Home
News

இந்த தேதிய குறிச்சு வச்சிக்கோங்க.. 1 இல்ல 2 இல்ல.. 7 புதிய தயாரிப்புகளை இறக்கி விடும் Apple.. இதோ லிஸ்ட்!

ஆப்பிள் (Apple) நிறுவனம் வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதியன்று வொண்டர்லஸ்ட் (Wonderlust) என்கிற பெயரின் கீழ் வெளியீட்டு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி இந்நிகழ்வில் புதிய ஐபோன்கள் அறிமுகமாகும். அதனுடன் வேறு என்னென்ன அறிமுகங்கள், அறிவிப்புகள் நடக்கும்? இதோ விவரங்கள்:

ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus): இந்த இரண்டு ஐபோன் 15 மாடல்களிலும் நாட்ச் வடிவமைப்பிற்கு ( Notch Design) பதிலாக டைனமிக் ஐலேண்ட் பில் ஷேப்டு கட்அவுட் (Dynamic Island Pill shaped cutout ) இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 இல்ல 2 இல்ல.. 7 புதிய தயாரிப்புகளை இறக்கி விடும் Apple.. இதோ லிஸ்ட்!

மேலும் இதன் கேமராக்களில் ஒரு முக்கியமான மேம்படுத்தல் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இவைகளின் மெயின் கேமராக்களானது 48எம்பி சென்சார் ஆக அப்கிரேட் செய்யப்படலாம். இவ்விரு மாடல்களுமே பிளாக், ப்ளூ, க்ரீன், பிங்க் மற்றும் யெல்லோ என்கிற கலர் ஆப்ஷன்களில் வெளியாகலாம்

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவல்களை நம்பும் பட்சத்தில், ஐபோன் 15 மாடலின் ஆரம்ப விலையில் $799 ஆகவும் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.66280 க்கும்), ஐபோன் 15 பிளஸ் மாடலின் ஆரம்ப விலை $899 ஆகவும் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.74570 க்கும்) அறிமுகம் செய்யப்படலாம்.

ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max): இவ்விரு ஐபோன்களுமே சில்வர், பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களில் டைட்டானியம் ஃப்ரேம் மற்றும் ஆக்ஷன் பட்டனுடன் அறிமுகமாகும் என்று நம்பப்படுகிறது.

கூடுதலாக, இந்த 2 மாடல்களுமே யூஎஸ்பி-சி போர்ட் உடனான 35W வரை பாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட் உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களில் எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகளை பொறுத்தவரை, ப்ரோ மேக்ஸ் வேரியண்ட்டில் பெரிஸ்கோப் கேமரா இடம்பெறலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவல்களை நம்பும் பட்சத்தில், ஐபோன் 15 ப்ரோ மாடலின் ஆரம்ப விலையில் $1,099 ஆகவும் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.91,160 க்கும்), ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை $1,299 ஆகவும் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.1,07,750 க்கும்) அறிமுகம் செய்யப்படலாம்.

எஸ்9 சிப் உடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (Apple Watch Series 9 with S9 chip): ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அதன் தோற்றத்தில் / வடிவமைப்பில் எந்த விதமான மாற்றத்தையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இருப்பினும், இதுவொரு புதிய சிப்புடன் வரக்கூடும் என்று வதந்திகள் பரவுகின்றன. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இரண்டு அளவுகளில் வரும் - 41 மிமீ மற்றும் 45 மிமீ.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 (Apple Watch Ultra 2): இந்த இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலனது, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தலைமுறை மாடலுடன் ஒப்பிடும் போது பெரிய அளவிலான மேம்படுத்தல்களை பெறுமா? என்று கேட்டால்.. நிச்சயம் இருக்காது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ஆனது அதே பழைய வடிவமைப்பை தக்க வைத்து கொள்ளும், இது 49 மிமீ அளவில் வரலாம்.

யூஎஸ்பி-சி போர்ட் உடனான ஏர்பாட்ஸ் ப்ரோ (AirPods Pro 2 with USB-C Port): புதிய ஐபோன்கள் யூஎஸ்பி-சி போர்ட்டிற்கு மாறுவதால் ஏர்போட்களும் யூஎஸ்பி-சி போர்ட்டிற்கு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஏர்பாட்ஸ் ப்ரோவின் இரண்டாம் தலைமுறை மாடலானது லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக யூஎஸ்பி-சி போர்ட்டைக் கொண்டிருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Apple Event 2023 List of New Launches on September 12th Including iPhone 15 Watch Ultra 2 and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X