Home
News

iPhone வாங்கனுமா.. ஜன.4 க்குள்ள வாங்கிடுங்க.. Apple ஆஃபர் அப்படி.. எந்தெந்த மாடல்கள்.. எவ்வளவு சலுகை?

இயர் எண்ட் சேலில் ஐபோன்களை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பக்காவான நேரம் வந்துவிட்டது. விஜய் சேல்ஸ் (Vijay Sales) ஆனது ஆப்பிள் டேஸ் சேல் (Apple Days Sales) வழியாக ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், மேக்புக் மற்றும் ஐபாட்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடி மற்றும் பேங்க் ஆஃபர்களை கொடுத்துள்ளது. இந்த சலுகைகள் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆப்பிள் டேஸ் சேல் டிசம்பர் 28ஆம் தேதியே தொடங்கிவிட்டது. வருகிற ஜனவரி 4 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தேதிக்குள் வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே மலிவான விலைக்கு ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் மேக்புக்குகள் கிடைக்கும். முதலில் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை விவரங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்.

iPhone வாங்கனுமா.. ஜன.4 க்குள்ள வாங்கிடுங்க.. Apple ஆஃபர் அப்படி!

ஐபோன்களுக்கான சலுகைகள்

1. ஐபோன் ஏர் (iPhone Air) ஸ்மார்ட்போனானது ரூ.90,990 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையில், ஐசிஐசிஐ மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு கிடைக்கும் ரூ.4,000 உடனடி தள்ளுபடியும் அடங்கும்.

2. ஐபோன் 17 (iPhone 17) ஆனது ரூ.82,900 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. ரூ.3,000 மதிப்புள்ள மைவிஎஸ் ரிவார்டு லாயல்டி பாய்ன்ட்களை (MyVS Reward Loyalty Points) பெற்று கொள்ளலாம். ஐசிஐசிஐ மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி ரூ.4,000 வரை உடனடி தள்ளுபடியை பெறலாம்.

3. ஐபோன் 17 ப்ரோ ஆனது ரூ.121,490 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆனது ரூ.134,490 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த விலைகளில் ஐசிஐசிஐ மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கார்டுகளுக்கு கிடைக்கும் ரூ.4,000 வரை உடனடி தள்ளுபடி அடங்கும்.

4. ஐபோன் 16 ஆனது ரூ.57,990 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. ஐபோன் 16 பிளஸ் ஆனது ரூ.64,490 விலைக்கும் கிடைக்கிறது. இந்த விலைகளில் ஐசிஐசிஐ மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகளுக்கு ரூ.5,000 வரை உடனடி தள்ளுபடியும் அடங்கும்.

5. ஐபோன் 15 ஆனது ரூ.49,490 ஆரம்ப விலையில் கிடைக்கும். இந்த விலையில் ஐசிஐசிஐ மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகளுக்கு ரூ.2,000 வரை உடனடி தள்ளுபடியும் அடங்கும்.

ஐபாட்கள் மற்றும் மேக்புக்குகளுக்கான சலுகைகள்

1. ஐபேட் 11 ஆவது ஜெனரேஷன் (ஏ16) ஆனது ரூ.30,190 ஆரம்ப விலையில் கிடைக்கும். எம்3 சிப்செட் கொண்ட ஐபேட் ஏர் ஆனது ரூ.51,490 விலையில் இருந்து கிடைக்கிறது. மேலும், எம்5 சிப்செட் கொண்ட ஐபேட் ப்ரோ ஆனது ரூ.89,990 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. வங்கி கார்டுகளுக்கு ரூ.3,000 வரை உடனடி தள்ளுபடியும் இதில் அடங்கும்.

2. 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்களில் எம்4 சிப் கொண்ட மேக்புக் ஏர் ஆனது ரூ.79,990 விலை முதல் கிடைக்கிறது. மேலும், எம்2 சிப் கொண்ட மேக்புக் ஏர் ஆனது ரூ.64,990 முதல் கிடைக்கிறது. இந்த விலைகளில் ஐசிஐசிஐ மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகளுக்கு ரூ.10,000 வரை உடனடி தள்ளுபடியும் அடங்கும்.

3. எம்5 சிப்செட் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல்கள் ரூ.152,990 ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கின்றன. இந்த விலையில் ஐசிஐசிஐ மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகளுக்கு ரூ.5,000 உடனடி தள்ளுபடியும் கொடுக்கப்படும்.

ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்களுக்கான சலுகைகள்

1. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 ஆனது ரூ.40,990 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதே சமயம் ஆப்பிள் வாட்ச் எஸ்இ (3 ஆவது ஜெனரேஷன்) ஆனது ரூ.21,990 விலை முதல் தொடங்குகிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 ஆனது ரூ.78,990 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த விலைகளில் ஐசிஐசிஐ மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகளுக்கு கிடைக்கும் ரூ.3,000 உடனடி தள்ளுபடி அடங்கும்.

2. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 ஆனது ரூ.10,790 விலைக்கு கிடைக்கிறது. ஏஎன்சி பீச்சருடன் கிடைக்கும் ஏர்பாட்ஸ் 4 ஆனது ரூ.14,990 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ (3 ஆவது ஜெனரேஷன்) ஆனது ரூ.21,990 விலைக்கு கிடைக்கிறது. இதில் வங்கிகளின் கார்டுகளுக்கு கிடைக்கும் ரூ.2,000 உடனடி தள்ளுபடியும் அடங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Days Sale in India on Vijay Sales Check Deals on the Latest iPhones Till 4 Jan 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X