ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!

|

அமெரிக்கா போராட்டத்திற்கு இடையே ஐபோன் ஷோரூம்கள் சூறையாடப்பட்டு அதில் இருக்கும் ஐபோன்கள் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆப்பிள் ஐபோன் திருடியவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருப்பின இளைஞர் ஜார்ஜ் ப்ளாய்ட்

கருப்பின இளைஞர் ஜார்ஜ் ப்ளாய்ட்

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ப்ளாய்ட் காவல்துறை கைது நடவடிக்கையின்போது கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொடூர கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருப்பின அடக்குமுறைக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறி நடக்கும் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

மினபொலிஸ் நகரில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து, அரசுக்கு எதிராக கண்டித்து முழக்கமிட்டனர். நியூயார்க் நகரில் லட்சக்கணக்கானோர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு பேரணியாக சென்றனர். கொரோனா பரவல் நேரத்தில் போராட்டம் நடந்தது.

போராட்டம் நடத்தியவர்கள் கைது

போராட்டம் நடத்தியவர்கள் கைது

போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர். அதேபோல் புரூக்ளின் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி, போலீசார் விரட்டியடித்தனர். அந்த பகுதியில் வன்முறை வெடித்தது.

வெள்ளை மாளிகையிலுள்ள சுரங்க அறை

வெள்ளை மாளிகையிலுள்ள சுரங்க அறை

கடந்த சில தினங்களுக்கு முன், வெள்ளைமாளிகை முன்பாக திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு கருதி வெள்ளை மாளிகையிலுள்ள சுரங்க அறைக்கு அதிபர் ட்ரம்ப் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு சுரங்க அறையில் சுமார் ஒரு மணி நேரம் ட்ரம்ப் தங்கவைக்கப்பட்டார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் பல கடைகள் சூறையாடப்பட்டு வருகிறது

அமெரிக்காவில் பல கடைகள் சூறையாடப்பட்டு வருகிறது

இந்த சூழலை பயன்படுத்தி வன்முறையாளர்கள் அமெரிக்காவில் பல கடைகள் சூறையாடப்பட்டு வருகிறது. பிலடல்ஃபியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து ஆப்பிள் நிறவனத்தின் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு சில வன்முறையாளர்கள் புகுந்து ஐபோன்களை திருடிச் சென்றுள்ளனர்.

பல ஆப்பிள் ஷோரூம்கள் சூறை

பல ஆப்பிள் ஷோரூம்கள் சூறை

அமெரிக்காவில் நடந்த இந்த போராட்டங்களின் போது பல ஆப்பிள் ஷோரூம்கள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஆப்பிள் ஐபோன்கள் இந்த கடைகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டன.

கொள்ளையடிக்கப்பட்ட மொபைல் போன்கள்

கொள்ளையடிக்கப்பட்ட மொபைல் போன்கள்

இருப்பினும் கொள்ளையடிக்கப்பட்ட மொபைல் போன்கள் பலவற்றைக் கண்காணிக்க முடிகிறது என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனம் மொபைல் போனை எளிதில் விட்டுவிடாது என தெரிகிறது.

உள்ளூர் அதிகாரிகளால் எச்சரிக்கப்படுவார்கள்

உள்ளூர் அதிகாரிகளால் எச்சரிக்கப்படுவார்கள்

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், மினியாபோலிஸ், வாஷிங்டன் மற்றும் பிலடெல்பியாவில் அமைந்துள்ள சில்லறை விற்பனை கடைகள் கண்காணிக்கப்பட்டுள்ளன. இந்த சில்லறை விற்பனையகங்களில் இருந்து திருடப்பட்ட ஆப்பிள் சாதனங்கள் குறித்து நிறுவனம் தரப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த சாதனம் முடக்கப்பட்டுள்ளது மற்றும் கண்காணிக்கப்படுகிறது. உள்ளூர் அதிகாரிகளால் எச்சரிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை

ஆப்பிள் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை

ஐபோன்கள் திருடப்பட்டதை அடுத்து ஆப்பிள் நிர்வாகம் சார்பில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட ஐபோன்கள் இயங்காதபடி செய்யமுடியும், ஐபோன்களைத் திருடியவர்களை அதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக அதிகாரிகளால் பிடிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐபோன்களை திரும்பக் கொடுப்பது சிறந்த செயல்

ஐபோன்களை திரும்பக் கொடுப்பது சிறந்த செயல்

அதேபோல் திருடியவர்கள் தாமாகவே முன்வந்து ஐபோன்களை திரும்பக் கொடுப்பது சிறந்த செயல் என ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

source: livemint.com

image: socialmedia

Best Mobiles in India

English summary
Apple devices stolen from these retail locations during US protest

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X