Home
News

சீனர்களின் சிம் கார்டில் கைவைத்த ஆப்பிள்.. இந்த டெக்னாலஜி எங்ககிட்டயே இல்லீயே.. ஆடிப்போன மொபைல் மார்க்கெட்!

ஆப்பிள் நிறுவனமானது அதன் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களில் ஒன்றான ஐபோன் ஏர் (iPhone Air) மாடலை கொண்டு சீனர்களின் சிம் கார்டில் "கைவைத்து" உள்ளது. அதாவது சீனர்கள் இனிமேல் எப்படி சிம் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் என்பதை ஒட்டுமொத்தமாக மாற்றி உள்ளது.

கூடவே "இவ்ளோ நாள் - இந்த டெக்னாலஜி எங்ககிட்டயே இல்லீயே" என்று சீன மொபைல் மார்க்கெட்டை வாய்ப்பிளக்கவும் வைத்துள்ளது. அப்படி என்ன செய்துள்ளது? என்றால் - ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் ஏர் மாடலை சீனாவில் அறிமுகம் செய்ததன் மூலம் சீனாவிற்கு முதல் முறையாக இசிம் (eSIM) தொழில்நுட்பத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்துள்ளது.

சீனர்களின் சிம் கார்டில் கைவைத்த ஆப்பிள்!

சீனா மொபைல் (China Mobile), சீனா யூனிகாம் (China Unicom) மற்றும் சீனா டெலிகாம் (China Telecom) ஆகியவற்றை உள்ளடக்கிய "வணிக சோதனையின்" ஒரு பகுதியாக கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஐபோன் ஏர் மாடல் ஆனது சீனாவின் தொலைத்தொடர்பு வளர்ச்சியில் ஒரு முக்கியமான திருப்புமுனையை குறிக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே ஐபோன் ஏர் விற்று தீர்ந்துவிட்டது. ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஐபோன் ஏர் மாடல் ஆனது ரீடெயில் கடைகளில் தற்போது கையிருப்பில் கூட இல்லையாம். மற்ற சந்தைகளில் "கிட்டத்தட்ட" கண்டுகொள்ளவே படாத ஐபோன் ஏர் மாடல் ஆனது சீனாவில் ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சியாக மாறி இருப்பது சுவாரசியம்.

ஐபோன் 17 ஏர் மாடலின் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 சீரீஸ் மாடல்களுடன் சேர்த்து ஆப்பிளின் புதிய ஐபோன் ஏர் மாடல் மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது: ஸ்கை ப்ளூ, லைட் கோல்ட், கிளவுட் ஒயிட் மற்றும் ஸ்பேஸ் பிளாக்.

பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கு அறிமுகமானது. அடுத்ததாக உள்ள 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,900 க்கும் மற்றும் கடைசியாக உள்ள 1டிபி ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது கடந்த 2025 செப்டம்பர் முதல் வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 17 ஏர் மாடலின் விரிவான அம்சங்கள்: இது ஆப்பிள் நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் மாடல் மட்டுமல்ல; ஒரு இசிம்-ஒன்லி மாடலும் ஆகும். அதாவது இசிம் ஆதரவை மட்டுமே கொண்டிருக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.5-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது 3,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் ப்ரோமோஷன் (ProMotion) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது

ஐபோன் ஏர் மாடல் ஆனது ஏ19 ப்ரோ சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இதில் சிக்ஸ்-கோர் சிபியு, சிக்ஸ்-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவைகள் அடங்கும். இது இரண்டாம் தலைமுறை டைனமிக் கேச்சிங்கையும் கொண்டுள்ளது, இதன் விளைவாக அதிகரித்த மாத் ரேட்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த இமேஜ் சம்மரி ஏற்படுகிறது. இந்த போன் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களுக்கான ஆதரவுடனும் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை. ஐபோன் ஏர் மாடலில் சிங்கிள் 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது. இது சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எப்/1.6 அபெர்க்ஷர் மற்றும் 2எக்ஸ் டெலிஃபோட்டோ திறன்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், மற்ற ஐபோன் 17 மாடல்களைப் போலவே 18-மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ் கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஐபோன் ஏர் மாடலின் பேட்டரி விவரக்குறிப்புகளை ஆப்பிள் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இது "நாள் முழுவதும்" பேட்டரி லைஃப்பை வழங்குவதாகவும், ஒரே சார்ஜில் 27 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மெங்கும் 30 நிமிட சார்ஜிங்கில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Changed How China Uses SIM Cards Forever brought eSIM technology to China via iPhone Air
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X