தூள் கிளப்பும் ஆப்பிள்- மொத்தமும் இந்தியாவில் தான்: 1 ஆண்டில் ரூ.10,000 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் ஏற்றுமதி!

|

உலகளாவிய உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது, போன்களுக்கான ஏற்றுமதி மையமாக இந்தியாவை உருவாக்குவது மற்றும் உள்நாட்டு தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்தல் போன்ற பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஆப்பிள் அதன் முதலாண்டு செயல்திறனிலேயே அடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள்

விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள்

ஆப்பிள் சாதனங்கள் அதன் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரண்டு நிறுவனங்கள் மூலமாக ஆப்பிள் இலக்கை அடைந்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களில் விஸ்ட்ரான் பெற்றிருக்கிறது. குறிப்பிட்ட காரணங்களால் விஸ்ட்ரான் நிறுவனம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் மூடும் நிலை ஏற்பட்டது இதன் காரணமாக விஸ்ட்ரான் அதிக பங்கை பெற்றிருக்கிறது. ஆப்பிளின் மூன்றாவது ஒப்பந்த உற்பத்தியாளராக பெகாட்ரான் இருக்கிறது. இந்த நிறுவனம் ஏப்ரல் 1 முதல் உற்பத்தியை தொடங்கும். எனவே வரும் ஆண்டுகளின் செயல்பாட்டில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்ட்ரான் நிறுவனம் கர்நாடகாவிலும், ஃபாக்ஸ்கான் தமிழகத்திலும் அமைந்திருக்கிறது.

அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட மாடல்கள்

அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட மாடல்கள்

அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட மாடல்களில் ஐபோன் எஸ்இ 2020-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. இது விஸ்ட்ரான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. மேலும் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 ஆகிய சாதனங்கள் ஃபாக்ஸ்கானால் தயாரிக்கப்படுகின்றன. ஃபாக்ஸ்கான் விரைவில் ஐபோன் 13 சாதனத்தை இந்தியாவில் தயாரிக்க தொடங்கும் என ஆதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

கடந்த நிதியாண்டில் இந்தியாவின் 10 முதல் 15 சதவீதம் வரையில் தான் ஐபோன் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருந்து. உலகளாவிய உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது, போன்களுக்கான ஏற்றுமதி மையமாக இந்தியாவை உருவாக்குவது மற்றும் உள்நாட்டு தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்தல் போன்ற பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஆப்பிள் அதன் முதலாண்டு செயல்திறனிலேயே அடைந்துள்ளது.

அரசு அறிவித்த உற்பத்தி சார்ந்த ஊக்க சலுகை

அரசு அறிவித்த உற்பத்தி சார்ந்த ஊக்க சலுகை

ஸ்மார்ட்போன் பிஎல்ஐ என்பது இதுபோன்ற முதல் திட்டமாகும். தொடர்ந்து அரசாங்கம் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தியது. அரசு அறிவித்த உற்பத்தி சார்ந்த ஊக்க சலுகை திட்டத்தின் கீழ் 70 முதல் 50 சதவீத உள்நாட்டு உற்பத்தி தேவையை ஆப்பிள் பூர்த்தி செய்திருக்கிறது. இந்த திட்டத்தில் கீழ் இந்திய நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் செயலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபாட் ஏர் 5 மற்றும் மேக் ஸ்டுடியோ கம்ப்யூட்டர்

ஐபாட் ஏர் 5 மற்றும் மேக் ஸ்டுடியோ கம்ப்யூட்டர்

சமீபத்தில் ஆப்பிள் இந்த ஆண்டின் முதல் தயாரிப்பு நிகழ்வை நடத்தி முடித்தது. எம்1 சிப்செட் கொண்ட ஐபாட் ஏர் 5 மற்றும் மேக் ஸ்டுடியோ கம்ப்யூட்டர் ஆகியவற்றை அறிமுகம் செய்ததது. ஆப்பிள் புதிய மேக் ப்ரோவை டீஸ் செய்தது, ஆனால் நிறுவனம் இதுகுறித்த விவரங்களை வெளியிடவில்லை. நிறுவனம் மற்றொரு நிகழ்வில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே மாதிரியான வடிவமைப்புடன் சாதனங்கள்

ஒரே மாதிரியான வடிவமைப்புடன் சாதனங்கள்

ஐபோன் எஸ்இ 3 ஆனது 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் எஸ்இ 2 இன் வாரிசாக இருக்கிறது. ஐபாட் ஏர் 5 ஆனது அதே ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபாட் ஏர் 4 இன் வாரிசாக இருக்கிறது. இந்த இரண்டு சாதனங்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும் வேறுபட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த சாதனங்கள் சக்திவாய்ந்த உட்புறங்களுடன் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. ஐபாட் ஏர் ஆனது ஐந்தாம் தலைமுறை சாதனத்தின் சமீபத்திய எம்1 செயலி உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் 13 தொடரை இயக்கும் பயோனிக் சிப் பொருத்தப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் இது மிக சக்திய வாய்ந்த எம்1 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த எம்1 சிப்செட் வசதி

சக்தி வாய்ந்த எம்1 சிப்செட் வசதி

ஏர் டேப்லெட் ஆப்பிளின் இடைப்பட்ட ஐபாட் ஆகும், ஐபாட் ப்ரோ மாடலே நிறுவனத்தின் முதன்மை மாடலாக இருந்த நிலையில் ஐபாட் ஏர் 5 சக்தி வாய்ந்த எம்1 சிப்செட் மூலம் இயக்கப்படும் போது இது மிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. நியாயமான விலையில் ஆப்பிள் ஆப்பிள் சமீபத்தில் வழங்கிய சிறந்த அம்சங்களுடன் கூடிய சாதனங்களில் இதுவும் ஒன்றாகும்.

Best Mobiles in India

English summary
Apple Exports Rs.10,000 Crore Worth Iphones From India at One Year

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X