Home
News

நடக்க இருக்கும் ஆப்பிள் டிஜிட்டல் சாதன அறிமுக நிகழ்வு- சரியாக 11:30-க்கு., இத்தனையும் இருக்கு!

ஆப்பிள் நிறுவனத்தின் டிஜிட்டல் சாதன அறிமுக நிகழ்ச்சி இன்று இரவு 11:30 மணிக்கு ஆப்பிள் இணையதள யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி செயலி மூலம் நேரலைப்படுத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் சாதனங்களின் விவரங்களை பார்க்கலாம்.

டிஜிட்டல் சாதன அறிமுக நிகழ்ச்சி

டிஜிட்டல் சாதன அறிமுக நிகழ்ச்சி

ஆப்பிள் நிறுவனத்தின் டிஜிட்டல் சாதன அறிமுக நிகழ்ச்சி இன்று இரவு 11:30 மணிக்கு ஆப்பிள் இணையதள யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி செயலி மூலம் நேரலைப்படுத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வில் ஐபோன் எஸ்இ 2022, ஐபோன் எஸ் இ+, ஐபோன் எஸ் இ 5ஜி ஆகிய சாதனங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஐபோன் எஸ்இ புதுமாடல் ரூ.30,000-க்கு குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நேரடி நிகழ்வை ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் மூலமாக பார்க்கலாம். அதேபோல் ஆப்பிள் டிவி செயலியிலும் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

ஐபோன் ஏர்5 சாதனம் ஏ15 பயோனிக் பிராசஸர்

ஐபோன் ஏர்5 சாதனம் ஏ15 பயோனிக் பிராசஸர்

ஐபோன் ஏர் 5 சாதனம் ஏ15 பயோனிக் பிராசஸர், 5ஜி சப்போர்ட் உள்ளிட்ட ஆதரவோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேக் கணினிகளை பொறுத்தவரை இந்த சாதனம் எம்2 எம்1 ப்ரோ எம்1 மேக்ஸ் சிப்கள் உடனான மேக் சாதனங்கள் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. மேக் புக் ப்ரோ, போக்புக் ஏர், மேக் மினி ஆகிய சாதனங்கள் வெளியாகும் எனவும் இது எம்2 சிப் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேக்புக் ஏர் கடந்த ஆண்டு வெளியான மேக்புக் ப்ரோ போன்ற டிசைனை கொண்டிருக்கும் எனவும் ஆனால் மேம்பட்ட அம்சங்களோடு இது வரும் எனவும் கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 13 மாடலின் க்ரீன் வண்ண வெர்ஷன் இந்த நிகழ்வில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 11 விலை சிறிய வித்தியாசத்துடன் விற்கப்படுகிறது. ஐபோன் 12 மினி ஃபிளிப்கார்ட்டில் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.50,099 ஆக விற்கப்படுகிறது. அதேபோல் அமேசான் இந்தியாவில் ஐபோன் 11 சாதனம் ரூ.49,900-க்கு விற்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான வித்தியம் ரூ.200 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஐபோன் 12 மினி சாதனத்தின் 64ஜிபி மாறுபாடு இப்போது ரூ. 50,099 விலைக்குக் கிடைக்கிறது. அதே சமயம், 128ஜிபி மாறுபாடு மாடல் ரூ.55,099 விலைக்கு கிடைக்கிறது. அதேபோல், இதன் 256ஜிபி மெமரி வேரியன்ட் மாடல் ரூ.65,099 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள்

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள்

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள் குறித்து பார்க்கையில் ஐபோன் 12, ஐபோன் 12 மினி ஒரே கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2851 எம்ஏஎச் பேட்டரி
ஐபோன் 12 சாதனத்தில் 2851 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஐபோன் 12 மினி சாதனத்தில் 2227 எம்ஏஎச் பேட்டரி உடன் இருக்கிறது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் கேமரா அமைப்பில் 12 எம்பி அகல கோண லென்ஸ் ஆதரவு, 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் ஆதரவு இருக்கிறது. அதேபோல் செல்பி, வீடியோ அழைப்புகளுக்கு4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் 12 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

File Images

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Digital Device Launching Event at today 11:30- How to Watch Live Stream
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X