Apple தளத்தில் iPhone 15 Pro Max ஆர்டர் செய்தவருக்கு ஆண்ட்ராய்டு போன்.. போலி ஐபோனால் அதிர்ச்சி..
ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 15 Pro Max) ஆர்டர் செய்த நபருக்கு ஆண்ட்ராய்டு போன் விநியோகம் செய்யப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் இணைய தளத்தில் ஆர்டர் செய்த சாதனம் எப்படி ஆண்ட்ராய்டு சாதனமாக மாறியது?
சமீபத்தில், ஆப்பிள் தவறுதலாக நான்கு ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் யூனிட்களுக்குப் பதிலாக 60 ஐபோன்களை (iPhone) வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு பெரிய சிக்கலாக அமைந்தது. இருப்பினும் இதனால் வாடிக்கையாளருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால், சமீபத்தில் நடத்த சம்பவம் பெரும் சிக்கலை உருவாகியுள்ளது.

ஆப்பிள் இன் தளத்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் சாதனத்திற்கு பதிலாக, போலியான ஐபோன் (fake iphone delivery) சாதனம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐபோனுக்கு பதிலாக ஆண்ட்ராய்டு போன் (android phone) வழங்கப்பட்டுள்ள சம்பவம் ஆப்பிள் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பகத்தன்மையை இழக்க செய்துள்ளது. ஆம், ஐபோன் 15 ப்ரோ வடிவமைப்பிலும் தோற்றத்திலும் இருந்த ஆண்ட்ராய்டு போன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max):
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலாக தோற்றமளித்த ஆண்ட்ராய்டு போனை பெற்றதாக இங்கிலாந்தில் உள்ள ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார். அந்த வாடிக்கையாளரின் கூற்றுப்படி, அவர் Apple UK இணையதளத்தில் இருந்து iPhone 15 Pro Max சாதனத்தை ஆர்டர் செய்துள்ளார். அவரால் சரிபார்க்கப்பட்ட டெலிவரி டிராக்கிங்கும் முறையானது. ஆனால் பார்சல்லை பெற்றவுடன், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த வாடிக்கையாளர், பார்சல்லை பெற்றவுடன், அவர் பெட்டியைத் திறந்த பிறகு, அவருக்கு வழங்கப்பட்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் வித்தியாசமான ஒன்றை அவர் கவனிக்கத் தொடங்கினார். இது ஐபோனில் ஸ்கிரீன் ப்ரொடெக்டருடன் (screen protector) தொடங்கியது.பின்னர் தவறான பகுதிகளில் ஒளிரும் டிஸ்பிளே (display). செட்டிங்ஸ் (settings) செயல்முறையும் மிகவும் பலவீனமாக இருந்தது. ஐபோன் ஸ்லீப் மோடிற்கு சென்ற பிறகுதான் சாதனம் போலியானது என்பதை அவர் கவனித்திருக்கிறார்.
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என்று வழங்கப்பட சாதனத்தில் உள்ள அனைத்து செட்டிங்ஸ்களும் வித்தியாசமாக இருந்துள்ளது. இனிஷியல் செட்டப் கூட மிகவும் சுலபமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் ஃபோனுக்குள் நுழைய வெறும் 2 நிமிடங்களே எடுத்துள்ளது. டெலிவரி செய்யப்பட்ட போனில் ஏற்கனவே ஃபேஸ்புக் (Facebook), யூடியூப் (YouTube) மற்றும் டிக்டாக் (TikTok) போன்ற ஆப்ஸ்கள் நிறுஉஹஜ் வப்பட்டுள்ளது.
இந்த ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் சாதனத்தில் ஓஎஸ் தடுமாற்றம் அடைந்துள்ளது. இதில் இருந்த கேமராவை அணுக முயன்ற போது, கேமரா (camera) ஸ்லைடுஷோ போல் அமைந்துள்ளது. போனின் டிஸ்பிளேவில் ஏதேனும் UI அம்சத்தை பயன்படுத்த முயற்சித்தால் போன் அடிக்கடி செயலிழப்பதை அவர் கண்டிருக்கிறார்.
போலி ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (Fake iPhone 15 Pro Max):
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் வாங்க ஆசைப்பட்டு போலியான யூனிட்டைப் (fake iPhone units) பெறுவது கவலைக்குரியது. ஆனால், அதைவிட ஆபத்தானது என்னவென்றால், அது சரியான ஆப்பிள் தளத்தில் ஆர்டர் செய்த பிறகு கிடைத்தது என்பது தான் என்பதை தாண்டி, இந்த போனும் பார்ப்பதற்கு நேச்சுரல் டைட்டானியத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போலியான iPhone 15 Pro Max சாதனத்தில் அனைத்து ஆப்பிள் பயன்பாடுகளும் இருந்துள்ளது.
இது ஆப்பிள் ஐடியுடன் பயனரை லாகின் செய்யவும் அனுமதித்துள்ளது. இதை போலி என்று சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் மட்டுமே அவருக்கு தெரிந்துள்ளது. இந்த போனை பெற்ற பயனர் போலியை அடையாளம் காணுவதில் புத்திசாலியாக இருந்திருக்கிறார். இந்த வித்தியாசத்தை எல்லோராலும் கண்டுபிடிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
அந்த அளவிற்கு இந்த சாதனம் அசல் உடன் பொருந்தி சென்றுள்ளது. ஆப்பிள் பயனர்களை அவர்களுடைய ஆப்பிள் கணக்கில் உள்நுழைய அனுமதித்தது பெரிய அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. இது போலியான சாதனங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்ற முயற்சிக்கும் தாக்குபவர்களுக்கு அணுகலை வழங்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது..


Click it and Unblock the Notifications








