Home
News

நானே நேரடி ஆஃபர் தர்றேன்! Apple Festive Season Sale-ல் ஐபோன், ஆப்பிள் வாட்ச், மேக்புக் மீது ரூ.10000 தள்ளுபடி!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை முடிவுபெற்று, பிளிப்கார்ட் கிராண்ட் பெஸ்டிவ் டேஸ் விற்பனையானது வருகிற அக்.20 வரை நடக்கவுள்ள நிலையில்.. அமேசான் கிரேட் இந்தியன் விற்பனையானது தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில்.. ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.

ஆப்பிள் ஃபெஸ்டிவ் சீசன் சேல் (Apple Festive Season Sale) என்கிற பெயரின்கீழ் நடக்கும் இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் தயாரிப்புகளின் மீது ரூ.10,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் பழைய ஐபோனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.6,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

ஐபோன், ஆப்பிள் வாட்ச், மேக்புக் மீது ரூ.10000 தள்ளுபடி!

என்னென்ன ஆப்பிள் தயாரிப்புகள் மீது என்னென்ன தள்ளுபடி? உங்களிடம் எச்டிஎப்சி பேங்க் கார்டு இருந்தால், லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.நடந்துகொண்டிருக்கும் ஆப்பிள் பண்டிகை கால விற்பனையின் போது, ​​ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மாடல்கள் மீது ரூ.6000 தள்ளுபடி கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மாடல்களை வாங்க விரும்பினால் ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை சற்றே பழைய ஐபோன் 14 (iPhone 14) , ஐபோன் 13 (iPhone 13) மற்றும் ஐபோன் எஸ்இ 2022 (iPhone SE 2022) மாடல்களை வாங்க விரும்பினால், அவைகள் மீதும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 14 மீது ரூ.4,000 தள்ளுபடியும், ஐபோன் 13 மீது ரூ.3,000 தள்ளுபடியும் மற்றும் ஐபோன் எஸ்இ 2022 மாடல் மீது ரூ.2,000 தள்ளுபடியும் அணுக கிடைக்கிறது. ஆப்பிள் இணையதளத்தில் பகிரப்பட்ட விவரங்களின்படி, எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகளை (HDFC Bank Credit Cards) பயன்படுத்தி வாங்கும் போது மட்டுமே மேற்கண்ட தள்ளுபடிகள் பொருந்தும். மேலும் தகுதியான மாடல்களை எக்ஸ்சேஞ்ச் (Exchange) செய்யும் போது ரூ.67,800 வரையிலான தள்ளுபடியை பெறலாம்.

ஐபோன்களை தவிர்த்து மற்ற ஆப்பிள் தயாரிப்புகள் மீது கிடைக்கும் சலுகைகளை பொறுத்தவரை, எம்2 சிப் கொண்ட 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் (MacBook Air) மாடல்கள், மேக் ஸ்டுடியோ மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ (MacBook Air Pro) மற்றும் இதைவிட பெரிய மாடல்களில் ரூ.10,000 வரையிலான தள்ளுபடியை பெறலாம்.

இதேபோல எம்1 சிப் உடனான மேக்புக் ஏர் (MacBook Air) மீது ரூ.8,000 தள்ளுபடியும், 24-இன்ச் ஐமேக் (24-inch iMac) மீது ரூ.5,000 தள்ளுபடியும் மற்றும் மற்றும் மேக் மினி (Mac Mini) மீது ரூ.5,000 தள்ளுபடியும் அணுக கிடைக்கிறது. மேலும் 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ (iPad Pro) மாடல்கள் மற்றும் ஐபேட் ஏர் (iPad Air) மாடல்கள் மீது ரூ.5000 தள்ளுபடி விலையின்கீழ் வாங்க கிடைக்கின்றன

மேலும் ஐபேட் 9த் ஜெனரேஷன் (iPad 9th generation) மற்றும் ஐபேட் 10த் ஜெனெரஷன் (iPad 10th generation) மாடல்கள் மீது முறையே ரூ.3,000 மற்றும் ரூ.4000 தள்ளுபடி கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் ஆப்பிள் ஐபேட் மினி (iPad mini) மாடலை வாங்க விரும்பினால், நடந்து கொண்டிருக்கும் ஆப்பிள் பண்டிகை கால விற்பனையின் போது ரூ.3,000 தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

மேலும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 (Apple Watch Ultra 2) மாடலானது ரூ.500 தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (Apple Watch Series 9) மற்றும் செக்கெண்ட் ஜெனரேஷன் ஆப்பிள் வாட்ச் எஸ்இ ( Apple Watch SE) மாடல்கள் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.2,000 தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் ஹோம்பாட் (Apple HomePod) மற்றும் செக்கெண்ட் ஜெனரேஷன் ஏர்பாட்ஸ் ப்ரோ (Second generation AirPods Pro) மீது ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Festive Season Sale Up to Rs 10000 Discount on iPhone Apple Watch Macbook iPad AirPods
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X