விற்பனை துவக்கம் : மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.!!

Written By:

புதிய ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகள் விற்பனைக்கு வந்தது. வழக்கம் போல புதிய கருவியை வாங்க மக்கள் கூட்டம் சேர்ந்ததோடு இம்முறை ரோபோட் ஒன்றும் சிட்னி நகர் வந்தடைந்திருக்கின்றது.

விற்பனை துவக்கம் : மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.!!

இம்முறை சுமார் 12 முதல் 13 மில்லியன் ஐபோன்கள் விற்பனையாகும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். முந்தைய ஐபோன் 6 மாடல்கள் வெளியான முதல் வாரம் சுமார் 10 மில்லியன் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு சீனாவில் ஐபோன் 6எஸ் வெளியீடு சற்று தாமதம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

லூசி கெல்லி எனும் விற்பனை அதிகாரி இயக்கும் லூசி எனும் ரோபோட் சிட்னி ஐஸ்டோரில் மழையையும் பொருட்படுத்தாமல் கருவியை வாங்க இருக்கின்றது.

விற்பனை துவக்கம் : மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.!!

ஐபோன் ப்ரியர்கள் சான் பிரான்சிஸ்கோ முதல் லண்டன் மற்றும் சிட்னி என அனைத்து ஐஸ்டோர்களிலும் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே காத்திருக்க துவங்கிவிட்டனர். எனினும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஐபோன் ப்ரியர்களின் ஆசை இன்று நிறைவேறி விட்டது என்றே கூறலாம்.

 

Read more about:
English summary
Apple fans brave Sydney rain as new iPhone 6s hit stores. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot