ஐடியூன்ஸ் 11ஐ அறிமுகம் செய்வதில் காலதாமதம் செய்யும் ஆப்பிள்

Posted By: Karthikeyan
ஐடியூன்ஸ் 11ஐ அறிமுகம் செய்வதில் காலதாமதம் செய்யும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐடியூன்ஸ் 11ஐ அறிமுகம் செய்வதை ஒரு மாதம் தள்ளி வைத்திருக்கிறது. அதாவது இந்த ஐடியூன்ஸ் 11ஐ அக்டோபர் மாதமே அறிமுகம் செய்ய இருப்பதாக ஆப்பிள் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த ஐடியூனை நவம்பர் இறுதியில் களமிறக்குவதாக ஆப்பிள் அறிவித்திருக்கிறது.

தாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்த புதிய ஐடியூனைக் களமிறக்குவதில் கால தாமதம் ஆவதாக ஆப்பிளின் செய்தித் தொடர்பாளர் டாம் நியூமயர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த புதிய ஐடியூன் மிகவும் எளிமையாக இருக்கும் என்றும், இதன் இன்டர்பேஸ் வசதியாக இருக்கும் என்றும் மற்றும் இந்த ஐடியூன் ஐக்ளவுடோடு இன்டக்ரேசன் ஆகியிருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஐடியூன்களை முதலில் ஆப்பிள் அறிமுகம் செய்து வைத்த போது அது ஒரு மியூசிக் ப்ளேயர் சாப்ட்வேராகத்தான் இருந்தது. ஆனால் தற்போது இந்த ஐடியூன்கள் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்களை வழங்கும் அப்ளிகேசனாக இருக்கிறது.

இந்த புதிய ஐடியூன்ஸ் 11 கண்டிப்பாக மிகவும் எளிமையாக இருக்கும் என்று நம்பலாம். மேலும் இது மினிப்ளேயரையும் வழங்கும். அதன் மூலம் ப்ளே லிஸ்டில் உள்ள பாடல்களை மிக விரைவாகத் தேட முடியும். அதோடு ஐடியூனஸ் ஸ்டோரில் இனி யுஐ ரிபிரஷ் இருக்கும். மொத்தத்தில் புதிய ஐடியூன்ஸ் ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆதரவைப் பெறும் என்றும் நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot