அண்ணாச்சி.! Apple கார் என்னாச்சி? ஆப்பிள் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த AI.. என்னங்க சொல்றீங்க.?
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் கனவு திட்டமான ஆப்பிள் எலெக்ட்ரிக் கார் (Apple Electric Car) திட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக நிறுவனம் அதன் சொந்த AI அம்சத்தை உருவாக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரம் இதோ.
Apple Car: கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக ஆப்பிள் தீவிரமாக உருவாக்கி வந்த அதன் முதல் எலக்ட்ரிக் கார் கனவு திட்டத்தை இப்போது கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது ஆப்பிள் காரை எதிர்பார்த்து காத்திருந்த தீவிரமான ஆப்பிள் ரசிகர்களின் மனதில் ஈட்டியை பாய்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் கனவு திட்டத்தை கைவிட்டுவிட்டு, நிறுவனம் இப்போது அதன் சொந்த AI தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளதாக தெரிகிறது.

ஆப்பிள் எலக்ட்ரிக் கார் திட்டம்: இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று இப்போது பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனம் அதன் சொந்தமான ஆப்பிள் எலக்ட்ரிக் கார் திட்டத்தை ரத்து செய்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் எலக்ட்ரிக் கார் உருவாக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு நிறுவனம் இப்போது AI சேவையை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் கார் என்ன ஆச்சு? ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் திட்டத்தை நிறுவனம் "ப்ராஜெக்ட் டைட்டன்" என்று அழைத்து வந்தது. இந்த திட்டத்தை ஆப்பிள் கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக உருவாக்கி, மிகவும் பத்திரமாக பாதுகாத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த திட்டத்திற்கு நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் குடும்பத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் சந்தைக்கு வருவது சந்தேகமாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI): இந்த முடிவு நிறுவனத்திற்கு ஒரு பெரிய மாற்றமாகும். ஏற்கனவே எலக்ட்ரிக் கார் சந்தை மிகவும் சவாலான வாகனத் துறையாக மாறிவருகிறது. இதில் ஆப்பிள் நிறுவனம் போட்டியிட்டு இனி வெற்றியடைவது சுலபமானதாக இருக்காது. மறுபுறம், செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் போட்டியிட ஆப்பிளுக்கு இது தான் சரியான நேரம் என்பதனால், ஆப்பிள் அதன் AI தொழில்நுட்பத்தை உருவாக்க பார்க்கிறது.

ஆப்பிள்: நிறுவனம் இப்போது அதன் எலக்ட்ரிக் கார் திட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து, அந்த எலக்ட்ரிக் கார் திட்டத்தில் பணிபுரியும் கிட்டத்தட்ட 2,000 ஊழியர்களை நிறுவனம் இப்போது ஆச்சரியப்படுத்தியுள்ளது மற்றும் கவலைக்குள்ளாகியுள்ளது. காரணம், இந்த ஊழியர்களில் சிலர் நிறுவனத்தின் AI பிரிவுக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மற்றவர்கள், அவர்களின் வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் AI சேவை: ஆப்பிள் நிறுவனம் அதற்கு சொந்தமான AI சேவையை வேகமாக உருவாக்க கவனம் செலுத்திவருகிறது. சில பணிநீக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன, ஆனால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மற்றும் முழுமையாக சுயமாக இயங்கும் மின்சார காரை உருவாக்குவது கடினமானதாகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கும் காரணத்தினால் ஆப்பிள் அதன் கனவு திட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.
ப்ராஜெக்ட் டைட்டன்: மின்சார வாகனங்களுக்கான சந்தை குறைந்த தேவை மற்றும் உற்பத்தி சிக்கல்களுடன் சவால்களை எதிர்கொள்கிறது. AI இல் முதலீடு செய்வது எதிர்கால வளர்ச்சி மற்றும் வருவாய்க்கு அதிக வாய்ப்பை வழங்கும் காரணத்தினால், ஆப்பிள் நிறுவனம் இப்போது AI மீது கவனத்தை திருப்பியுள்ளது. ப்ராஜெக்ட் டைட்டன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துவிட்டது. இதனால், ஆப்பிள் இப்போதைக்கு எலக்ட்ரிக் கார் சந்தையில் நுழையவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஆப்பிள் கார் மீண்டும் வருமா? ஆப்பிள் நிறுவனம் அதன் AI தொழில்நுட்பத்தை உருவாக்கிய பிறகு, ஒருவேளை எலக்ட்ரிக் கார் திட்டத்தை அதன் AI அம்சம் கொண்டு இன்னும் சிறந்த தரத்தில் உருவாக்க வாய்ப்புள்ளது என்று வதந்திகள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் AI வெற்றிகரமாக உருவாக்கப்பட்டால், ஆப்பிள் அவர்களின் செல்ப் டிரைவிங் காரை மேம்படுத்தல்களுடன் உருவாக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








