Apple CEO டிம் குக் சொன்ன ரகசியம்: டபுள் மடங்கு லாபம் "எல்லா புகழும் இந்தியர்களுக்கே"

|

இந்தியர்கள் அதிக ஐபோன்களை வாங்குவதால் ஆப்பிள் வருவாய் இரட்டிப்பாகிறது என தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். இதை கேட்கும் போது சற்று ஆச்சரியமாக தான் இருக்கும். ஆனால் இது வெறும் தகவல் இல்லை, இதை கூறியவர் ஆப்பிள் சிஇஓ என்பது இங்கு கவனிக்கத்தக்க ஒன்று.

வருவாய் வளர்ச்சியில் ஆப்பிள்

வருவாய் வளர்ச்சியில் ஆப்பிள்

ஆப்பிள் 2022 இன் ஏப்ரல் - ஜூன் காலாண்டிற்கான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. இதில் கடந்த ஆண்டை விட நிறுவனம் 2 சதவீதம் அதிக வருவாய் ஈட்டி இருக்கிறது.

அதாவது ஆப்பிள் நிறுவனம் 83 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த நாடுகளில் இந்தியாவும் பிரதான ஒன்று என ஆப்பிள் சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இரண்டு மடங்கு அளவு வருவாய்

இந்தியாவில் இரண்டு மடங்கு அளவு வருவாய்

பிரேசில், இந்தோனேஷியா மற்றும் வியட்நாமில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றிருக்கிறது. அதே நேரத்தில்
இந்தியாவில் இரண்டு மடங்கு அளவு வருவாய் அதிகரித்துள்ளது என ஆப்பிள் சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் சிஇஓ மகிழ்ச்சியாக இல்லை

ஆப்பிள் சிஇஓ மகிழ்ச்சியாக இல்லை

இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற சில குறிப்பிடத்தக்க புவியியல் பகுதிகளில் தொடர் செயல்பாட்டில் இருக்கிறோம், அங்கெல்லாம் நன்றாக செயல்பட்டு வருகிறோம்.வளர்ந்து வரும் சந்தைகளை பொறுத்தவரை வருவாய் அளவில் ஆப்பிள் சாதனை படைத்திருக்கிறது என டிம் குக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு நடந்தும் ஆப்பிள் சிஇஓ மகிழ்ச்சியாக இல்லை என்றால் நம்ப முடிகிறதா?. அதற்கு நியாயமான காரணம் இருக்கிறது.

ஐபோனை தவிர பிற ஆப்பிள் தயாரிப்புகளின் நிலை

ஐபோனை தவிர பிற ஆப்பிள் தயாரிப்புகளின் நிலை

மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை ஐபோன் தான் பெற்றிருக்கிறது. ஆப்பிளின் பிற அனைத்து சாதனங்களும் வீழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

ஐபோனை தவிர பிற ஆப்பிள் தயாரிப்புகள் கடந்த காலாண்டை விட குறிப்பிடத்தக்க வகையில் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஐபோன்கள் அதிகளவு விற்பனையை பதிவு செய்திருக்கிறது. பிற ஆப்பிள் தயாரிப்புகளான iPads, AirPods மற்றும் Watch ஆகியவை வருவாய் அடிப்படையில் சரிவை சந்தித்திருக்கிறது.

வருவாய் முன்னேற்றத்துக்கான காரணம்

வருவாய் முன்னேற்றத்துக்கான காரணம்

ஐபோனின் வருவாய் ஆண்டுக்கு 39.5 பில்லியன் டாலரில் இருந்து 40.6 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது.

"தயாரிப்பு தரம் மற்றும் தயாரிப்புக்குள் இருக்கும் புதுமைதான் இதை முன்னேற்றி இருக்கிறது" என வருவாய் முன்னேற்றத்துக்கான காரணமாக டிம்குக் கூறினார்.

