Home
News

என்ன ரங்கா ஜோக் காட்றீயா.. iPhone 16e SALE ஆரம்பிச்ச பின்ன விளக்கம் கொடுக்குறீங்க.. ஏன் வைக்கல தெரியுமானு?

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் புதிய ஐபோன் 16இ (iPhone 16e) மாடலானது, இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் இன்று (பிப்.28) முதல் திறந்த விற்பனைக்கு வந்துது. ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல ஐபோன் 16இ மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும் வாங்க கிடைக்கிறது. இதற்கிடையில், விற்பனை தொடங்கிய பின்னர் "ஐபோன் 16இ மாடலில் இதை ஏன் வைக்கல தெரியுமா?" என்பது குறித்த விளக்கம் ஒன்றை ஆப்பிள் வெளியிட்டுள்ளது.

iPhone 16e SALE ஆரம்பிச்ச பின்ன விளக்கம் கொடுக்கும் Apple நிறுவனம்!

ஐபோன் 16இ மாடலானது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-க்கான ஆதரவுடன் (Apple Intelligence Support) வந்தாலும் கூட, மற்ற லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களில் காணப்படும் டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island), மேக்ஃசேப் (MagSafe) மற்றும் அல்ட்ரா-வைட்பேண்ட் (Ultra-Wideband) இணைப்புக்கான ஆதரவு போன்ற பிற அம்சங்களை கொண்டிருக்கவில்லை

இவைகளில் மேக்ஃசேப் ஆதரவு ஏன் ஐபோன் 16இ மாடலில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை ஆப்பிள் கூறியுள்ளது. ஐபோன் 16இ பற்றிய தனது மதிப்பாய்வில் ஜான் க்ரூபர் என்பவர், மேக்ஃசேப்-க்கான ஆதரவு இல்லாதது ஐபோன் 16இ மாடலில் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க வன்பொருள் குறைபாடுகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.

மேலு ஐபோன் 16இ மாடலின் டார்கெட் ஆடியன்ஸ்களில் பெரும்பாலான பயனர்கள் மேக்ஃசேப்-ஐ பயன்படுத்துவதில்லை என்று ஆப்பிள் பிரதிநிதிகள் தன்னிடம் கூறியதாகவும் க்ரூபர் கூறியுள்ளார்

இந்த பயனர்கள் பொதுவாக கேபிளை பயன்படுத்தி சார்ஜ் செய்வதை விரும்புகிறார்களாம். புதிய ஐபோன் 16இ மாடலில் பழைய லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ஐபோன் 16இ மாடலில் மேக்ஃசேப் ஆதரவு இல்லாததால், பயனர்கள் க்யூஐ (Qi) சார்ஜரை பயன்படுத்தி இந்த மாடலை 7.5W வேகத்தின் கீழ் மட்டுமே சார்ஜ் செய்ய முடியும்.

ஆனால் ஆப்பிளின் மற்ற லேட்டஸ்ட் ஐபோன் மாடல்கள் ஆன ஐபோன் 16 (iPhone 16) மற்றும் ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) ஆகிய மாடல்கள் மேக்ஃசேப்-ஐ பயன்படுத்தி முறையே 15W மற்றும் 25W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை பெறுகின்றன.

இதுமட்டுமின்றி ஐபோன் 16இ மாடலில் அல்ட்ரா-வைட்பேண்ட் இணைப்புக்கான ஆதரவும் இல்லை. அல்ட்ரா-வைட்பேண்ட் இணைப்பின் வழியாகத்தான் ஆப்பிள் ஏர்டேக்ஸ் மற்றும் அது போன்ற ஆக்சஸெரீஸ்களின் கண்காணிப்புகள் துல்லியமாக இருப்பது உறுதி செய்யப்படும். இதுவும் இல்லாததது ஐபோன் 16இ மாடலின் இன்னொரு பெரிய குறையாக பார்க்கபடுகிறது. குறைகள் ஒருபக்கம் இருக்க ஐபோன் 16இ மாடலை கண்களை மூடிக்கொண்டு வாங்க 4 தரமான காரணங்களும் உள்ளன:

01. புதிய மற்றும் மாடர்ன் டிசைன்: ஐபோன் 16இ அறிமுகத்தின் மூலம் காணாமல் போனது எஸ்இ சீரீஸ் மட்டுமல்ல ஐபோன் எஸ்இ 3 மாடலின் காலாவதியான தோற்றமும் தான். ஐபோன் 16இ ஆனது 6.1 இன்ச் டிஸ்பிளே மற்றும் ஃபேஸ் ஐடிக்கான நாட்ச் கொண்ட நேர்த்தியான, நவீன வடிவமைப்க் கொண்டுள்ளது. இதன் பிளாட் அலுமினியம் பிரேம் ஆனது பிரீமியம் உணர்வை தருகிறது!

02. சக்திவாய்ந்த பெர்ஃபார்மென்ஸ்: ஐபோன் 16 ஆனது ஐபோன் 16 மாடலில் காணப்படும் அதே ஏ18 சிப்பை கொண்டுள்ளது, இது சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது. 8ஜிபி ரேம் மற்றும் 4-கோர் ஜிபியு உடன் வரும் ஐபோன் 16இ ஆனது அன்றாடப் பணிகள் முதல் திவீரமான கிராபிக்ஸ் கேம்கள் வரை அனைத்தையும் அசால்ட் ஆக கையாளும். எல்லாவற்றை விட முக்கியமாக இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குவதாக ஆப்பிள் கூறுகிறது

03. ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்கள்: ஐபோன் 16இ மாடல் ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ மூலம் இயக்கப்படும் அம்சங்களை முழுமையாக ஆதரிக்கிறது. இதன் பொருள், ஐபோன் 16இ ஆனது வரவிருக்கும் ஆண்டுகளில் ஏஐ தொடர்பான அப்டேட்கள் மற்றும் மேம்பாடுகளை பெறும்; இதன் முன்னோடியை விட நீண்ட காலம் தொடர்புடையதாக, அவுட் டேடட் மாடல் ஆகாமல் இருக்கும்.

04. ஆக்ஷன் பட்டன்: முதன்முதலில் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்ஷன் பட்டன், ஐபோன் 16இ மாடலிலும் உள்ளது. இது மற்றொரு பெரிய மேம்படுத்தலாகும். இது பாரம்பரிய ம்யூட் சுவிட்சை ரீபிளேஸ் செய்கிறது மற்றும் கேமரா, ஃப்ளாஷ்லைட் அல்லது விஷுவல் இன்டெலிஜென்ஸ் போன்ற அம்சங்களை விரைவாக அணுகுவதற்கு ஷார்ட்கட்களைத் கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple Explains Why Its Removed MagSafe Support in iPhone 16e Because Users Prefer Charging Cable
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X