Apple அட்டகாசம்.. புதுசு வந்ததும் பழைய MacBook விற்பனை நிறுத்தம்.. ஏற்கனவே வாங்கியவர்கள் நிலை என்ன?
எதிர்பார்த்ததை போலவே ஆப்பிள் நிறுவனம் எம்4 சிப் உடனான புதிய மேக்புக் ஏர் மாடல்களை அறிமுகம் செய்ததும் பழைய மேக்புக் ஏர் எம்2 மற்றும் மேக்புக் ஏர் எம்3 மாடல்களை நிறுத்தி உள்ளது. அதாவது இனிமேல் இவ்விரு ஆப்பிள் லேப்டாப்களில் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்காது என்று அர்த்தம்
இருப்பினும் ஸ்டாக் தீரும் வரையிலாக பிற இகாமர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக மேக்புக் ஏர் எம்2 மற்றும் மேக்புக் ஏர் எம்3 மாடல்களை வாங்க முடியும். ஒருவேளை உங்களிடம் ஏற்கனவே இந்த மேக்புக் மாடல்கள் இருந்தால், கவலைப்பட ஒன்றுமில்லை; தொடர்ந்து சாஃப்ட்வேர் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறுவீர்கள்.

ஒருவேளை நீங்கள் ஒரு புதிய மேக்புக்கை வாங்க விரும்பினால் எம்4 சிப் கொண்ட புதிய மேக்புக் ஏர் மாடல் ஆனது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மேக்புக் ஏர் எம்3 மாடல்களை விட ரூ.15,000 மலிவானது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 13-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.99,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 15-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.1,24,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிளின் இந்த புதிய மேக்புக் ஏர் மாடல்கள் ஏற்கனவே ப்ரீ-ஆர்டர் செய்யகிடைக்கிறது. இந்தியாவில் இது வருகிற மார்ச் 12 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இது மிட்நைட், சில்வர், ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்டார்லைட் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, அதிகாரப்பூர்வ ஆப்பிள் வலைத்தளம் வழியாக புதிய மேக்புக் ஏர் எம்4 மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.10,000 வங்கி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் மேக்புக் மாடலின் விலையை ரூ.89,900 க்கு கொண்டுவர முடியும்.
ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல்களின் விரிவான அம்சங்கள்: மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 13-இன்ச் (2,560×1,664 பிக்சல்ஸ்) மற்றும் 15-இன்ச் (2,880×1,864 பிக்சல்ஸ்) சூப்பர் ரெடினா டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேக்கள் 224பிபி பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை கொண்டது. இந்த ஆப்பிள் லேப்டாப்கள் 6கே ரெசல்யூஷனில் 2 எக்ஸ்டர்னல் டிஸ்பிளேக்களை ஆதரிக்கும் (லேப்டாப் திறந்திருக்கும் போது) என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 ஆனது எம்4 சிப் உடன் வருகிறது. இதில் நான்கு பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் நான்கு எஃபீஷியன்சி கோர்கள் கொண்ட 10-கோர் சிபியு உள்ளது. இந்த லேப்டாப்பில் 16-கோர் நியூரல் எஞ்சின், 8-கோர் ஜிபியு மற்றும் ஹார்டுவேர் ஆக்சிலரேட்டட் ரே டிரேசிங்கிற்கான ஆதரவும் உள்ளது.
மேக்புக் ஏர் 2025 மாடலை 24ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடன் கட்டமைக்க முடியும. மேலும் இது ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் த்ரீ-மைக் செரீஸ் உடன் கூடிய குவாட் ஸ்பீக்கர் செட்டப்பையும் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது Wi-Fi 6E மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவைகளை கொண்டுள்ளது.
மேலும் இது இரண்டு தண்டர்போல்ட் 4/ யூஎஸ்பி 4 போர்ட்கள், ஒரு மேக்சேப் 3 சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் இந்த புதிய மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது டச் ஐடி பட்டனையும் கொண்டுள்ளது, இது லேப்டாப்பை அன்லாக் செய்ய பயன்படுகிறது. இது ஃபோர்ஸ் க்ளிக்குகள் மற்றும் மல்டி-டச் சைகைகளுக்கான ஆதரவுடன் ஃபோர்ஸ் டச் டிராக்பேடையும் கொண்டுள்ளது. சென்டர் ஸ்டேஜ் மற்றும் டெஸ்க் வியூவுக்கான ஆதரவுடன் 1080p ஃபேஸ்டைம் கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை 13-இன்ச் மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 53.8Wh லித்தியம்-பாலிமர் பேட்டரியை 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கொண்டுள்ளது. ஆனால் இது 30W யூஎஸ்பி டைப்-சி பவர் அடாப்டருடன் அனுப்பப்படுகிறது. மறுகையில் உள்ள 15-இன்ச் மாடல் சற்று பெரிய 66.5Wh பேட்டரியை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி இது 15 மணிநேர இண்டர்நெட் ப்ரவுஸிங் மற்றும் ஆப்பிள் டிவி ஆப் மூலம் 18 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும்.


Click it and Unblock the Notifications








