செப்.12 வந்துடுச்சு.. இன்று நடக்கும் ஆப்பிள் iPhone 15 வெளியீட்டு நிகழ்வை LIVE ஆக பார்க்க உதவும் Links இதோ!
ஒருவழியாக ஒட்டுமொத்த டெக் உலகமும், ஆப்பிள் ரசிகர்களும் எதிர்பார்த்த நாள் இன்று (செப்.12) வந்துவிட்டது. இன்றிரவு நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் தான் ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்களை, அதாவது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.
வொண்டர்லஸ்ட் என்கிற தலைப்பின்கீழ் நடக்கவில்லை ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வின் மிக முக்கியமான அறிவிப்பாக புதிய ஐபோன் 15 சீரீஸ் இருக்கும். இதன்கீழ் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் அல்லது ஐபோன் 15 அல்ட்ரா என்கிற 4 மாடல்கள் அறிமுகமமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்.12 ஆம் தேதி இரவு நடக்கும் ஆப்பிளின் வெளியீட்டு நிகழ்வானது சரியான எத்தனை மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வை நேரடி ஒளிபரப்பாக பார்ப்பது எப்படி? ஆப்பிளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஐபோனுடன் சேர்த்து வேறு என்னென்ன புதிய ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:
2023 ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் ஆக பார்ப்பது எப்படி? முன்னரே குறிப்பிட்டபடி, இந்நிகழ்வு இன்று, அதாவது செப்டம்பர் 12 ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கும். ஆப்பிள் வொண்டர்லஸ்ட் வெளியீட்டு நிகழ்வை நேரலையில் பார்க்க பல்வேறு வழிகள் உள்ளன.
நீங்களொரு ஆப்பிள் டிவி (Apple TV) சந்தாதாரராக இருந்தால் 10:30 மணிக்கு ட்யூன் செய்வதன் மூலம் உங்கள் டிவைஸ்களின் வழியாகவே ஆப்பிளின் 2023 வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம். ஒருவேளை நீங்கள் ஆப்பிள் டிவி சந்தாதாரராக இல்லையென்றால், கவலைப்படத் தேவையில்லை.
ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தின் வழியாகவும் கூட இந்த வெளியீட்டு நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பும். ஆப்பிளின் வெளியீட்டு நிகழ்வை யூட்யூப் வழியாக பார்க்க இங்கே கிளிக் செய்யவும் இந்நிகழ்வு ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கூட நேரடியாக ஒளிபரப்பப்படும். இங்கே கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய வெப் ப்ரவுஸர்கள் வழியாக ஆப்பிள் நிகழ்வை நேரடியாக பார்க்கலாம்.
2023 ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? முதலாவதாக, எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி ஐபோன் 15 சீரிஸின் அறிமுகத்தை நாம் எதிர்பார்க்கலாம். ஆப்பிள் தனது புதிய ஐபோன்களின் தொகுப்பை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளியிடுவது வழக்கம் தான். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக 2 விஷயங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்று - முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வரப்போகும் புதிய ஐபோன்களில் பெரிய அளவிலான மேம்பாடுகள் இருக்கும். இரண்டாவது - ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலானது ஐபோன் 15 அல்ட்ரா (iPhone 15 Ultra) என்கிற புதிய பெயரை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடல்களின் விலைகள் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ஸ்டாண்டர்ட் (Standard) ஐபோன் 15 மற்றும் பிளஸ் (Plus) மாடலான ஐபோன் 15 பிளஸ் ஆகியவைகள் ஐபோன் 14 சீரிஸில் உள்ளதை போன்ற விலை நிர்ணயத்தையே பெறும் என்று கூறப்படுகிறது.
ஐபோன் 15 சீரீஸில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்களை பொறுத்தவரை.. முதலாவதாக, அனைத்து மாடல்களிலும் யூஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. ப்ரோ மாடல்கள் ஆனது சக்திவாய்ந்த புதிய ஏ17 பயோனிக் சிப் மூலமும் மற்ற மாடல்கள் ஏ16 சிப் மூலமும் இயக்கப்படும்.
அனைத்து மாடல்களிலும் மெலிதான பெஸல்களுடன் கூடிய பெரிய டிஸ்பிளேக்களையும் எதிர்பார்க்கலாம். ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் "டைனமிக் ஐலேண்ட்" இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவைகளில் நேர்த்தியான டைட்டானியம் ஃபினிஷ்ஷை பெறலாம்.
மேலும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் பெரிஸ்கோப் லென்ஸை சேர்ப்பதன் மூலம் அதன் புகைப்பட திறன் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படலாம். இது சிறந்த ஜூமிங் திறன்களை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கடைசியாக ப்ரோ மாடல்களில் மியூட் ஸ்விட்ச் பட்டனுக்கு பதிலாக புதிய ஆக்ஷன் பட்டனையும் பார்க்கலாம்.
ஐபோன்களை தவிர்த்து ஆப்பிள் 2023 வெளியீட்டு நிகழ்வின் போது ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா, ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோவிற்கான யூஎஸ்பி-சி சார்ஜிங் கேஸ், ஐஓஎஸ் 17 மற்றும் பிற ஆப்ரேட்டிங் சிஸ்டம்களுக்கான வெளியீட்டு அட்டவணை போன்றவைகளையும் ஆப்பிள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








