ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. Google-ஐ பார்த்து Apple அடித்த "அடேங்கப்பா" காப்பி.. அதுவும் 1 இல்ல 2 மேட்டர்ல!
ஆப்பிள் (Apple) நிறுவனமானது பல வகையான ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளில் (Smart Home Products) பணிபுரிவதாக நீண்ட காலமாக வதந்திகள் பரவி வருகின்றன. அதாவது கூகுள் நிறுவனத்தின் நெஸ்ட் (Google Nest) மற்றும் அமேசான் நிறுவனத்தின் (Amazon Echo) போன்ற டிவைஸ்களை ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளது.
அவைகளில் எது முதலில் அறிமுகமாகும் என்கிற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது போல் தெரிகிறது. அது வேறொன்றுமில்லை - ஐபோன் (iPhone) தான். ஒரு ஐபோன் எப்படி ஸ்மார்ட் ஹோம் டிவைஸ் ஆக மாறும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதில் ஐஓஎஸ் 17-இல் (iOS 17) உள்ளது.

ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மனின் கூற்றுப்படி, ஆப்பிள் ஐஓஎஸ் 17-ல் ஒரு புதிய அம்சம் (New Feature) அணுக கிடைக்கும். அது ஒரு ஐபோனின் டிஸ்பிளேவை ஆஃப் செய்யும் போது, அது ஸ்மார்ட் ஹோம்-ஸ்டைல் டிஸ்பிளேவாக (Smart Home-style Display) மாறும். அதாவது உங்கள் ஐபோன் ஆனது கூகுள் நெஸ்ட் மற்றும் அமேசான் எக்கோவின் டிஸ்பிளே ஒத்ததாக இருக்கும்.
இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால், உங்கள் ஐபோன் ஸ்க்ரீன் லாக் (Screen Lock) செய்யப்பட்டு அது கிடைமட்டமாக சாய்ந்திருக்கும் போது, வானிலை (Weather), காலண்டர் (Calendar) மற்றும் அறிவிப்புகள் (Notifications) போன்றவைகளை காண்பிக்கும். ஐஓஎஸ் 16 உடன் ஆப்பிள் வெளிப்படுத்திய லாக் ஸ்கிரீன் விட்ஜெட்களின் (Lock Screen Widgets) அடிப்படையில் இது வேலை செய்யும்.
அதாவது வானிலை, காலண்டர் மற்றும் அறிவிப்புகள் போன்ற விட்ஜெட்டுகள் டார்க் பேக் கிரவுண்டில் பிரகாசமான டெக்ஸ்ட் (Dark background with bright text) உடன் தோன்றும் என்று மார்க் குர்மன் குறிப்பிடுகிறார். ஆகமொத்தம், ஒரு ஐபோன் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் கூட அதை பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென்று ஆப்பிள் விரும்புவதை வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது.
இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கூகுள் அதன் பிக்சல் போன்களில் (Google Pixel Phones) ஏற்கனவே இதே போன்ற வசதியை கொண்டுள்ளது. உங்கள் பிக்சஸ் போனை ஸ்டாண்டில் (Stand) வைத்தவுடன், அதிலுள்ள பலவிதமான செட்டிங்ஸை எளிதாக அணுகலாம் அல்லது உங்கள் டிவைஸ் சார்ஜ் செய்யும் போது, அதிலுள்ள கூகுள் போடோஸை ஸ்லைடுஷோவாக பார்க்கலாம்.
இருப்பினும், ஸ்டாண்டுடன் பயன்படுத்தினால் மட்டுமே இதெல்லாம் நடக்கும். ஆனால் ஐபோனுக்கு வரும் ஸ்மார்ட் டிஸ்பிளேவை பொறுத்தவரை - குறைந்தபட்சம் இப்போதைக்கு - எந்த ஸ்டேண்டும் அல்லது ஆக்சஸெரீயும் (accessory) தேவைப்படாது. இதோடு, ஐபாட்களுக்கான இன்டர்பேஸை (iPad Interface) மாற்றியமைக்கும் பணியிலும் ஆப்பிள் ஈடுபட்டு வருவதாக குர்மன் கூறுகிறார்.
ஆனால், ஐபேட் ஆனது ஐபோனை போல ஆக்சஸெரீ இல்லாமல் வேலை செய்வது கடினம். அது ஒரு மேக்னட் மவுண்ட் (Magnet Mount) உடன் வரும் என்று கூறப்படுகிறது. இதுவும் கூட சமீபத்தில் அறிமுகமான கூகுள் பிக்சல் டேப்லெட்டில் (Google Pixel Tablet) இருந்து பெறப்பட்ட ஒரு யோசனையை போலவே தெரிகிறது. ஆகமொத்தம் ஆப்பிள் நிறுவனமானது கூகுளிடம் இருந்து நிறைய விஷயங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
இதற்கிடையில் வருகிற ஜூன் 5 ஆம் தேதி நடக்கும் ஆப்பிளின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டின் (Apple Worldwide Developers Conference) போது ஆப்பிள் நிறுவனமானது ஐஓஎஸ் 17-ஐ வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேட்டஸ்ட் ஓஎஸ் வெர்ஷன் ஆனது சில நல்ல மேம்பாடுகளை கொண்டுவரும் என்றும் குர்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








