டிராய் செயலியை இனிமேல் ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.!
ஆப்பிள் நிறுவனம் தனது இயங்குதளத்தில் எஸ்.எம்.எஸ். மற்றும் கால் ரிப்போர்டிங் ஃபிரேம்வொர்க் வசதியை அறிமுகம் செய்தது. இது மொபைல் போன் மற்றும் மெசேஜ் செயலிகளுடன் நேரடியாக இணைந்திருக்கிறது.
இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது, குறிப்பாக இந்நிறுவனத்தின் சாதனங்கள் அனைத்தும் சிறந்த தரம் கொண்டவையாக இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

மேலும் டிராய் எச்சரிக்கைக்கு ஒருவழியாக ஒப்புக் கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் தனது ஐபோன் மாடல்களில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் வழிமுறைகளை தற்சமயம் அனுமதிக்கிறது.

ஜனவரி 2019
குறிப்பாக வரும் ஜனவரி 2019-க்குள் ஐபோன் சாதனங்களில் டிராய் உருவாக்கிய டு நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb) செயலியை அனுமதிக்கவில்லை எனில், ஐபோன்களில் இந்திய செல்லுலார் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில் வேறு வழியின்றி ஆப்பிள் செயலியை அனுமதிக்கிறது.

டிராய்
தற்சமயம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிராய் அமைப்பின் செயலி கிடைக்கிறது, வுசுயுஐ னுNனு - னுழ ழேவ னுளைவரசடி' என பெயரிடப்பட்டு இருக்கும் செயலி பயனர்களுக்கு தேவையற்ற அழைப்புகள் இ குறுந்தகவல் உள்ளிட்டவற்றை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் பிளே ஸ்டோர்
டிராய் அமைப்பின் இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் 2016-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது, பின்பு செயலியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனம் இந்த
செயலியை தனது ஆப் ஸ்டோரில் அனுமதிக்காமல் இருந்தது.

பாதுகாப்பு விதி
இருந்தபோதிலும் பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளாத செயலியை அனுமதி்ப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. இப்போது ஆப்பிள் சாதனங்களில் கிடைக்கும் இந்த செயலியின் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

எஸ்.எம்.எஸ். மற்றும் கால் ரிப்போர்டிங்
ஆப்பிள் நிறுவனம் தனது இயங்குதளத்தில் எஸ்.எம்.எஸ். மற்றும் கால் ரிப்போர்டிங் ஃபிரேம்வொர்க் வசதியை அறிமுகம் செய்தது. இது மொபைல் போன் மற்றும் மெசேஜ் செயலிகளுடன் நேரடியாக இணைந்திருக்கிறது. இது குறிப்பிட்ட போலி தகவல்களை மட்டுமே அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும்.


Click it and Unblock the Notifications