க்ரீன் எனர்ஜியில் பல மில்லியன் டாலர் முதலீடு செய்த ஆப்பிள் நிறுவனம்.!

|

தற்போது உலக அளவில் கிரீன் எனர்ஜி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகின்றது. இயற்கை நன்கொடியாக கொடுத்த ஆற்றல்களில் இருந்து மின்சாரம் தயாரிக்க உலக அளவில் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றது.

க்ரீன் எனர்ஜியில் பல மில்லியன் டாலர் முதலீடு  செய்த  ஆப்பிள் நிறுவனம்.

சுற்றுச்சூழலுக்கு உலகந்த முறையில் எந்த பாதிப்பும் இல்லாமல் மின்சாரம் தயாரிக்க ஏராளமான நிறுவனங்கள், போட்டி போட்டு வருகின்றன. இதில் ஆப்பிள் நிறுவனம் ஒன்றாக இருக்கின்றது.

கிரீன் எனர்ஜிக்கு முக்கிய காரணி:

கிரீன் எனர்ஜிக்கு முக்கிய காரணி:

சூரிய ஆற்றலே தற்போது கிரீன் எனர்ஜிக்கு முக்கிய காரணியாக கருத்தப்படுகின்றது. சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதனால் அதிகளவில் பயனடையவும் முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சுற்றுசூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

சர்வதேச சோலார் கூட்டமைப்பு:

நரேந்திர மோடி, இயற்கை வளங்களைக் காக்க சூரிய சக்தியை உலக நாடுகள் பயன்படுத்த வேண்டும் என சர்வதேச சோலார் கூட்டமைப்பு என்று ஒன்றை துவங்கினார். இதில் பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த கூட்டமைப்பின் மூலம் சூரியன் உதிக்கும் நாடுகளில் சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது வருகின்றது.

இந்த கூட்டமைப்பில் இதுவரை 121 நாடுகள் இணைந்துள்ளன. இதற்காக பிரதமர் மோடிக்கு சாம்பியன்ஸ் ஆப்தி எர்த் விருதும் கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அறிக்கை:

ஆப்பிள் நிறுவனம் அறிக்கை:

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 1 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

300 மில்லியன் டாலர் முதலீடு :

300 மில்லியன் டாலர் முதலீடு :

சூரிய சக்தியிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டத்தை சீனாவில் நிறுவ இருக்கின்றது. இதற்கக ஆப்பிள் நிறுவனம் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்கின்றது.

4 ஜிகா வாட்ஸ் மின்சாரம்:

4 ஜிகா வாட்ஸ் மின்சாரம்:

சோலார் பேனல்கள் அமைத்து சீனாவில் 1 ஜிகா வாட்ஸ் புதுப்பிக்க கூடிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய இருக்கின்றது. மேலும் 2020ம் ஆண்டில் 4 ஜிகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple company that invested millions of dollars in green energy : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X