நாளை அறிமுகமாகும் ஆப்பிள் ஐஒஎஸ் 13-ல் இடம்பெறும் அசத்தலான 4 அம்சங்கள் இதுதான்.!

|

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு போட்டியா புதுமையான அம்சங்களை கொண்டுவர இந்நிறுவனம் தெளிவாக வேலை செய்கிறது. இந்நிலையில் ஆப்பிள் தனது வருடாந்திர ஐபோன் நிகழ்வை வரும் செப்டம்பர் 10-ம் தேதி அன்று
கலிபோர்னியாவில் நடத்துகிறது.

ஐஒஎஸ் 13( iOS 13)

ஐஒஎஸ் 13( iOS 13)

இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11ப்ரோ மாடல்களுடன் அடுத்த தலைமுறை ஆன ஐஒஎஸ் 13( iOS 13)-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த அறிமுக நிகழ்ச்சி அனைவரையும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 என்னென்ன சிறப்பம்சங்கள்

மேலும் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11ப்ரோ மாடல்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். பின்பு இப்போது ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஐஒஎஸ் 13-இயங்குதளத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.

சந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.!

புகைப்படம் எடுக்க வெறலெவல் வசதி:

புதிய ஐஒஎஸ் 13-இயங்குதளத்தில் போர்ட்ரெயிட் லைட்டிங் மோடின் ஒளிநிலைமைகளை அதிகரிக்கவோ அல்லதுகுறைக்கவோ அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் உங்கள் ஸ்டுடியோ
ஒளிநிலைமைகள் மற்றும் அதன் காட்சியை அடிப்படையாக கொண்டு இந்த அம்சம் சரி செய்யும்.

Monochrome portrait mode, High-Key Mono போன்ற அம்சங்களை விரிவுபடுத்தியுள்ளது, இந்த அம்சங்கள் ஆனது பேஷன் புகைப்படங்களை எடுக்கும் போது பயன்படுத்தப்படும் Stylistic monochromatic aesthetic-ஐ பிரதிபலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீறிப் பாயும் வேகம்

ஆப்பிள் ஐஒஎஸ் 13 இயங்குதளமானது வேகமாக செயல்படக்கூடிய இயங்குதளமாக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்ஸ் மற்றும் அதன் அப்டேட்டகளை வழங்கும் முறையை மாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இப்போது பதிவிறக்கங்கள் 50சதவிகதிம் சிறியதாக இருக்கும் என்றும், பின்பு அப்டேட்டின் அளவுகள் 60சதவீதமாக சுறுக்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக பேஸ் ஐடி அம்சம் 30சதவகிதம் வேகமாக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ: நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் எப்போது தெரியுமா?இஸ்ரோ: நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் எப்போது தெரியுமா?

 டார்க் மோட் அம்சம்:

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் ஏற்கனவே டார்க் மோட் அம்சம் மிகவும் பிரபலமாக உள்ளது. அந்த வகையில் ஐஒஎஸ் 13 வழியாக அதை புதிய 2019-ம் ஆண்டு ஐபோன்களுக்கு கொண்டு வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஆனால் கடந்த ஆண்டு மேக்ஒஎஸ்-ல் டார்க் மோட் அம்சம் வெளியானது. குறிப்பாக இந்த டார்க் மோட் அம்சம் ஆப்பிள் பயனர்களுக்கு பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 மெமோஜி அம்சம்

ஆப்பிள் நிறுவனம் மெமோஜியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சில ஸ்டிக்கர்களை உருவாக்க ஐஒஎஸ் 13-வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆனது கீபோர்டு ஆப்-ல் கிடைக்கும் என்றும் Headgear, glassesஉட்பட பல தனிப்பயனாக்க விருப்பங்களை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple Event 2019: iOS 13 Brings New Features at iPhone 11 Event on September 10: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X