அதீத வளர்ச்சியில் ஆப்பிள்

அதீத வளர்ச்சியில் ஆப்பிள்

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உள் உற்பத்தி செய்வதன் காரணமாக இந்த வளர்ச்சி தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் 2022 இன் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மட்டும் இந்தியாவில் 12 லட்சத்துக்கும் அதிகமான ஐபோன்களை விற்றிருக்கிறது. இதன்மூலம் ஆப்பிள் கடந்த ஆண்டை விட 94 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இந்தியாவும்., இந்தியர்களும் காரணம்

இந்தியாவும்., இந்தியர்களும் காரணம்

சந்தை நுண்ணறிவு நிறுவனமான CyberMedia Research (CMR) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்கள் அதிகளவில் விற்பனையாகி ஆப்பிள் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மட்டும் இந்தியாவில் 12 லட்சத்துக்கும் அதிகமான ஐபோன்களை விற்றிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் விற்பனையான 12 லட்சம் ஐபோன்களில் 10 லட்சம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சாதனை

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சாதனை

"அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில், கொரியா மற்றும் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சாதனை படைத்துள்ளோம்" என Apple CFO Luca Maestri கூறினார்.

மேலும் வாடிக்கையாளர்கள் திறமையை ஈர்ப்பதற்கும் தக்க வைத்துக் கொள்வதற்குமான ஒரு உத்தியாக ஆப்பிள் தொடர்ந்து இதற்கு அதிகளவில் முதலீடு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகளவு விற்பனையான ஆப்பிள் ஐபோன்கள்

அதிகளவு விற்பனையான ஆப்பிள் ஐபோன்கள்

வருவாய் இரண்டு மடங்கு அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக ஐபோன் 13 இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனு 13 க்கு பல புகழ் இருக்கிறது.

ஏப்ரல் மாதத்துக்கான Counterpoint அறிக்கையில் இதுகுறித்து வெளியான தகவலை பார்க்கலாம். இதில் பிற தொழில்நுட்ப நிறுவனங்களை விட ஆப்பிள் அதிக போன்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதிகளவு விற்பனையான போன்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் பிரதான இடத்தை பிடித்திருக்கிறது.

தொடர்ந்து முதலிடத்தில் ஆப்பிள் ஐபோன்கள்

தொடர்ந்து முதலிடத்தில் ஆப்பிள் ஐபோன்கள்

உலகளவில் அதிகம் விற்பனையாகும் போன்களின் பட்டியலில் ஆப்பிள் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. Counterpoint வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிற தொழில்நுட்ப நிறுவனங்களை விட ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் அதிக மொபைல்களை விற்றிருக்கிறது.

இந்த பட்டியலில் சியோமி மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களும் அடங்கும். கடந்த ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் தான் முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஐபோன் 13 மேக்ஸ் மற்றும் ஐபோன் 13

ஐபோன் 13 மேக்ஸ் மற்றும் ஐபோன் 13

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐபோன் 13 மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 ஆகியவை அதிகம் விற்பனையான மொபைல்கள் ஆகும். 2022 இன் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையாகும் மொபைல்களும் இதுதான். இந்த பட்டியலில் மொத்தம் ஐந்து ஐபோன் மாடல்கள் இடம்பெற்றிருக்கிறது.

வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு

வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு

அதிகம் விற்பனையான ஐபோன் மாடல்களின் பட்டியலில் மீதமுள்ள மொபைல்கள் குறித்து பார்க்கையில், அது iPhone 13 Pro, iPhone 12 மற்றும் iPhone SE 2022 ஆகும். ஐபோன் எஸ்இ ஐபோன் மதிப்பீட்டாளர்கள் மத்தியில் நல்ல மதிப்பீட்டை பெறவில்லை என்றாலும் அதன் விலை மற்றும் அம்சங்கள் காரணமாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple CEO Tim Cook Says Revenues Doubled in india and More Iphones sells

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X