Home
News

Apple Diwali Sale ஆரம்பம்.. iPhone 15 உடன் இலவச Earbuds.. iPhone 16 மீது டிஸ்கவுண்ட் மற்றும் பல ஆபர்!

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தீபாவளி விற்பனை (Apple Diwali Sale) இன்று (அக்.3) முதல் தொடங்கியது. இந்த சிறப்பு விற்பனையின் கீழ் ஆப்பிள் நிறுவனம் அதன் பல வகையான தயாரிப்புகளின் மீது பிரத்யேக தள்ளுபடிகள், வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளை வழங்குகிறது. எந்தெந்த ஐபோன் மாடல்கள் மீது என்னென்ன ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது? குறிப்பாக புதிய ஐபோன் 16 சீரிஸ் மீது என்னென்ன ஆபர் கிடைக்கிறது? மேக்புக், ஐபேட் மற்றும் ஏர்பாட்ஸ் மீது என்னென்ன ஆபர் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

முக்கியமான வங்கி சலுகைகளை பொறுத்தவரை, ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு ரூ.10,000 வரை உடனடி கேஷ்பேக் (Instant Cashback) கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இந்த சலுகை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express), ஆக்சிஸ் வங்கி (Axis Bank) மற்றும் ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) கார்டுகளை வைத்திருக்கும் பயனர்களுக்கு கிடைக்கும். மேலும் குறிபிட்ட அட்டைதாரர்களுக்கு 12 மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) விருப்பமும் கிடைக்கும்.

Apple Diwali Sale ஆரம்பம்.. iPhone 15, iPhone 16 மீது ஆபர்!

ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஐபோன் 16 சீரீஸில் (iPhone 16 Series) ரூ.5,000 தள்ளுபடியும், மேக்புக் ஏர் எம்3 (Macbook Air M3), மேக்புக் ப்ரோ (Macbook Pro) ஆகியவற்றில் ரூ.10,000 தள்ளுபடியும் கிடைக்கும். மேக்புக் ஏர் எம்2 (Macbook Air M2) மாடல் மீது ரூ.8,000 கேஷ்பேக் கிடைக்கும். கூடுதலாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஆப்பிள் ஐபோன் 15 (iPhone 15) உடன் பீட்ஸ் சோலோ பட்ஸ் (Beats Solo Buds) இலவசமாக கிடைக்கும். ஆனால் இந்த சலுகை அக்டோபர் 4 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

ஐபேட் (iPad) மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்சுகளை (Apple Watch) வாங்க ஆர்வமுள்ள பயனர்கள் ரூ.6,000 வரையிலான கேஷ்பேக் சலுகை கிடைக்கும். இந்த ஆப்பிள் விற்பனையின் போது ஐபாட்களில் இலவச வேலைப்பாடுகளை (Free engraving) செய்துகொள்ள முடியும். மேலும் ஏர்போட்கள் மீது ரூ.4,000 வரையிலான உடனடி கேஷ்பேக் சலுகைம் கிடைக்கும். ஐபாட்களை போலவே, நீங்கள் புதிதாக வாங்கிய ஏர்போட்களிலும் இலவசமாக வேலைப்பாடுகளை செய்துகொள்ள முடியும்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் டிவைஸ்களை வாங்கும்போது, ​​பயனர்கள் 3 மாத ஆப்பிள் மியூசிக் சந்தாவையும் (Apple Music subscription) இலவசமாக பெறுவார்கள். பொதுவாகவே ஆப்பிளின் டிரேட் இன் மதிப்பு (Trade in Value) ஈர்க்கக்கூடியதாக இருக்கும். இந்த தீபாவளி விற்பனையின் போது, ​​இது உச்சத்தை அடைந்துள்ளது. ஆப்பிள் டிரேட் இன் மூலம், தகுதியான ஸ்மார்ட்போனை மாற்றும்போது, ​​புதிய ஐபோனுக்கான உடனடி கிரெடிட்டை பெறலாம்

ஆப்பிளின் கூற்றுப்படி புதிய ஐபோனை பெற, ரூ.67,500 வரையிலான டிரேட் இன் கிரெடிட்டை பெறலாம். இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் ஆப்பிளின் இந்த தீபாவளி விற்பனையின் போது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மாடலை டிரேட் இன் செய்தால் ரூ.67,500 கிரெடிட் கிடைக்கும், ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடலுக்கு ரூ.61,500 கிரெடிட் கிடைக்கும்.

அதாவது, ஐபோன் 15 ப்ரோ எக்ஸ்சேன்ஜ் செய்து ஐபோன் 16 ப்ரோவை நீங்கள் வாங்கினால் உங்களுக்கு சுமார் ரூ.58,000 தான் செலவாகும். இந்த தொகை ஐபோன் 16 மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் எம்ஆர்பியை விடவும் குறைவாகும். இந்த டிரேட் இன்-க்கு தகுதியான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பட்டியலையும் ஆப்பிள் பகிர்ந்துள்ளது. அந்த பட்டியலில் சாம்சங் (Samsung), ஒன்பிளஸ் (OnePlus), கூகுள் (Google) மற்றும் ரெட்மி (Redmi) உள்ளன. சுவாரஸ்யமாக இந்த பட்டியலில் போக்கோ எக்ஸ்3 (Poco X3) மாடலும் உள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Diwali Sale Start in India Free Earbuds with iPhone 15 Discount on iPhone 16 and more
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X