கதவை உடைச்சு உள்ள போனாங்க.. இதுதான் என் அப்பா உயிரை காப்பாற்றியது.. நேர்காணலில் Tim Cook உருக்கம்!
ஒரு பெர்சனல் இன்டர்வியூவில், ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக் (Tim Cook), தனது தனிப்பட்ட வாழ்க்கை, அவரது தினசரி வழக்கங்கள், காலை உணவுக்கு அவர் என்ன சாப்பிட விரும்புகிறார், அவர் தனது நாளை எவ்வாறு தொடங்குகிறார், அவருக்கு பிடித்த உணவகம் எது என்பது பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
(Table Manners with Jessie and Lennie) டேபிள் மேனர்ஸ் வித் ஜெஸ்ஸி மற்றும் லெனி வேருக்கு டிம் குக் அளித்த பேட்டியானது, நேற்று (ஜனவரி 15) ஒளிபரப்பப்பட்டது. நினைவூட்டும் வண்ணம் இந்த நேர்காணல் கடந்த 2025 டிசம்பர் மாதத்தில், டிம் குக் இங்கிலாந்துக்கு சென்று இருந்த போது பதிவு செய்யப்பட் நேர்காணல் ஆகும்.

இந்த நேர்காணலில் டிம் குக், தனது குடும்பத்தை பற்றி மிகவும் சுவாரஸ்யமான மற்றும் தனிப்பட்ட விஷயம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக், பல சந்தர்ப்பங்களில் ஆப்பிள் வாட்ச் ஆனது ஒருவரின் வாழ்க்கையை காப்பாற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து மக்கள் தனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பும் போதும், இதுபோன்ற சம்பவங்களை பற்றி படிக்கும்போது தான் உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும் இருப்பதாக கூறினார். டேபிள் மேனர்ஸ் நேர்காணலின் போது, உங்களுடைய ஆப்பிள் வாட்சில் மெடிக்கல் அலெர்ட் உள்ளதா என்று டிம் குக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது
அதற்கு அவர், என்னுடைய ஆப்பிள் வாட்சில் (Apple Watch) மெடிக்கல் அலெர்ட் இல்லை. ஆனால் என் தந்தையுடைய ஆப்பிள் வாட்சில் உள்ளது. அவர் தனியாக வசித்து வந்தார். அவர் உயிருடன் இருந்தபோது ஒருநாள் அவர் வீட்டிற்குள்ளே விழுந்து விட்டார். ஆப்பிள் வாட்ச் ஆனது அக்ஸலோமீட்டரின் காரணமாக அணிந்து இருப்பவரின் வீழ்ச்சியை கண்டறியும் திறன் கொண்டது. அதுதொடர்பான உடனே வாட்ச்சை அணிந்து இருப்பவரின் குடும்பத்தினருக்கும், அவசர உதவிக்கும் அறிவிப்பை அனுப்பும்.
என் தந்தை கீழே விழுந்ததும், ஆப்பிள் வாட்ச் ஆனது அதை அவசர சேவைகளுக்கு அறிவித்தது. அவரச உதவி செய்யும் குழுவினர் வீட்டின் கதவை தட்டும் போது, என் தந்தையால் பதில் அளிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் கதவை உதைத்து உள்ளே நுழைந்தார்கள். அந்த நேரத்தில் அவர் சுயநினைவில் இல்லாததால் அவர்கள் செய்தது உண்மையிலேயே ஒரு நல்ல விஷயம் தான்!
இந்த கதையை கேட்கும் எவருமே.. தனது உயிரை காப்பாற்றிய ஒரு தயாரிப்பை உருவாக்கிய நிறுவனத்தில் தனது மகன் பணிபுரிவதை நினைத்து அந்த தந்தை பெருமைப்படுவார் என்று நினைப்பார்கள். ஆனால் பெற்றோர்கள் அப்படி இருபிப்பதில்லை என்றும், என் தந்தை கதவின் மீது தான் கவனம் செலுத்தினார். வீட்டின் கதவை உடைத்ததை நினைத்து அவர் மிகவும் வேதனை அடைந்தார் என்றும் டிம் குக் கூறியுள்ளார்.
மேலும் இந்த நேர்காணலின் போது, குக் தனது நாளை காலை 5.00 மணிக்கு முன்னதாகவே தொடங்குவதாகவும், அமைதியான அதிகாலை நேரத்தில் இமெயில்களுக்கு பதிலளிக்கும் வழக்கத்தையும் வெளிப்படுத்தினார். மேலும் அவர் வாரத்தில் 4 நாட்கள் ஆப்பிள் பார்க்கில் இருந்து வேலை செய்வதையும், வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்வதையும் கூட பகிர்ந்துகொண்டார்
மேலும் டிம் குக் - சார்டோனே வைன், டார்க் சாக்லேட் மற்றும் ஹைக்கிங் ஆகியவைகளை தனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்கிற பட்டியலில் வைத்து உள்ளதாகவும் கூடினார். மேலும் அவர் தேசிய பூங்காக்களுக்கு அடிக்கடி செல்வதையும், அவர் சமீபத்தில் ஸ்லோவேனியாவில் உள்ள குகைக்கு சென்றதையும் பகிர்ந்து கொண்டார்.
உணவு தொடர்பான பகிர்தலில், அவர் மீன், முந்திரியை விரும்பி உண்ணுவதையும் மற்றும் பாலோ ஆல்டோவில் உள்ள எத்தலின் ஃபேன்சியில் உணவருந்துகிறார் என்பதையும் வெளிப்படுத்தினார். கடைசியாக தனது பெஸ்ட் மீலில் ஹமாச்சி க்ரூடோ, பிரான்சினோ, ப்ரோக்கோலினி மற்றும் சாக்லேட் இனிப்புகள் இருக்கும் என்றும் பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications