக்கு பிறகு ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோனில் செய்யும் மிகப்பெரிய ரீடிசைன் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7) மாடலை போன்ற ஒரு புக் ஸ்டைல் டிசைனை (Book Style Design) பின்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

அதாவது ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் ஆனது டேப்லெட் போல திறக்கும் ஒரு பெரிய இன்னர் டிஸ்பிளேவை பேக் செய்யலாம். அதனுடன் வழக்கமான பயன்பாட்டிற்கான சிறிய கவர் டிஸ்பிளேவையும் கொண்டிருக்கலாம். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, இது சுமார் $2,000 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1.72 லட்சதிற்கு அறிமுகம் செய்யப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை போல்டபிள் ஐபோன் மாடலில் 7.8 இன்ச் அளவிலான இன்னர் டிஸ்பிளே மற்றும் 5.5 இன்ச் அளவிலான கவர் டிஸ்பிளேவை இடம்பெறலாம். திறந்திருக்கும் போது இது 4.5 மிமீ மட்டுமே இருக்கும் என்றும், மடிக்கும்போது சுமார் 9 மிமீ இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

போல்டபிள் ஐபோனுக்காக ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய டூயல் கேமரா லென்ஸ் அமைப்பை பயன்படுத்தலாம். மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட டச் ஐடி சென்சாருக்கு (Touch ID Sensor) ஆதரவாக ஃபேஸ் ஐடி அம்சத்தை (Face ID Feature) கைவிட்ட முதல் ஐபோன்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இது ஸ்லிம் ஆன வடிவமைப்பை தக்கவைக்க உதவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple First Foldable iPad or Foldable Mac With 18 8 Inch Display Launch Delay Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X