Home
News

ரெடி பண்ணிக்கோங்க- என்னனென்ன தெரியல., நிறைய இருக்கு: செப்., 14 நடக்கும் ஆப்பிள் நிகழ்வு!

ஐபோன் 12 சீரிஸ் உடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் தனது ஐபோன் 13 சீரிஸ் சாதனத்தை மிகப் பெரிய மேம்பாட்டுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிறந்த கேமரா, பெரிய பேட்டரி, அதிக புதுப்பிப்பு விகித எல்டிபிஓ டிஸ்ப்ளேக்கள் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பானது அப்படியே இருக்கும் என கூறப்படுகிறது.

ஆப்பிள் நிகழ்வு

ஆப்பிள் நிகழ்வு

ஆப்பிள் செப்டம்பர் 14, 2021 அன்று நிகழ்வு நடத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 13 தொடர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் தொடர்ந்து பல ஆண்டுகளாக செப்டம்பர் மாதத்திலேயே புதிய ஐபோன் தொடரை அறிமுகப்படுத்தி வருகிறது. இது கடந்த ஆண்டு மட்டும் மாறுபட்டு இருந்தது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மட்டும் ஆப்பிள் ஐபோன் வெளியீடு தாமதமானது. இதை தவிர ஆப்பிள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் புதிய ஸ்மார்ட்போன் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 14 ஆப்பிள் நிகழ்வு உறுதி

செப்டம்பர் 14 ஆப்பிள் நிகழ்வு உறுதி

அதன்படி செப்டம்பர் 14, 2021-ல் ஆப்பிள் புதிய நிகழ்வை உறுதி செய்திருக்கிறது. ஐபோன் 13 என்பது தற்போது யூகிக்கப்பட்ட பெயராகவே இருக்கிறது. செப்டம்பர் 14 ஆம் தேதி ஆப்பிள் நிகழ்வு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அம்சங்களில் பெரிய மாற்றம் இருக்கும்

அம்சங்களில் பெரிய மாற்றம் இருக்கும்

ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, நிறுவனம் செப்டம்பர் 14, 2021 ஆப்பிள் புதிய நிகழ்வை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஐபோன் 12 தொடருடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் தனது ஐபோன் 13 தொடரில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதன் அம்சங்களில் பெரிய மாற்றம் இருக்கும். இந்த சாதனத்தில் பெரிய பேட்டரி, சிறந்த கேமரா உடன் உயர் புதுப்பிப்பு வீத எல்டிபிஓ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 13 தொடர் அறிமுகம் செய்யப்படலாம்

ஐபோன் 13 தொடர் அறிமுகம் செய்யப்படலாம்

ஐபோன் 13 தொடரில் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு சாதனங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இருப்பினும் நிறுவனத்தால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. வெளியான தகவலின்படி ஐபோன் 13 சாதனம் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டால் அக்டோபர் மாதம் சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் 7 சீரிஸ்

ஆப்பிள் வாட்ச் 7 சீரிஸ்

அதேபோல் நடக்க இருக்கும் நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் 7 சீரிஸ் உள்ளிட்ட பிற தயாரிப்புகளையும் ஆப்பிள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீடு தற்போது நடந்தாலும் வரையறுக்கப்பட்ட விற்பனைக்கு தாமதமாகலாம் என கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக உற்பத்தியில் தாமதமாகலாம் என கணிக்கப்படுகிறது. ஐபோன் 13 சீரிஸ் விலை சற்று அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி வாடிக்கையாளர்கள் பட்டாளம்

தனி வாடிக்கையாளர்கள் பட்டாளம்

ஐபோனுக்கு என்றே தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. உலகம் முழுவதும் ஐபோனுக்கு என தனி வரவேற்பு இருக்கிறது. காரணம் ஐபோனில் இருக்கும் தனித்துவ அம்சமே ஆகும். அதன்படி தற்போது 5ஜி இணைய வேகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும். சமீபத்தில் வெளியான ஐபோன் 12 சாதனமும் 5ஜி இணைப்பு ஆதரவோடு வந்தது.

மேம்பட்ட பிரத்யேக அம்சத்தோடு வரும்

மேம்பட்ட பிரத்யேக அம்சத்தோடு வரும்

ஐபோன் புதிய மாடல் மேம்பட்ட பிரத்யேக அம்சத்தோடு வரும் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோ சில தகவல்களை வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் ஐபோன் சாதனம் செயற்கைக்கோள் இணைப்பை ஆதரிக்கும் எனவும் பயனர்கள் செயற்கைகோள் நெட்வொர்க்கை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டார்.

லோ எர்த் ஆர்பிட் சேவை

லோ எர்த் ஆர்பிட் சேவை

இதுகுறித்து பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம், குவால்காம் எக்ஸ் 60 மோடமின் தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பை பயன்படுத்தி, ஐபோன் 13 சாதனமானது குறைந்த பூமி சுற்றுப்பாதை (லோ எர்த் ஆர்பிட்) (எல்இஓ) செயற்கைக்கோள்களுடன் நேரடியாக இணைக்க முடியும் என கூறினார். பல இடங்களில் எல்இஓ செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த தயாராகி வரும் நிலையில் ஆப்பிள் முன்கூட்டியே சரியாகி வருவதாக தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Apple event has been confirmed for September 14, 2021: Iphone 13 Series, Apple Watch 7 Might be Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X