மீண்டும் அதே பிரச்சனையில் சிக்கிய ஆப்பிள் நிறுவனம்: இந்தமுறை 20 மில்லியன் டாலர் அபராதம்.!

|

ஐபோன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் தனித்துவமான வசதியைக் கொண்டுள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஆப்பிள் நிறுவனம் எப்போதுமே சற்று உயர்வான விலையில் தான் ஐபோன்களை அறிமுகம் செய்கிறது.

20 மில்லியன் டாலர் அபராதம்

20 மில்லியன் டாலர் அபராதம்

குறிப்பாக விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் ஐபோன்களில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது பிரேசில் நீதிமன்றம். மேலும் இதுசார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

சார்ஜர் அடாப்டர்

சார்ஜர் அடாப்டர்

ஆப்பிள் நிறுவனம் சமீபகாலமாக ஐபோன்களுடன் சார்ஜர் அடாப்டர்-ஐ வழங்காமலே விற்பனை செய்து வருகிறது. இதனால் ஐபோன் வாடிக்கையாளர்கள் சார்ஜர் அடாப்டரை தனியாக விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலை தான் இப்போது உள்ளது.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

ஆப்பிள் நிறுவனம்

மற்ற அனைத்து செல்போன் நிறுவனங்களும் சார்ஜர் உடன் தான் போன்களை விற்பனை செய்கின்றன. ஆப்பிள் நிறுவனம் மட்டும் இந்த முறையைப் பின்பற்றி வருகின்றன. குறிப்பாகச் சற்று உயர்வான விலையில் ஐபோன்கள் விற்பனை செய்யப்படும் நிலையிலும், அதற்கான சார்ஜர் அடாப்டரை கூடவே வழங்காமல் விற்பது ஐபோன் பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..

மின்னணு கழிவு

மின்னணு கழிவு

அதாவது மின்னணு கழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு வேண்டி சார்ஜரை ஐபோனுடன் விற்க முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் கூறிவருகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்திருக்கிறது.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

சிவில் நீதிமன்றம்

சிவில் நீதிமன்றம்

மேலும் சமீபத்தில் சார்ஜர் இல்லாமல் ஐபோன் 12 மாடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது பிரேசிலில் உள்ள சாவ் பாலோ சிவில் நீதிமன்றம்.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

ஐபோன 12 மற்றும் ஐபோன் 13

ஐபோன 12 மற்றும் ஐபோன் 13

இதுதவிர கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரேசிலில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களை வாங்கிய பயனர்கள் அனைவருக்கும் சார்ஜர் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஐபோன்களில் சார்ஜ் வைக்காததற்காக 2-வது முறை ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பாக இருக்க சிறந்த செயலி: பெண்களுக்கு மிக அவசியம்- டிராக், எஸ்ஓஎஸ், டேட்டா, பேட்டரி பாதுகாப்பு!பாதுகாப்பாக இருக்க சிறந்த செயலி: பெண்களுக்கு மிக அவசியம்- டிராக், எஸ்ஓஎஸ், டேட்டா, பேட்டரி பாதுகாப்பு!

ஐபோன் எஸ்இ 4

ஐபோன் எஸ்இ 4

மேலும் ஆப்பிள் நிறுவனம் கூடிய விரைவில் ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, அடுத்த தலைமுறை iPhone SE மாடல் ஆனது 6.1-இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்ப்ளேவை பேக் செய்யும். ஐபோன் எஸ்இ4 மாடலின் டிஸ்பிளேவின் மேற்புறத்தில் நாட்ச் கட்அவுட் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

ஐபோன் எஸ்இ 4

ஐபோன் எஸ்இ 4

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, ஐபோன் எஸ்இ 4 ஆனது ரூ.33,674 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் இந்த விலை நிர்ணயம் எந்த அளவிற்கு உண்மையானதாக இருக்குமென்று தெரியவில்லை. குறிப்பாக இந்த போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Apple fined $20 million for selling iPhones without chargers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X